புதுடெல்லி JAN 24:டெல்லியில் வசித்துவந்த முஸ்லிம் இளைஞரை கைது செய்தது குறித்து விளக்கம் அளிக்க கோரி தேசிய சிறுபான்மை கமிஷன் மஹராஷ்ட்ரா அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவுக்கு தகவல் அளிக்கும் நகீ அஹ்மத் என்பவரை போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டுகளை வாங்கினார் என குற்றம்சாட்டி மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.



