திங்கள், 28 நவம்பர், 2011

நல்லிணக்கம் குறித்து மஹந்த் ஆச்சார்ய சத்தியோந்திர தாஸ் மகராஜ்!

NOV 28,புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் முன்வைக்கும் லட்சியம் நிறைவேறியே தீரும் என ராமஜென்மபூமி கோயில் முக்கிய புரோகிதர் மஹந்த் ஆச்சார்ய சத்தியோந்திர தாஸ் மகராஜ் கூறியுள்ளார்.

ஞாயிறு, 31 ஜூலை, 2011

மண்சோறு சாப்பிட்டால் குழந்தை பிறக்கும்!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கத்தில் பரதேசி ஆறுமுக சுவாமி கோயில் உள்ளது. இங்கு 175ம் ஆண்டு ஆடி குருபூஜை விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உலக நன்மைக்காக சிறப்பு யாகபூஜை நடந்தது.

சனி, 30 ஜூலை, 2011

சுதந்திரம் என்பது நமது உரிமை PFI.

நெல்லை : 65-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாமெல்லாம் தயாராகி வருகிறோம் கடந்த பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக சுதந்திரத்தின் நினைவலைகளை நினைவு கூர்ந்து தியாகிகளை கவுரவித்து வருகிறது.

வெள்ளி, 29 ஜூலை, 2011

பாகிஸ்தான் அழகு தேவதை இந்திய உள்ளங்களை வென்றதா?

JULY 29, ரவிவர்மாவின் அந்தக்கால அல்ட்ரா மாடர்ன் பட்டுடை உடுத்திய காளிதேவி போன்ற ஷேப்பில் இருக்கும் பாரதமாதாவை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் வீடுகளுக்குச் சென்றால் தவறாமல் தரிசிக்கலாம்.

வெள்ளி, 4 மார்ச், 2011

நாடு செழிக்க, மக்கள் நலம்பெற தேர்ந்தெடுப்போம் இது போன்றவர்களை!!

1) (எம்.எல்.ஏ. நன்மாறன்): தமிழக எம்.எல்.ஏ. களுக்கு 50 ஆயிரம் சம்பளம் தருகிறது அரசாங்கம். அதை கட்சிக்கு கொடுத்துடுவேன். கட்சியின் முழு நேர ஊழியர் நான். அதற்காக கட்சி 5500 ரூபாய் சம்பளம் தருகிறது. அதுதான் குடும்ப ஜீவனத்துக்கு ஆதாரம் என்று எளிமையாய் சிரிக்கிறார். நன்மாறனுக்கு இரண்டு மகன்கள், ஒரு பையன் எம்எஸ்சி படித்துவிட்டு வேலை பார்க்கிறார். இன்னொருவர் பி.ஏ.பட்டதாரி. மனைவி சண்முக வள்ளி நன்மாறனின் உறவினர் பெண்! பாட்டி காலத்துல இருந்து ஒரு வீட்லகுடி இருந்தோம். அந்த வீட்ட வாங்கிக்கச் சொல்லி வீட்டு உரிமையாளர் கேட்டுக்கிட்டார். பத்து வருஷத்துக்கு முன்னாடி வாங்கினது.184 சதுரடி. சின்னதா ஒரு வீடு, இதுதாங்க நம்ம சொத்து’ என்கிறார்.

நன்மாறனின் எளிமை ஊர் அறிந்த விஷயம். தன்னுடைய மகனின் கல்லூரி சேர்ப்புக்காக சென்றபோது, கல்லூரி கேட்ட சின்ன தொகையை தயார் செய்து கொண்டு போவதற்குள், அட்மிஷன் முடிந்துவிட்டது. சிபாரிசு எதுவும் போகாமல் வேறு கல்லூரியில் தன் மகனைச் சேர்த்துவிட்டு விட்டார். யாரும் தன்னை குறை சொல்லிவிடக் கூடாது என்று அச்சப்படும் தன்மாறன் இந்த நன்மாறன்.

2) (எம்.எல்.ஏ. லீமாரோஸ்): அம்மா, அப்பா: கூலி வேலை மகள் எம்எல்ஏ. இவரைப் போலவே மிக சிம்பிள் திருவட்டாரு எம்எல்ஏ லீமாரோஸ். அவரைத் தேடிச் சென்ற போது ஒரு டீக்கடையில் தனியாக நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். யாரும் அவருடன் இல்லை. தனி மனுஷி! ஒருமுறை மக்கள் பிரச்சனைக்காக அரசு அலுவலகத்திற்குப் போன போது உள்ளே விட மறுத்துட்டாங்க. எம்.எல்.ஏ.ன்னா ஆடம்பரமாக பெரிய படையோட வரணும்னு எதிர்பார்க்குறாங்க அதிகாரிங்க. என்னோட அடையாள அட்டையைக் காட்டினதற்கு அப்புறம்தான் உள்ளேயே விட்டாங்க” என்கிறார்.

இந்தக் காலத்திலும் எம்எல்ஏவுக்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருப்பவர்.‘எங்க போனாலும் பஸ்தாங்க. பலமுறை எம்.எல்.ஏ. ன்னு நடத்துனர் கிட்ட சொன்னாக் கூட நம்ப மறுக்கிறாங்க. சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவள் நான். ஊர்ல என் அம்மாவும், அப்பாவும் கூலி வேலைக்குப் போறாங்க. இந்த மக்கள் என்னை மாதிரியான ஒரு ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவளை ஏற்றுக் கொண்டாங்க இல்லையா? அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்’ என்று சொல்லும் லீமாரோஸ் பணபலம் இல்லாமல் வெற்றி பெற்ற எம்எல்ஏ.

‘உங்களுக்கு என்று உள்ள சொத்து என்ன?’ என்றால், பெரியதாக சிரித்தவர். ‘ஒன்றுமில்ல. 2002ல் இருந்து மூன்று மாசத்துக்கு ஒருமுறை 359 ரூபாய் பிரீமியம் கட்டுற மாதிரி ஒரு எல்ஐசி பாலிசி போட்டேன். அதான் என் சொத்து’ என்று நம்மை பதற்றப்பட வைக்கிறார்.
கட்சி இவருக்கு சம்பளமாக கொடுப்பது மாதம் 4 ஆயிரம்! “சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வரும்போது கூட ரயிலில் இரண்டாம் வகுப்புலதான் வருகிறேன். ஏ.சி. கோச்ல வரலாமே என்று ரயில் பரிசோதனை அதிகாரிகள் கேட்கிறார்கள். எந்த கிளாஸ்ல வந்தா என்ன சார்? எல்லா ரயிலும் சென்னைக்குதானே வருகிறது?” என்று சொல்லும் லீமா ரோஸ், நன்மாறன் மாதிரியான எம்எல் ஏக்களை அடுத்த ஆட்சியில் மக்கள் கௌரவிப்பார்களா?

நன்றி: கடற்கரய்