வெள்ளி, 27 ஜனவரி, 2012

ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்ட தியாகி!

இன்று (28.01.2011) மனிதநேய போராளி பழனிபாபா வீரமரணம் அடைந்த  நாள். அரசியல் தளத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டியவர்  பழனிபாபா இவரது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும்.

இவர் தனது எழுத்தாலும் பேச்சாலும் தொடர்ந்து ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்டு வந்தார். இவரை அனைத்து சமூக மக்களும் மதித்தனர். இவரது பெரும்பான்மையான நண்பர்கள் ஹிந்துக்களே. இவரது நெருங்கிய நண்பர்களில் பலரும் ஹிந்துக்களே.


இவர் கல்லூரி படிப்பை முடித்து முதுகலை மற்றும் முனைவர் (Phd.,) பட்டம் பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான மேடைகளில்  புயலென அழகான அற்புதமான புள்ளி விபரங்களுடன் பேசி பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின்  எழுச்சிக்கு வித்திட்டார். பாபா தனது வாழ்நாளில் பேசிய மொத்தக் கூட்டங்களின் எண்ணிக்கை 13201 ஆகும்.

ஆங்கிலத்தில் நல்ல பாண்டியத்தியம், அறிவுக்கூர்மை, இதனால் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களுக்கு நண்பராக இருந்து தமிழகத்தின் தலைமைச் செயலகத்தை ஒரு கலக்கு கலக்கியவர்.  இந்து பாஸிஸம், தமிழகத்தில் "தேசியம்" என்ற வடிவிலும், 'நாட்டுப்பற்று' என்ற போர்வையில் தலையெடுத்த போது அதற்கு தக்கபதில் அளித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் போர்வாளாக திகழ்ந்தார்.

இந்துத்துவா பயங்கரவாதத்தின்  அனைத்து செயல்பாடுகளுக்கும்  காரணமாக பிராமணர்களே இருக்கிறார்கள் வெளிப்படுத்தியதால் பழனிபாபா கொலை செய்யப்பட்டார். பாபா கோரமாகக் கொலைச் செய்யப்பட்ட அன்றும், அவர் ஒரு இந்து நண்பரின் வீட்டிலிருந்தே புறப்பட்டிருக்கின்றார். இது அவர் ஓர் யதார்த்தவாதி என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. இவர் ஆர்.எஸ்.எஸ். வெறியர்களால் கொல்லப்பட்டாலும் இன்றும் ஹிந்து முஸ்லிம் மக்களின் மனங்களில் நிற்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக