செவ்வாய், 9 மார்ச், 2010

பசுவதை தடைச்சட்டம் ஒரு ஆய்வு.

கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க அரசு பசுவதை தடைச்சட்ட மசோதாவை நிறைவேற்றி விட்டு திடீரென அதனை வாபஸ் பெற்றுள்ளது. இதன் மூலம் பசுவதை தடைச்சட்டம் மீண்டும் சர்சைக்குரிய விஷயமாக மாறிவிட்டது. பா.ஜ.க அரசு நிறைவேற்றிய பசுவதைத் தடைச் சட்டம் விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தும் என ஜனதா தளம் தலைவர் தேவகெளடா எச்சரிக்கை விடுத்திருந்தார். பயனற்ற கால்நடைகளை விவசாயிகள் என்னச் செய்ய வேண்டுமென்பது கெளடாவின் முக்கிய கேள்வியாகும்.

எந்த பயனுமற்ற கால்நடைகளை பாதுகாக்க இயலாமல் அவிழ்த்து விடும் பொழுது அவை சாலைகளில் அலைந்து திரிவதால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுவதோடு, பசியால் வாடி சாலைகளில் செத்து விழும் காட்சிகள் பசுவதைத் தடைச்சட்டம் அமுலில் இருக்கும் வடநாடுகளில் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

பசுக்களை பாதுகாக்க கோ சாலைகள் நிறுவவேண்டுமென்பது ஒரு கோரிக்கை. எந்த பயனுமற்ற பசுக்களை பாதுகாக்க வேண்டுமானால் நாடு முழுவதும் கோ சாலைகள் நிர்மாணிக்க வேண்டி வரும். பசுக்களை கொல்வதற்கு பதிலாக சித்திரவதைச் செய்யப்பட்டு கொலைச் செய்யும் சாலைகளாக மாறும் வாய்ப்புள்ளது என முக்கிய பத்திரிகை ஒன்று தமது தலையங்கத்தில் கவலையை தெரிவித்திருந்தது.

பிரபலமான குருவாயூர் கோயிலுக்கு சொந்தமான கோ சாலையில் பசுக்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பின் பயங்கர காட்சிகளை காண்பவர்களுக்கு வேறு ஏதேனும் கூற இயலுமா? பசுவதையைத் தடைச் செய்ய கர்நாடகா பா.ஜ.க அரசு முயற்சி மேற்க்கொண்டு வரும் பொழுது கர்நாடகாவின் பிரசித்திப் பெற்ற கோயிலான கொப்பால் கிருஷ்டகி துர்கா தேவி கோவிலில் ஒரே இரவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பசுக்களை பலிக் கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று பசுவின் புனிதம் பற்றி வாய் கிழியப் பேசும் பார்ப்பனர்கள் முன்னொரு காலத்தில் பசு வேட்டையாடி அவற்றை யாகத்தில் வெட்டி பலி கொடுத்ததோடு மட்டுமல்லாது அவற்றின் இறைச்சியையும் உண்டுக் கொழுத்தவர்கள் என்றும், ஆரியர்களால் போற்றப்படும் வேத விற்பன்னர்களான பிரஜாபதி, யாக்ஞவல்கியர், தேவகுரு பிரகஸ்பதி போன்றவர்களும் மனு சாத்திரம், மகாபாரதம், போன்ற ஆரிய நூல்களும் பசு இறைச்சி உண்பதை நியாயப் படுத்துகின்றன.

உயிர்ப்பிராணிகள் வதை தடுப்பு இயக்கத்தினரின் எதிர்ப்பையும் புறக்கணித்துதான் இந்த பசு இனப்படுகொலை நடத்தப்பட்டது. இதற்கெதிராக ப்ராணிதயா சங்க் என்ற இயக்கம் களமிறங்கிய பொழுதும் காவல்துறை மற்றும் ரெவின்யூ அதிகாரிகளின் துணையோடு இந்த கூட்டுப்பலி நடக்கத்தான் செய்தது.பசுக்களை அறுத்து விற்பவர்களின் கைகளை வெட்டுவோம் என கூச்சலிட்ட பஜ்ரங்தள்-ஸ்ரீராம சேனா தலைவர்கள் இந்த மகா பசு பலிக்கெதிராக மெளனம் சாதித்தனர்.

பசுவதைக்கு எதிராக குரல் எழுப்பியவர்களின் நோக்கம் சுத்தமான அரசியலேயன்றி வேறென்ன. இந்தியாவில் மிகப்பெரிய கசாப்புச் சாலையாக திகழும் ஹைதராபாத் அல்கபீருக்கெதிராக ஹிந்து முன்னணியினர் போராட்டக் களத்தில் இறங்கி கலாட்டாச் செய்தது நினைவிருக்கலாம். முஸ்லிம் பெயர்க் கொண்ட இந்த மாட்டு இறைச்சித் தொழிற்சாலை ஒரு உயர்ஜாதி ஹிந்துவுடையது என்பதை அறிந்தவுடன் தங்களது போராட்டத்தை மூட்டைக் கட்டிவிட்டு அடங்கிவிட்டனர்.

பசுக்களை நேசிக்கிறோம் வணங்குகிறோம் என்று கூறுவோர் தான் பெரும்பாலான மாட்டு இறைச்சித் தொழிற்சாலைகளுக்கு உரிமையாளர்களாகவும், நிர்வாகிகளாகவும் உள்ளனர்.
பசு நேசர்களின் போலி நாடகத்தின் முகமூடியை கிழித்தெறிவது அத்தியாவசியமான ஒன்றாகும். பசுவை பாதுக்காப்போம் என்று கோஷம் எழுப்புவோர் தான் குஜராத் உள்ளிட்ட இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு இனப் படுகொலைகளில் சிறுபான்மை முஸ்லிம்களை கொடூரமாக கொலைச் செய்தனர். இவர்களுக்கு பசுவின் மீது நேசமும் இல்லை பாசமும் இல்லை. முஸ்லிம்கள் மீதான துவேஷத்தால் போடும் வேஷமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக