சனி, 27 மார்ச், 2010

ஹிந்து சாமியார் ஓஷோ ராஜனீஷ் ஒரு பார்வை.


1981-ம் ஆண்டு. மருத்துவத்துக்காக அமெரிக்கா சென்ற ரஜனீஷ் , சீடர்களின் அன்புக்கு இணங்க ஆசிரமம் தொடங்கி அங்கேயே தங்கினார். ரஜனீஷின் புரட்சிக் (கிறுக்கு தனமான) கருத்துகளால் விரைவிலேயே ஆசிரமம் புகழடைந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கினர். ‘ரஜனீஷ்புரம்’ எனப் பெயரிடப்பட்ட ஆசிரமத்தில் வீடுகள், தியான மண்டபங்கள்,சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் தொடங்கப்பட்டு, குட்டியாக ஒரு விமான நிலையமும் ஏற்படுத்தப்பட்டது. பரிசுகளாக வந்த 93 ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் தினம் ஒன்றைப் பயன்படுத்திய ரஜனீஷ் , ஒரு தனி ராஜாங்கமே நடத்திக்கொண்டு இருந்தார். (நம்ம சாமியாருங்க எல்லாருமே இப்படிதான் போல... ஹீ...ஹீ... அமெரிக்க சனமும் எங்கள மாதிரிதான்... என்டுறதுல ஒரு சந்தோஷம்... :D)

தங்களின் சொத்துக்களை ஆசிரமத்துக்கு எழுதிவைத்து ரஜனீஷிடம் தஞ்ச மடையும் அமெரிக்கர்கள் அதிகரிக்கவே அதிர்ச்சியடைந்த அமெரிக்க அரசு, ஆசிரமத்தை முடக்கும் வேலைகளில் இறங்கியது. ரஜனீஷின் ஆசிரமத்தில் 1984-ம் வருடம் ஆயிரக்கணக்கான சீடர்கள் தற்கொலைக்கு முயன்றதாக பொய்க்குற்றச் சாட்டைப் பரப்பியது. அதே நேரம், ஆசிரம நிர்வாகி ஷீலா பெரும் சொத்துக்களுடன் தலைமறைவாகிவிடவே, ஆசிரமத்துக்குள் நுழைந்தது போலீஸ் ‘அமெரிக்க அரசு சதிவலை பின்னுகிறது, தப்பிச் செல்லுங்கள்’ என்று சீடர்கள் ரஜினீசிடம் கெஞ்சினார்கள். அத்தனை நாளும் சீடர்களுக்கு போதித்த பிரச்னைகளைக் கண்டு விலகி ஓடாதீர்கள்... எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்’ என்ற மந்திரத்தையே உரக்கச் சொன்னார் ரஜனீஷ்.ஆசிரமத்தில் ஊழலும், விசாவில் மோசடியும் இருப்பதாக ரஜனீஷை கைது செய்துவலுக்கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றியது அமெரிக்க அரசு.
(இது தான் அமெரிக்க இப்படி இருக்குது... நாம...)

1931-ம் ஆண்டு மத்தியப் பிரேதசத்தில் குச்வாடா என்ற சிறிய கிராமத்தில் ஜெயின் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ரஜனீஷ் சந்திரேமாகன். ‘ஏழாவது வயதில் மரணமைடந்து விடுவார்’ என ஜோசியர் கணிக்கவே, பயந்துபோன பெற்றோர், அரை பாட்டி வீட்டுக்கு அனுப்பினர். ஏழு வயதுவரை சுதந்திரப் பறவையாகத் திரிந்தவருக்கு இனி மரணம் வராது என ஜோதிடர் சொன்னபிறகே படிக்கவைத்தனர்.

1953-ம் வருடம் தத்துவம் படித்தபோது, தன்னிடம் ஒரு தனித்துவம் இருப்பதாக நினைத்து கொண்ட ரஜனீஷ், பிறகு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்ததும், சிறு கூட்டத்தினரிடம் பேசத் தொடங்கினார். அந்த வட்டம் விரிவடையவே, வேலையை விடுத்து, ‘ஹிந்து பகவான் ரஜனீஷ் ’ ஆக மாறி மும்பையிலும் பின்னர் பூனே விலும் ஆசிரமம் அமைத்துப் பரபரப்பாகச் செயல்படத் தொடங்கினார்.ஹிந்து மதம் செக்ஸுக்கு அதிகக் கட்டுப்பாடுகள் விதித்தபோது, ‘செக்ஸை ஒரு பிரச்னையாக நினைத்து விலகி ஓடாதீர்கள். அதனை முழுமையாக அனுபவித்து வெற்றிகொள்ளுங்கள்’ என்று ரஜனீஷ் சொன்னது இந்தியா வெங்கும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியது. ‘செக்ஸ் சாமியார்’ என்ற பெயர் சூட்டி, கடுமையாக‌ விமர்சித்தனர். (ம்.. அதே தனித்துவம். இப்போது கூட இதே டெக்னிக்தான்..)

இந் நேரம் கடுமையான முதுகுவலியும் சர்க்கரை நோயும் ஏற்படவே, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார், அங்கே மக்களது(முட்டாள்களின்) ஆதரவுடன் ஹிந்து ஆன்மிகப் புரட்சியை உண்டாக்கவே மறுபடியும் நாடு கடத்தப்பட்டார். செக்ஸ் புரட்சியாளர், போதை அடிமை என அமெரிக்கா திட்டமிட்டு வதந்தி பரப்பியிருந்ததால், சுற்றுலா விசாவில் ஜேர்மனி போன ரஜனீஷ் , துப்பாக்கி முனையில் நாடு கடத்தப்பட்டார். முதலில் குடியுரிமை வழங்கிய உருகுவே அரசாங்கம் அமெரிக்காவின் கடன் மற்றும் பொருளாதாரத் தடை மிரட்டலால்
ரஜனீஷிக்கு வழங்கிய குடியுரிமையைத் திரும்பப் பெற்றது.
(ஆ..ஊன்டா.. பொருளாரதடையை கைல எடுத்துடுவாங்க... ஆனா... சீனாட்ட... :P..P )

அதனால், 1987-ம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி பூனே ஆசிரமத்தில் பணியைத் தொடர்ந்தார். ரஜனீஷ் என்ற பெயரை, ‘ஓஷோ’ என்று மாற்றி, ‘வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள், பிரச்னைகளைக் கண்டு விலகி ஓடினால் அது இன்னும் பெரிதாகும். அதனால், எதிர்த்து நின்று வெற்றி பெறுங்கள்’ என்று தினமும் ஒரு வேற்று வேதாந்தத்தை போதித்து பிரசங்கமும் தியானமும் நடத்தி மக்களிடம் நம்பிக்கை விதைக்க முனைந்தார்.
1990-ம் ஆண்டு நாடித்துடிப்பு குறையத் தொடங்கிய நேரத்தில், ‘மரணத்தில் இருந்து என்னை தப்பவைக்க நினைக்காதீர்கள், நான் அதனை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்’ என்று பெரிய தத்துவ முத்தை உதிர்த்து விட்டு ஹிந்து மதத்தின் பெயர் சொல்லி இந்த உலகில் ஏய்ட்ஸ் அதிகரிக்க காரணமாக இருந்து கடைசியில் பரிதாபமாக மருத்துவ சிகிச்சயை மறுத்து மரணமடைந்தார்.

ஞாயிறு, 21 மார்ச், 2010

எழுத்தாளர் ஜெயமோகனது பயனக்கட்டுரைக்கு ஒரு விளக்கம்.


ஹிந்துத்துவா சிந்தனை கொண்ட எழுத்தாளர் ஜெயமோகனது சுத்தம் குறித்த தத்துவப் பித்தத்தைப் பார்க்கும் போது இந்து முன்னணியின் புகழ் பெற்ற மற்றொரு பித்தம் நினைவுக்கு வருகிறது. “இந்துக்கள் கிறித்தவராகவோ, இசுலாமியராகவோ மதம் மாறினால் பாரதப் பண்பாடும் மாறிவிட்டது, பாரதத்தின் புனிதம் கேட்டுவிட்டது என்று கூச்சல் போடும் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கமும் அதன் துணை அமைப்பான இந்து முன்னணி அமைப்பும் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் அதிகாலையில் குளித்து வாசல் தெளித்து கோலமிட்டு, முற்றத்தில் இருக்கும் துளசி மாடத்தை சுற்றி வந்து வழிபாடு நடத்தும் இந்த பித்தத்தை சகல இந்துக்களுக்கும் பொருத்திப் பார்த்தால் பெரும்பாலானோர் இந்துக்கள் இல்லை என்றாகிவிடும்.

முதலில் முற்றம், துளசிமாடம் போன்றவையெல்லாம் இருக்க வேண்டுமென்றால் வீடும், வீட்டைச்சுற்றி விசலாமான இடமும் வேண்டும். இதிலேயே முக்கால்வாசி இந்துக்கள் அவுட். அப்புறம் மீனவர் குடிசை முன்பு கருவாடும், கோனார் வீட்டு முன்பு ஆட்டுப்புழுக்கைகளும், கறிக்கடை தேவர் வீட்டு முன்பு உப்புத் துண்டமும், சென்னை சேரி மக்களின் குடிசை முன்பு குழந்தைகளின் கக்காவும், விவசாயி வீட்டு முன்பு சாணமோ, தானியமோ இருக்கும். ஐயர் வீட்டு முன்புதான் துளசி மாடம் இருக்கும். உழைக்கும் இந்துக்களின் வீட்டை அவர்களது உழைப்பின் விளைபொருள் அலங்கரிப்பது இந்து முன்னணிக்கு மட்டுமல்ல ஜெயமோகனுக்கும் அருவருப்பாக இருக்கிறது.

சென்னையின் சேரிப்பகுதிகளில் மிகவும் நெரிசலான இடங்களில் பல இலட்சம் மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு வாழ்கின்றனர். 100, 200 சதுர அடிகளில் குடும்பங்கள் கூண்டில் அடைபட்ட கோழிகள் போல எல்லா வேலைகளையும் முடிக்கின்றனர். வீட்டின் இடத்தை பல விதமான சில்லறைப்பொருட்கள் ஆக்கிரமித்திருக்கும். சமைக்க, துணி துவைக்க, குளிக்க, படுக்க எல்லாம் ஒரே இடம்தான். ஒரு சேரியில் சில ஆயிரம் மக்கள் இப்படி வாழம் போது தெருவெங்கும் குப்பைகளும், கழிவு நீரும், எல்லாம் கலந்துதான் இருக்கும். திருமணப் பந்தல், சாவுக்கான பந்தல், விருந்துக்கான சமையல் எல்லாம் தெருவில்தான். பார்க்க ரணகளமாகத்தான் இருக்கும்.நகரங்களை ஒட்டி வாழும் மீனவர் குடிசைகளும் இப்படித்தான் இருக்கின்றன. விசாலமான கடல் சார்ந்த இடங்கள் இன்று அவர்களது பயன்பாட்டிற்கு இல்லை. இருக்கும் குடிசை கூட தனது பரப்பளவை சுருக்கிக்கொண்டேதான் வருகிறது.

நகரத்து சேரிகளில் இருக்கும் நெரிசல் உருவாக்கும் எல்லா துன்பங்களையும் சகித்துக் கொண்டு அந்த மக்கள் இந்தப் பாழாய்ப் போன நகரின் மேட்டுக்குடி வர்க்கத்தினருக்கு எல்லா சேவைகளையும் செய்கின்றனர். அந்த மக்களின் வாழ்விடத்தைப் பார்த்து குப்பைக் கூளமென்றும் அதற்கு மனப்பயிற்சி இல்லையென்றும் எக்காளமிடும் ஜெயமோகன் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தனிவீடுகட்டி வாழும் வாழ்க்கையை துறந்து விட்டு சென்னை வியாசர்பாடியில் ஒரு வருடம் வாழ்ந்து பார்க்கட்டும்.

சனி, 13 மார்ச், 2010

பேராசிரியர் டாக்டர் பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவினார்.


கருத்தம்மா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பெரியார்தாசன். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கடவுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாகயிருந்தவர். தனது பெயரையே நாஸ்திக சிந்தனையாளரான தந்தை பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற வார்த்தையை இணைத்துக் கொண்டவர்.


தமிழகத்தில் பிரபலமான பெரியார்தாசன் பல்வேறு மேடைகளில் சமூக சிந்தனை கருத்துக்களை பரப்பியவர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இஸ்லாத்தை பற்றி பலகாலமாக ஆய்வுச்செய்த பெரியார்தாசன் கடந்த வியாழக்கிழமை(மார்ச் 11) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா மையத்தில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.


தனது பெயரை அப்துல்லாஹ்(அல்லாஹ்வுக்கு அடிமை) என்று மாற்றிக் கொண்டார். இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டதைக் குறித்து டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) கூறியதாவது: "இவ்வுலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவனிடமிருந்து நேரடியாக இறக்கியருளப்பட்ட வேதத்தைக் கொண்டுள்ளது. நான் பல்வேறு மதங்களின் வேதங்களையும் ஒப்பீட்டு ஆய்வுச் செய்தேன். அதில் இஸ்லாத்தைத் தவிர மற்ற அனைத்து நூல்களுமே இறைவனிடமிருந்து நேரடியாக அருளப்பட்டது அல்ல. குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து எந்த வடிவில் முஹம்மது நபிக்கு அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதோ அதே வடிவில் இன்றும் உள்ளது. நான் நாத்திகக் கொள்கையின் மூலமாக இந்தியாவில் அனைவருக்கும் நன்றாக அறிமுகமானவன். இஸ்லாம்தான் இவ்வுலகிலும், மறுவுலகிலும் மனித இனத்திற்கு பொருத்தமான மார்க்கம் என்பதை புரிந்துக்கொண்டேன்." என்றார்.


டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) இன்று(மார்ச் 13) உம்ரா செய்வதற்காக புனிதஸ்தலமான மக்காவிற்கு செல்கிறார். பின்னர் மதீனாவும் செல்வார். அல்லாஹ் அவருடைய நல்லச் செயல்களை பொருந்திக் கொண்டு கடந்த கால பாவங்களை மன்னித்து நேரான வழியில் செலுத்துவானாக! என பிரார்த்திப்போம்.
நன்றி அரப் நியூஸ், மார்ச் 12, 2010

வியாழன், 11 மார்ச், 2010

ஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்!!

ஜெயேந்திரர் அறைக்குள் நித்யானந்தா திடீரென ஓடி வர, சன் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ஜெயேந்திரர் வெடுக்கென நிறுத்திவிட்டு ஐயோ நானில்ல நானில்ல சின்னவன்தான் அவன் என்னமோ பண்ணான் என்று பதறுகிறார். “அய்யோ நான்தான் ஸ்வாமி, நித்யானந்தா… காப்பாத்துங்க” என்று கத்துவதைப் பார்த்தபிறகு தெம்பாக நிமிர்ந்து உட்கார்ந்தார் ஜெயேந்திரர்.

ஜெயேந்திரன்: வாடா, வா, நான் வேற எந்தப் பக்கத்துலேந்து அருவா வருமோன்னு பயந்துண்டு இருக்கேன். நீ என்னடான்னா இப்படி ஓடி வர்ற! அது சரி டி.வி, பத்திரிக்கைலாம் நார்ற மாதிரி என்னடா இப்படி பண்ணிட்டே! அபிஷ்டு.

நித்யானந்தா: பெரியவா மன்னிக்கணும், அன்னிக்கு தீர்த்தம் கொஞ்சம் ஓவரா போயிடுச்சு, ஏதோ புத்தி கெட்டுட்டேன் பெருசு பண்ணாதிங்க, காப்பாத்தி வுடுங்க!

ஜெயேந்திரன்: தத்தி, இப்படியா பண்ணுவா! கதவத்திற காத்துவரட்டும்னு ஏதோ புத்திசாலித்தனமா கிறுக்கிண்டு கெடக்குறியேன்னு பாத்தேன், கடைசில கதவத் திறந்தா ரஞ்சிதால்ல வந்துட்டா ஹீ..ஹீ.. என் சமத்தல்லாம் பாத்தும் இப்படியா பப்ளிக் பாக்குற மாதிரி பண்றது! கிரகச்சாரம்! சரி சரி வுடு! ஆனானப்பட்ட விஸ்வாமித்திரனே அப்சரஸ்களை பாத்து அப்செட் ஆகுறப்ப,நீ ரஞ்சிதாவைப் பாத்தோன்னேயே இன்ஜின் ஜாம் ஆயிட்டே!

நித்யானந்தா: என்ன சாமி லோக்கலா பேசுறீங்க?

ஜெயேந்திரன்: பின்னே ஜகத்குருன்னா சான்ஸ்கிரீட்ல குழஞ்சு கான்கிரீட்ல புரளுவேன்னு பாத்தியா! பர்னசாலை குடிசைல ரிஷிபத்தினிகளோடும் விளையாண்டவா நாம், பைவ் ஸ்டார் ஓட்டல்ல பிஷி செட்யூல் நடிகையோடும் புரண்டவா நாம்! இதெல்லாம் ஒரு மேட்டரா போடா அசடு!

நித்யானந்தா: நல்லவேளை நான் கூட நடந்ததுக்கு வருத்தமோன்னு நெனச்சேன், இனிமே ஜாக்கிரதையா இருக்குறேன் ஸ்வாமி.

ஜெயேந்திரன்: என்ன ஜாக்கிரதையோ! என்ன யோக்யதையோ! என்னயே எடுத்தக்கோ! எவிடன்ஸ் இல்லாம காமா சோமான்னு பண்ணேனேனோ, என்னல்லாம் பாத்து என்னத்தக் கத்துண்டியோ மண்டு… மண்டு! என்ன தப்பு வேணாலும் பண்ணின்டு மூஞ்சை நமோ நாராயணான்னு வச்சிக்கத் தெரியாம என்ன சாமியார்டா நீ! என்னக் கூடத்தான் பேப்பர்ல எழுதுனா, டி.வி.ல காட்டுனா. அனுராதா ரமணன் சொன்னா, அவா சொன்னா, இவா சொன்னான்னு வந்துச்சே ஒழிய எவிடன்ஸ் கிளிப்பிங்ஸ் எதனாச்சும் வந்துச்சா? காரியத்துல நீட்னஸ் வேணும், சம்போகம் பண்றவாள்ளாம் சங்கராச்சாரி ஆக முடியாது! அதுக்கெல்லாம் ஷ்பெஷல் பொஷிஷன் வேணுண்டா அம்பி!

நித்யானந்தா: உண்மைதான் ஸ்வாமி, உங்கள கன்சல்ட் பண்ணாம கோடம்பாக்கத்து பக்கம் தல வச்சது தப்புதான்! இந்த விசயத்துல நீங்கதான் காப்பாத்தணும், உங்களதான் தெய்வமா நம்பி வந்துருக்கேன்.. பயமா இருக்கு!

ஜெயேந்திரன்: இதுக்கெல்லாம் பயப்படறதிலிருந்தே தெரியறது நீ ஒரு அப்ரன்டீசுன்னு, தோ பக்கத்துல இருக்குற சின்னவன் பண்ணாததையோ நீ பண்ணிட்ட! பல பொம்மனாட்டி வாழ்க்கையை பாழடிச்சிட்டு எதுவுமே நடக்காதது மாதிரி தேமேன்னு உட்கார்ந்திருக்கான் பாரு! இல்ல என்னப் போல வர்ற பொம்மணாட்டியை எல்லாம் கையை புடிச்சு இழுத்தியா! இதுக்கெல்லாம் பயந்தா காஷாயம் கட்ட முடியாதுடா அம்பி! என்ன நம்பி வந்துட்டீல கவலையை விடு.. ஏன் கெடந்து பயப்படற? வேண்ணா தோ வீடியோ பாத்துக்கோ, ரிலாக்ஸ் பண்ணிக்கோ.. தாகசாந்திக்கு பாரின் தூத்தம் இருக்கு, எடுத்துக்கோ வேற ஏதாவது ‘புஷ்பம்’ வேணும்னா கேளு நம்ப தேவநாதன் இப்ப வெளிலதான் இருக்கான், ப்ரீயா சப்ளை பண்றேன் வச்சுக்கோ… எக்காரணம் கொண்டும் தப்பு பண்ணறதுக்கு மட்டும் நம்பள மாதிரி சாமியார்லாம் பயப்படக் கூடாது! புரியர்தா? .. ரிலாக்ஸ்டா அம்பி.. ரிலாக்ஸ்.

நித்யானந்தா: நீங்க என்னமோ சாதாரணமா சொல்லிட்டீங்க, நக்கீரன்ல படமா போடுறான், சன் நியூஸ்ல பிட்டு படமாவே காட்டுறான்.. திரும்ப தொழில் பண்ண முடியுமோன்னு பயமா இருக்கு ஸ்வாமி!

ஜெயேந்திரன்: என்னமோ நக்கீரன்ல போட்டானாம், சன்னுல காட்டுனானாம்! படம் போட்டு காசு பார்க்க புவனேஸ்வரி, பிலிம் காட்டி கல்லா கட்ட ரஞ்சிதான்னு போவியா! கிடந்து பேத்துற.. என்னக் காட்டாத படமா.. இந்த மானம், வெட்கம், சூடு, சுரணையல்லாம் லோகத்துல இந்த மனுஷாளுக்குத்தான். நம்பள மாதிரி ஆளுக்கெல்லாம் “சுக்கில புத்தி சுகமோ பவ”டா! மொதல்ல அசமஞ்மாட்டம் உளறி கொட்றத நிறுத்து! என்னப்பாரு ஸ்டேசன்ல வச்சு கேட்டப்ப கூட வாயத் திறந்தேனோ! ஹீ…ஹீ..ன்னு சிரிச்சிண்டே மழுப்பினேன். சட்டம், இ.பி.கோல்லாம் சாதாரண லாட்ஜ் போட்டு பண்றவாளுக்குத்தான், நம்பள மாதிரி மடத்த போட்டு பண்றவாளுக்கு சட்டம் மல ஜலத்துக்கு சமன்டா! வெளிக்கி போக வாழை இலையே நறுக்கிக் கொடுத்தாண்டா போலீசு.. போவியா..!

நித்தியானந்தா: இல்ல ஸ்வாமி தொடர்ந்து நக்கீரன்ல…

ஜெயேந்திரன்: போட அசடு! சும்மா நக்கீரன், நக்கீரன்ட்டு, அவனும் நம்பள வச்சி நாலு காசு பாக்க வேணாமா! யார் அவுத்துப்போட்டாலும் அவனுக்கு காசு! என்ன வச்சிக் கூடத்தான் ஒரு ரெண்டு மாசம் சம்பாதிச்சான். கொறஞ்சா போயிட்டேன். இவ்ளோ எழுதுறானே, என்னைக்காவது அவன் நம்பள தூக்குல போடு, மடத்தை புடுங்குன்னு சொல்லிருக்கானா, படத்தை பிரண்ட்ல போடுன்னுதானே சொல்றான்.. என்ன இருந்தாலும் அவன் நம்ப ஆளுடா.. (கண்ணடித்து சைகை காட்டுகிறார்!)

நித்தியானந்தா: எவ்ளோ பத்திரிக்கைக்கு நாம விளம்பரம் கொடுத்திருப்போம், நம்ம எழுதுறத வச்சு சம்பாதிச்சிருப்பான் பிரச்சனைன்னு வந்தோன்ன யோக்கியனா நடிக்கிறாங்களே! என்ன உலகம் ஸ்வாமி இது!

ஜெயேந்திரன்: அட போடா, சதா இதையே பேத்திண்டு! குமுதம் நீ எழுதுற போஸ் போட்டு குந்தவச்சு சம்பாதிச்சன், நக்கீரனும் சன்னும் உன்ன படுக்க வச்சு சம்பாதிக்கறன்னு போவியா! என் கவலைல்லாம் கஷ்டப்பட்டு காரியம் பண்ணி கேஸ் ஆடறவா நாம, கடையப் போட்டு சி.டி. விக்கிறவா அவாளா! இந்த டிஸ்ட்டிரிப்பியூட் ரைட்ஸையாவது நமக்கு தர்றதில்லையோ, ஏமாத்திடறாளே! இந்து தர்மத்தோட ரைட்ஸை யாருக்கும் விட்டுத்தர முடியாதுன்னு நம்ப ராமகோபாலனை வச்சி என்ன பண்றேன் பாரு நீ!

நித்தியானந்தா: நம்ம சாரு கூட…

ஜெயேந்திரன்: யாருடா அவ? பாக்க நன்னா இருப்பாளா? வட நாட்டவளா?

நித்தியானந்தா: இல்ல சாமி சாரு நிவேதிதா, எழுத்தாளர், நம்ம மடத்தோட தீவிர விசுவாசி, அவர் புண்ணியத்துல தான் நம்ம குமுதம் மேட்டர்லேருந்து மிட்நைட் குவாட்டர் வரைக்கும் தடையில்லாம் போயிகிட்டிருந்தது… இப்ப அவர் பப்ளிக்கா என்ன திட்டி எழுதறார், ஆஸ்ரமத்துக்கு இதனால இமேஜ் போயிடுமோன்னு பயமா இருக்கு

ஜெயேந்திரன்: அடப்போடா இப்படி உலகம் தெரியாதவனா இருக்கியே? இவால்லாம் நம்மால பொழைக்கறவாடா… நாளைக்கே கரன்சி கடாட்சத்துக்காக மறுபடியும் பாராட்டி எழுதப்போறா.. இப்ப என்ன திட்டி எழுதாதவாளா? அதனால என்ன காஞ்சி மடம் என்ன கொலாப்ஸா ஆயிடுத்து.. இந்த மாதிரி பப்ளிசிடில்லாம் நமக்கு அசெட்றா அம்பி. இப்படியெல்லாம் நேஷ்னல் லெவல்ல நாலு பெரிய மனுஷா பார்வைக்கு போனாதானேடா நம்ம பொழைப்பும் ஓடும், ஏறுனது சன்னோட டீ.ஆர்.பி மட்டுமில்ல, ஞாபகம் வச்சுக்கோ.

நித்யானந்தா: இதெல்லாம் ஒரு பக்கம்னா, இந்து மக்கள் கட்சின்னு இன்னொரு குரூப் வேற கௌம்பிட்டான் ஸ்வாமி! என்னால இந்து மதத்துக்கே தீராத அவமானம்னு படத்தை போட்டு எரிக்கிறான், மடத்தப்போட்டு உடைக்கிறான்! பேசி ஆஃப் பண்ண ஏதாவது ரூட் இருந்தா சொல்லுங்களேன்.

ஜெயேந்திரன்: (ஹி..ஹி..ஹி.. பலமாக சிரித்துவிட்டு பக்கத்தில் முந்திரிப்பருப்பை அமுக்கும் சின்னவனைப் பார்த்து)ஏய்.. கேட்டியோ…என்னாலயும், உன்னாலயும் அவமானப்படுத்த முடியாத ஹிந்து மதத்தை இவன் பண்ணிட்டானாம்.. ரொம்ப ஆசைதான் இவனுக்கு…

நித்தியானந்தா: ஸ்வாமி என் நிலைமை புரியாம சிரிக்கிறீங்க!

ஜெயேந்திரன்: போடா தத்தி! கட்சின்னா நாலு கல்லு உடத்தான் செய்வான்! அப்பப்போ காசை விட்டெறிஞ்சின்னா, அவா ஏண்டா கல்ல விட்டெறியறா! நோக்கு சரியா டீல் பண்ணத் தெரியல, காட்டுறத காட்டுனா படியுறான். இப்ப ஊரே நாறுச்சு என்ன ஏதும் பண்ணாளோ!

நித்யானந்தா: எங்கிட்ட காட்டறதுக்கு பூணூல் இல்லியா ஸ்வாமி!

ஜெயேந்திரன்: இப்ப தெரியறதா, தல இருக்கறச்சே வால் ஆடப்படாது! (சின்னவன் உள்ளே சென்றதை உறுதி செய்து பார்த்தபடி) பேசாம சின்னவன் இல்லாத நேரமா ரஞ்சிதாவை இங்க தள்ளிட்டு வர்றதை வுட்டுட்டு, தானே ராஜா, தானே மந்திரின்னா இப்படித்தான். என்ன, பத்து பொம்பளயக் கெடுத்துருப்பியா… அதுக்குள்ள பரமஹம்சர்ன்னு பட்டம் வச்சிட்டா எப்படி? பட்டம் வச்சவன்லாம் பெரியவாளா ஆக முடியாது! படுக்கை விரிச்சவன்லாம் ஜெயேந்திரன் ஆக முடியாது! மண்டு, மண்டு!

நித்யானந்தா: தப்புதான் ஸ்வாமி! நீங்க வேற வதக்காதீங்க, பேரு கெட்டதைக் கூட வேற ரூட்ல சரி கட்டலாம்.. இந்து மதத்தையே கெடுத்துட்டேன்னு கோர்ட்டு, கேசுன்னு போயி பேலன்ஸ் போயிடுமோன்னு பயமா இருக்கு! தவிர போலிச்சாமியார்னு பேரு வந்துருச்சே! தொழில்ல கேரண்டியும், செக்யூரிட்டியும் இல்லாம வெளிநாட்டுக்காரங்க எப்படி முதல் போடுவாங்க இனிமே.. அத நெனச்சாதான் உத்திராட்சை உறுத்துது.

ஜெயேந்திரன்: ஏண்டா கெடந்து புலம்புற.. நிலம சீராகுற வரைக்கும் ரூட்ட காஞ்சிபுரத்துக்கு மாத்தி வுடு, அந்த ஒரு லோடு சந்தனக் கட்டய நம்ம மடத்துக்கு எக்ஸ்போர்ட் பண்ணு! கஞ்சா பொட்டலத்த விபூதிப் பொட்டல ஸ்டைல்ல நம்மகிட்ட எக்ஸ்சேஞ்ச் பண்ணு! இங்கே எவன் வர்றான் பாக்குறன்..

அத வுட்டுட்டு இந்து மதம் போலிச்சாமியார்னு இல்லாதது, பொல்லாதத நெனச்சு ஏன் புலம்புற.. மொதல்ல வாய மூடுறா அபிஷ்டு! எதுடா போலி? கேட்டுக்கோ பொம்மணாட்டியோட சரசமாடுறது, பரமாத்மா, ஜீவாத்மா ஒன்னு சேர தேகாத்மாக்கள சாந்தி பண்றது, லட்சம் மர்டர், பத்தாயிரம் ரேப், ஆயிரம் கனவு சீன், ஜாதிக்கேத்த நீதி இதாண்டா ஒரிஜினல் ஹிந்து மதம்! நான் சொல்றேண்டா.. ஹிந்து மதத்துக்கு என்ன விட அத்தாரிட்டி யார்ரா? அவா சொல்றா.. இவா சொல்றானுட்டு கிடந்து பேத்துற.. ஆதி சங்கரர் சௌந்தர்ய லகரி படிச்சிருக்க்கியோ… அந்த அம்பாளையே அவர் த்ரீ டைமன்ஷன்ல பாத்தார்! அவர் வர்ணிச்சுக் காட்டுனார், நாம வாழ்ந்து காட்டுறோம். இந்திரன் அகலிகையோட ஆம்படையான் வேஷத்துலேயே போய் அவளைக் கெடுத்தான் அதனால என்ன அவன் இமேஜ் கொறஞ்சா போனான்.

நம்ம ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பண்ணாத ஆலிங்கனமா.. உருவாத புடவையா? ஏன் அரியும், அரணும் சேர்ந்து அரிகரசுதன் அய்யப்பன்னு ஒரு புரொடக்ட்டே இருக்கு.. எக்ஸ்ட்ரீம்லி ஹிந்துமதமே ஒரு செக்ஸ்ட்ரீம்லிடா! நம்ப படைப்புக் கடவுள் ப்ரம்மா… ரெடிமேடா சரஸ்வதியை படைச்சு அவளை தானே பெண்டாண்டுட்டன்! இன்னும் எவ்ளவோ இருக்கு!… இதாண்டா ஒரிஜினல் ஹிந்துமதம்… ஹிந்து மதத்தின் இந்தத் தர்மங்களை கட்டிப்புடிச்சு காப்பாத்தறவன்தான் ஒரிஜினல் ஹிந்து சாமியார்! இத வுட்டுட்டு ஒழுக்கமா இருக்கணும், நேர்மையா இருக்கணும்னு, எவனாவது சொன்னா அவன்தாண்டா டூப்பு! அவன்தாண்டா போலிச்சாமியார்! புரியறதா…

தசரதனுக்கு பொம்மனாட்டி அறுபதினாயிரம், மகாபாரதத்துல அஞ்சு பேருக்கு ஒருத்தி.. போறுமா? இன்னும் வண்ட வண்டையா சொல்லலாம், தொண்டை காயறது, டேய் ஜலம் கொண்டாடா! அசமஞ்சம் இப்பவாவது புரியறதா.. இதான் ஹிந்துமதம், இதான் ஹிந்து தர்மம்… இத ஒழுங்கா கடைபிடிக்கிறவாதான் ஒரிஜினல் சாமியார்.. இதாண்டா மேட்டரே! சும்மா கேனத்தனமா உளறாம ஆக வேண்டியதப் பாரு!

நித்தியானந்தா: நல்லவேளை ஸ்வாமி நான் கூட பாதை மாறி போயிட்டோமோன்னு நெனச்சுகிட்டிருந்தேன். உங்களப் பாத்து சம்பாஷணை செஞ்சோன்னதான் மனசே தெளிவாச்சு.. என்ன இருந்தாலும்..

ஜெயேந்திரன்: இன்னும் ஏண்டா இழுக்குற… ஏன் பயந்து சாகுற.. நீ என்ன என்னை மாதிரி என்ன, அப்ளே டூ மர்டரா? இல்ல அட்டம்ப்ட் டூ ரேப்பா? எதுவுமில்ல.. அவளும் ஒரு கேசு.. நீயும் ஒரு கேசு… அவளா வந்தா…. நீயா போன.. சட்டப்படி யார் என்னடா பண்ண முடியும்? அதிகபட்சம் ரோட்ல கத்றவாளுக்காக ஒரு 420 போடுவா… கோர்ட்டுல கத்றவாளுக்காக பிராத்தல் கேஸ் ஐபிசி 371,372 போடுவா.. மத்தபடி நம்பள யாராவது அடிக்க வந்தா அவாள தூக்கி உள்ள போடுவா.. நீ வேண்ணா கோர்ட்டுக்கு போயிப்பாரு, நம்மள பாத்து ஜட்ஜே அவா கன்னத்துல போடுவா.. போடா டேய்! போடா!நாம் பாக்காத கேஸா… சங்கரா! சங்கரா!

நித்யானந்தா: ஸ்வாமி செக்சன்லாம் அத்துப்படியா பேசறத பாத்தா.. விட்டா நீங்களே வெளுத்து வாங்கிடுவீங்க போல இருக்கே…

ஜெயேந்திரன்: பீனல் கோடெல்லாம்… இந்த பூணுல் கோடுக்கு அடக்கம்டா அம்பி.. இந்த மாதிரி சப்ப மேட்டருக்கெல்லாம் நான் எதுக்குடா? பிராத்தல் கேசுக்குன்னே பேமஸ் நம்ப சுப்பிரமணிய சாமி.. அவனிருக்கான் பயப்படாதே! சிதம்பரம் கோயில்ல சரக்கடிச்சிட்டு சாமிக்கே பேக்போஸ் கொடுத்துண்டு குஜால் பண்ற தீட்சிதாளுக்கெல்லாம் அவன்தான் கேசாடறான்.. கேஸ் ரொம்ப சிக்கலாச்சுன்னா, நம்ம துக்ளக் சோ இருக்கானோல்யோ, அண்டர்கிரவுண்ட் டெண்டரெல்லாம் அவன் பார்ப்பான்.. நீ பயப்படவே தேவையில்ல.. கருணாநிதி காலையே சுத்திண்டு நம்ம எஸ்.வி.சேகர். இருக்கன். அவன விட்டு காத கடிச்சா போதும்.. ஒரு அறிக்கைக்கு மேல தாண்டிடாம பாத்துக்கலாம்.. பேசாம நா சிக்னல் கொடுக்கற வரைக்கும் அடக்கிண்டிரு.. அதுக்குள்ள வேற எவனாவது மாட்டுவன் உன் கேஸை மறந்துடுவா..

பொய்யில்லடா.. என்ன எடுத்துக்கோ கத கந்தலாகியும் இன்னும் பந்தல் போட்டு ஆசிர்வாதம் பண்ண கூப்புடுறா, பாதாறவிந்த்த்த சேவிக்கிறா… இதுல ஜோக் என்னான்னா, பசங்களுக்கு ஒழுக்கம், காண்டக்ட் சர்ட்டிபிகேட் கொடுக்க என்ன கூப்புடுறா.. ஒண்ணு தெளிவா புரிஞ்சுக்கோ.. நாம எவ்வளவு பேரு குடியக் கெடுத்தாலும் பயப்படறதுக்கு இங்க என்ன நக்சலைட் ஆட்சியா நடக்கறது.. எல்லாம் நாம சுவிட்சைத் தட்டுனா கண்ணடிக்கிற ட்யூப்லைட் ஆட்சிதான் .. பேசாம கட்டின பசுமாதிரி சைலன்டா இரு! பிளே எ வெயிடிங்க கேம், கம் பேக்.. கீப் கோயிங்!

நித்யானந்தா: என்னமோ நெனச்சிட்டு வந்தேன் பெரியவா, பெரியவாதான், பெரியவா அனுக்கிரஹம் என்னைக்கும் வேணும்…

ஜெயேந்திரன்: ஹி… ஹி… உன் வயசுடா என் சர்வீசு, மொதல்லயே வந்திருந்தா டிரெயினிங் பக்காவா இருந்திருக்கும்… சரி போகட்டும், அந்த ரூம்ல வேற ட்ரஸ், விக்கெல்லாம் இருக்கு.. காஞ்சி தேவநாதன் மாதிரி மேக் அப்லாம் மாத்திண்டு பாத்துடா பின்பக்கமா எஸ்கேப் ஆயிடு…. இனிமேலாவது சமத்தா இரு!!

(நித்யானந்தா கிளம்ப, பகவானே! இந்த ஹிந்து தர்மத்தைக் காப்பாத்த நேக்கு நீதான் சக்தி கொடுக்கணும்… முணுமுணுத்துக் கொண்டே சிரமப்பட்டு குச்சியை ஊனி தன் உடலைத் தூக்கி எழுந்தபடியே.. டேய், சின்னவனே.. நக்கீரன் ஆன்லைன்லேருந்து அந்த நித்யான்ந்தன் ஃபுல் வீடியோவ டவுன்லோட் செஞ்சியே அத போடுறா … என உள்ளுக்குள் போனார் ஜெயேந்திரர்.

செவ்வாய், 9 மார்ச், 2010

இந்திய - அமெரிக்க அணுசக்தி திட்டம் ஒரு ஆய்வு.

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.

உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?

இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.

இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்?

நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.

இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?

பசுவதை தடைச்சட்டம் ஒரு ஆய்வு.

கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க அரசு பசுவதை தடைச்சட்ட மசோதாவை நிறைவேற்றி விட்டு திடீரென அதனை வாபஸ் பெற்றுள்ளது. இதன் மூலம் பசுவதை தடைச்சட்டம் மீண்டும் சர்சைக்குரிய விஷயமாக மாறிவிட்டது. பா.ஜ.க அரசு நிறைவேற்றிய பசுவதைத் தடைச் சட்டம் விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தும் என ஜனதா தளம் தலைவர் தேவகெளடா எச்சரிக்கை விடுத்திருந்தார். பயனற்ற கால்நடைகளை விவசாயிகள் என்னச் செய்ய வேண்டுமென்பது கெளடாவின் முக்கிய கேள்வியாகும்.

எந்த பயனுமற்ற கால்நடைகளை பாதுகாக்க இயலாமல் அவிழ்த்து விடும் பொழுது அவை சாலைகளில் அலைந்து திரிவதால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுவதோடு, பசியால் வாடி சாலைகளில் செத்து விழும் காட்சிகள் பசுவதைத் தடைச்சட்டம் அமுலில் இருக்கும் வடநாடுகளில் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

பசுக்களை பாதுகாக்க கோ சாலைகள் நிறுவவேண்டுமென்பது ஒரு கோரிக்கை. எந்த பயனுமற்ற பசுக்களை பாதுகாக்க வேண்டுமானால் நாடு முழுவதும் கோ சாலைகள் நிர்மாணிக்க வேண்டி வரும். பசுக்களை கொல்வதற்கு பதிலாக சித்திரவதைச் செய்யப்பட்டு கொலைச் செய்யும் சாலைகளாக மாறும் வாய்ப்புள்ளது என முக்கிய பத்திரிகை ஒன்று தமது தலையங்கத்தில் கவலையை தெரிவித்திருந்தது.

பிரபலமான குருவாயூர் கோயிலுக்கு சொந்தமான கோ சாலையில் பசுக்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பின் பயங்கர காட்சிகளை காண்பவர்களுக்கு வேறு ஏதேனும் கூற இயலுமா? பசுவதையைத் தடைச் செய்ய கர்நாடகா பா.ஜ.க அரசு முயற்சி மேற்க்கொண்டு வரும் பொழுது கர்நாடகாவின் பிரசித்திப் பெற்ற கோயிலான கொப்பால் கிருஷ்டகி துர்கா தேவி கோவிலில் ஒரே இரவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பசுக்களை பலிக் கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று பசுவின் புனிதம் பற்றி வாய் கிழியப் பேசும் பார்ப்பனர்கள் முன்னொரு காலத்தில் பசு வேட்டையாடி அவற்றை யாகத்தில் வெட்டி பலி கொடுத்ததோடு மட்டுமல்லாது அவற்றின் இறைச்சியையும் உண்டுக் கொழுத்தவர்கள் என்றும், ஆரியர்களால் போற்றப்படும் வேத விற்பன்னர்களான பிரஜாபதி, யாக்ஞவல்கியர், தேவகுரு பிரகஸ்பதி போன்றவர்களும் மனு சாத்திரம், மகாபாரதம், போன்ற ஆரிய நூல்களும் பசு இறைச்சி உண்பதை நியாயப் படுத்துகின்றன.

உயிர்ப்பிராணிகள் வதை தடுப்பு இயக்கத்தினரின் எதிர்ப்பையும் புறக்கணித்துதான் இந்த பசு இனப்படுகொலை நடத்தப்பட்டது. இதற்கெதிராக ப்ராணிதயா சங்க் என்ற இயக்கம் களமிறங்கிய பொழுதும் காவல்துறை மற்றும் ரெவின்யூ அதிகாரிகளின் துணையோடு இந்த கூட்டுப்பலி நடக்கத்தான் செய்தது.பசுக்களை அறுத்து விற்பவர்களின் கைகளை வெட்டுவோம் என கூச்சலிட்ட பஜ்ரங்தள்-ஸ்ரீராம சேனா தலைவர்கள் இந்த மகா பசு பலிக்கெதிராக மெளனம் சாதித்தனர்.

பசுவதைக்கு எதிராக குரல் எழுப்பியவர்களின் நோக்கம் சுத்தமான அரசியலேயன்றி வேறென்ன. இந்தியாவில் மிகப்பெரிய கசாப்புச் சாலையாக திகழும் ஹைதராபாத் அல்கபீருக்கெதிராக ஹிந்து முன்னணியினர் போராட்டக் களத்தில் இறங்கி கலாட்டாச் செய்தது நினைவிருக்கலாம். முஸ்லிம் பெயர்க் கொண்ட இந்த மாட்டு இறைச்சித் தொழிற்சாலை ஒரு உயர்ஜாதி ஹிந்துவுடையது என்பதை அறிந்தவுடன் தங்களது போராட்டத்தை மூட்டைக் கட்டிவிட்டு அடங்கிவிட்டனர்.

பசுக்களை நேசிக்கிறோம் வணங்குகிறோம் என்று கூறுவோர் தான் பெரும்பாலான மாட்டு இறைச்சித் தொழிற்சாலைகளுக்கு உரிமையாளர்களாகவும், நிர்வாகிகளாகவும் உள்ளனர்.
பசு நேசர்களின் போலி நாடகத்தின் முகமூடியை கிழித்தெறிவது அத்தியாவசியமான ஒன்றாகும். பசுவை பாதுக்காப்போம் என்று கோஷம் எழுப்புவோர் தான் குஜராத் உள்ளிட்ட இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு இனப் படுகொலைகளில் சிறுபான்மை முஸ்லிம்களை கொடூரமாக கொலைச் செய்தனர். இவர்களுக்கு பசுவின் மீது நேசமும் இல்லை பாசமும் இல்லை. முஸ்லிம்கள் மீதான துவேஷத்தால் போடும் வேஷமாகும்.

செவ்வாய், 2 மார்ச், 2010

ஹிந்து கோவிலில் ரகசிய அறைகள் வைத்து விபச்சாரம் நடத்திய பிரமான சாமியார் கைது.


டெல்லி: சத்ய சாய்பாபாவின் சீடர் கான்பூர் பகுதியில் வசித்து வருபவர் சிவ்முரத் திவேதி (39) என்கிற ஹிந்து பிராமண சாமியார். இவர் கான்பூரில் சாய்பாபா பெயரில் பெரிய கோவில் கட்டி உள்ளார். அக்கோவிலில் தினமும் பஜனைப் பாடல்களை பாடியும் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதும் வழக்கம். டெல்லியில் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர் மேலும் இவருக்கு டெல்லியில் உள்ள அரசியல்வாதிகளிடமும் பழக்கம் ஏற்பட்டதால் அவர் டெல்லியில் புகழ் மிக்க ஹிந்து சாமியாராக வலம் வந்தார்.

இந்நிலையில் பார்பன ஹிந்து சாமியார் சிவ்முரத் திவேதி இந்து மதத்தை கேடயமாக வைத்துக் கொண்டு விபசாரம் செய்து வருவதாக புகார்கள் வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த டெல்லி போலீசார் சிவ்முரத் திவேதி யையும் அவரது கோவில், வீடுகளையும் கண்காணித்தனர். போலீஸ் விசாரணையில் கான்பூர் சாய்பாபா கோவிலில் சுரங்க அறைகள் இருப்பதும் அங்கு விபசாரம் நடப்பதும் உறுதியாக தெரிய வந்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் சிவ்முரத் திவேதியின் கோவிலில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு விபசாரம் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.

இதனை தொடர்ந்து உடனடியாக சாமியார் சிவ்முரத் திவேதி கைது செய்யப்பட்டார். அவருடன் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த 2 விமானப்பணிப் பெண்கள், கல்லூரி மாணவிகள் 2 பேர் பிடிபட்டனர். இந்தி படங்களில் நடித்து வரும் துணை நடிகை ஒரு வரும் இந்த வேட்டையில் சிக்கினார். மேலும் டெல்லியில் உள்ள பணக்காரர்களின் வீடுகளுக்கு செல்ல தயாராக இருந்த இளம் பெண்களும் போலீசாரிடம் பிடிபட்டனர்.

பார்பன ஹிந்து சாமியாரின் பாபா கோவில் முழுக்க போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது 5 டைரிகள் கிடைத்தன. அந்த டைரிகளில் இந்தியா முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பெண்களின் முகவரிகள், போன் நம்பர்கள் இருந்தன. அவர்கள் அனைவரையும் போலி சாமியார் சிவ்முரத் திவேதி விபசாரத்தில் ஈடு படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் போலி சாமியாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஹிந்து சாமியார் நித்தியானந்தா நடிகையுடன் உல்லாசம்.

சென்னை: பிரபல தமிழக ஹிந்து சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதிலும் உள்ள அவருடைய பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

அந்த வீடியோ காட்சியில் ஆசிரமம் போல் காணப்படும் அங்கு பார்பன ஹிந்து சாமியாரும் நடிகை ரஞ்சிதாவும் ஒரு அறையில் உள்ளனர். அந்த அறையில் புடவையுடன் இருக்கும் நடிகை ரஞ்சிதா சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. அதை தொடர்ந்து விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

இதேபோல் அடுத்தக் காட்சியில் நடிகை ரஞ்சிதா சுடிதாரில், பார்பன ஹிந்து சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். அப்போது ரஞ்சிதா மாத்திரை கொடுக்கிறார், காபி கொடுக்கிறார். பின்னர் பழையபடி விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இந்தக் வீடியோ காட்சிகளைப் பார்க்கும்போது நடிகைக்கும், சாமியாருக்கும் பல வருடங்களாகவே தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப் படுகிறது.

இந்த செய்திகள் அடங்கிய வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, கடலூர் அருகே வண்டிப்பாளையம் பகுதியில் பார்பன ஹிந்து நித்தியானந்தா சாமியாரின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து அங்கு ஒட்டப்பட்டு இருந்த அவரின் படங்களை கிழித்தெறிந்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாமியாரின் படத்தை கிழித்தவர்கள், பார்பன ஹிந்து நித்யானந்த சாமியாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரின் ஆசிரமத்துக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.