ஞாயிறு, 11 ஏப்ரல், 2010
இந்திய பழங்குடி மக்களை அரக்கர்களாகவும், பிராமண உயர்ஜாதி பணக்காரர்களை ராமனாகவும் சித்தரிக்கும் தின(மலம்)மலர்.
மக்களை போராட்டத்தை தீவிரவாதமாக சித்தரிக்கும் பொதுமக்களை அரக்கர்களாகவும் பிராமண முதலாளிகளை ராமனாகவும் சித்தரிக்கும் தினமலம்.
ஏப்ரல் 11,2010, தினமலர் செய்தி:உருவாகிறதா உள்நாட்டுப் போர்? சத்தீஸ்கர் சம்பவம் கற்பிக்கும் பாடம்: என்று தலைப்பிட்டு தினமலர் எழுதிள்ள செய்தியாவது. ராமாயணத்தில் ராமன், தண்டகாரண்யம் காட்டில் வசித்த ராட்சதர்களை விரட்டி, வதம் செய்து, அந்தக் காட்டை, சாதுக்கள் வசிப்பதற்கு உகந்த இடமாக மாற்றியதாகக் கதை உண்டு. இன்று, அதே காட்டில், அதே கதை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.அப்போதைய தண்டகாரண்யம் தான், இப்போதைய தந்தேவாடா உள்ளிட்ட பல மாவட்டங்கள் அடங்கிய பகுதி.
ஏப்ரல் 6ம் தேதி, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீசார் 76 பேரை, மாவோவாதிகள் வழிமறித்துக் கொன்ற பகுதி.சத்தீஸ்கர் மாநிலத்தில், பழங்குடியினர் வாழும், 40,000 சதுர கி.மீ., பரப்பளவு கொண் டது பஸ்தர் பகுதி. கான்கேர், பஸ்தர், தந்தேவாடா, நாராயண்பூர், பிஜாப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களை அடக்கிய, தண்டகாரண்யா காட்டுப் பகுதி. நிலக்கரி, இரும்புத் தாது, சுண்ணாம்புக் கல், தங்கம், வைரம் உட்பட 28 கனிம வளங்களைக் கொண்டது இப்பகுதி.காடுகளில் வசிக்கும் பழங்குடியினர், சுரங்கத் தொழிலை விரும்புவதில்லை. அந்த விருப் பமின்மையை, துப்பாக்கிகள் மூலம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.பஸ்தர் பகுதியில், 60 ஆயிரம் மாவோவாதிகள் உள்ளனர் என்றும், பொதுமக்கள் மாவோவாதிகளாகச் செயல்படவில்லை என்றும், சத்தீஸ்கர் காவல்துறை கணித்துள்ளது. ஆனால், மாவோவாதிகள் உருவாக்கியுள்ள, 'ஜனாதன சர்க் கார்' - மக்களால் நடத்தப் படும் அரசியல் நிர்வாகத்தின் செயல் பாட்டைப் பார்க்கும் போது, காவல் துறையின் கணிப்பு மீது சந்தேகம் எழுகிறது.
தற்போது, தண்டகாரண்யா (டி.கே.,) காடுகள், மாவோவாதிகளின் பிரதான கோட்டை. டி.கே., விடுதலை செய்யப் பட்ட பகுதி என, அவர்களால் அழைக்கப்படுகிறது. 'ஜனாதன சர்க்கார்' ஆட்சி முறையில், இந்தப் பகுதி, கிட்டத்தட்ட தனி நாடாக இயங்குகிறது.சில ஆண்டுகளுக்கு முன் வரை, இப்பகுதிக்கென துல்லியமான வரைபடம் கூட கிடையாது. இதனாலேயே, இதற்கு 'அபுஜ்மாட்' - இருண்ட பகுதி என்று பெயர். அபுஜ்மாட்டில், காலம் காலமாக வசிப்பவர்கள், ஹல்பா, கோண்ட், மூடியா, மாடியா பிரிவு பழங்குடியினர். வனத்துறை அதிகாரிகளும், காட்டு விளை பொருட்களை வாங்கும் ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே, இந்தப் பழங்குடியினருடன் தொடர்பு கொண்ட வெளியாட்கள்.வனத் துறையினர் அவ்வப் போது, பழங்குடியினரின் கோழிகளையும், பெண்களையும் அபகரித்துச் சென்று விடுவர். இவர்கள் இப்படி எனில், ஒப்பந்தக்காரர்களோ, அடிமாட்டு விலைக்கு இவர்களின் விளை பொருட்களுக்கு பேரம் பேசுவர். சில நேரங்களில், பண்டமாற்று முறை போல், வெறும் உப்பை மட்டும் கொடுத்து விட்டுச் செல்வர்.
கடந்த 1980ல், ஆந்திராவில் கெடுபிடி அதிகரித்ததால், போக்கிடம் தெரியாமல் சுற்றிய மாவோவாதிகள், அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள காட்டில், தஞ்சம் புகுந்தனர். பழங்குடியினர் இவர்களை, தங்களிடம் நெருங்கவே விடவில்லை. ஆனால், இவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள, மாவோவாதிகள் அதிக சிரமப்படவில்லை.பழங்குடியினரை அடிமைகளாக நடத்திய வனத் துறையினரை விரட்டி, ஒப்பந்தக்காரர்களிடம் பேரம் பேசி, விளை பொருட்களுக்கு நல்ல விலை பெற்றுத் தந்தனர். இந்த சிறிய வெற்றிகளால், மாவோவாதிகள், பழங்குடியினர் இடையே தங்களை, மெல்ல மெல்ல நிலைப்படுத்திக் கொண்டனர்.
கடந்த 2005ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் மிகப் பெரிய திருப்பம் ஏற்பட இருந் தது. டாடா மற்றும் எஸ்சார் நிறுவனங்கள், இரும்புத் தாது சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்க, மாநில அரசுடன் ஒப்பந்தம் போட்டன.பஸ்தர் மாவட்டம், லோஹாண்டிகுடாவில் 10,000 கோடி ரூபாய் மதிப்பில் டாடா நிறுவனமும், தந்தேவாடா மாவட்டம், துர்லி மற்றும் பான்சியில், 7,000 கோடி ரூபாய் மதிப்பில் எஸ்சார் நிறுவனமும் ஆலைகள் அமைக்க திட்டமிட்டன. இதைத் தொடர்ந்து, மேலும் பல நிறுவனங்களும் இதே போல் ஒப்பந்தம் செய்து கொண்டன.அதே ஆண்டு, ஜூன் மாதம், தந்தேவாடா மாவட்டத்தில், இந்துக்களாக மதம் மாற்றப் பட்ட பழங்குடியினர், 'சால்வா ஜுடும்' என்ற இயக்கத்தைத் துவக்கினர். சால்வா' என்பது, விஷக் காய்ச்சலைப் போக்கும் மந்திர முறை. 'ஜுடும்' என்றால், இணைப்பு.
இந்த இயக்கத்தின் நோக்கம், ஆயுதங் களால், மாவோவாதிகளை எதிர்ப்பது. இந்த இயக்கத் திற்கு, மாநில அரசின் ஆதரவு கிடைத்தது. ஆயுதம், சட்டப் பாதுகாப்பும் கிடைத்தது.இந்த இயக்கத்தின் ஆறு மாதச் செயல்பாட்டில் நேர்ந்த விளைவு, தந்தேவாடா, பிஜாப் பூர் மாவட்டங்களில், 644 கிராமங்கள் சூறையாடப்பட்டன. 60,000 பேர் அகதிகளாக அரசு முகாம்களில் அடைக்கப்பட்டனர். ஒன்றரை லட்சம் பேர் வட ஆந்திர பகுதிகளுக்கு ஓட்டம் பிடித்தனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றி சரியான தகவல் இல்லை. இத்தகைய சட்ட வரம்பை மீறிய, அடக்குமுறை கொள் கைகளால், 2005ல் இருந்து வன்முறை அதிகரித்தது. சுப்ரீம் கோர்ட்டும், 'சால்வா ஜுடும்' இயக்கத்தையும், மாநில அரசையும் கண்டித்தது. ஆனால், மாநில அரசு, அந்த இயக்கத் திற்கு அளித்து வந்த ஆதரவை நிறுத்தவில்லை.
அதே ஆண்டு டிசம்பர் மாதம், சத்தீஸ்கர் சிறப்பு பொதுப் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் மூலம், யாரை வேண்டுமானாலும், பாதுகாப் புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, கோர்ட் உத்தரவு இல்லாமலேயே, சிறை வைக்க முடியும். அதன் பிறகு 2008ல், சத்தீஸ் கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி, 'சால்வா ஜுடும்' இயக்கத்தினர், ஆயிரம் பேரைக் கொன்று குவித்ததாகக் குற்றம் சாட்டினார். ஆனால், ஒப்பந்தங்கள் செய்து பல ஆண்டுகள் ஆகியும், மாவோவாதிகளின் அச்சுறுத்தல், நில ஆர்ஜிதப் பிரச்னை ஆகியவற்றால், கனிம நிறுவனங்கள் செயல்பட முடியாமல் தவித்தன.
சத்தீஸ்கர் மாநில முதன் மைச் செயலர் வைஜேந்திர குமார், 'மாவோவாதிகளின் அச்சுறுத்தலால் தான், பஸ்தர் பகுதியில், கனிம நிறுவனங்களின் திட்டங்களைத் துவக்க முடியவில்லை' என, வெளிப்படையாகக் கூறினார். வர்த்தக நிறுவனங்களும், இது குறித்து, கவலை தெரிவித்தன.ஜெர்மனியை மையமாகக் கொண்ட டாய்ச் வங்கி கூட, ஏப்ரல் 2ம் தேதி தன் அறிக்கையில், 'மாவோவாதிகளை இந்தியா ஒடுக்காவிட்டால், மின்சாரம் மற்றும் கனிமத் துறைகளில் தன்னிறைவு பெற முடியாது' என, கூறியுள்ளது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 15ல், அனைத்து மாநில காவல் துறைத் தலைவர்களின் கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கூட்டினார். அப்போது, 'நம் நாட்டின் பாதுகாப்புக்கு முதன்மையான அச்சுறுத்தல், மாவோவாதிகள் தான். ஆனால், அவர்களுக்கு, பழங்குடியினர் மற்றும் அறிஞர்கள் சிலரின் ஆதரவு உள்ளது. எனவே, இந் தப் பிரச்னையை மிக நுட்பமாகக் கையாள வேண் டும்' என்றார்.அதன் பிறகே, மத்திய அரசின் தீவிர பரிசீலனைக் குப் பின், 'ஆபரேஷன் கிரீன் ஹன்ட்' திட்டம் துவக்கப் பட்டது. திட்டத் தின்படி, ஏற்கனவே உள்ள 20 ஆயிரம் துணை ராணுவப் படையினருடன், மேலும் துணை ராணுவப் படையினர் 40 ஆயிரம் பேர், பஸ்தர் பகுதியில், சாரை, சாரையாகக் குவியத் தொடங்கினர்.
உளவுத் துறை உதவியுடன், மாவோவாதிகளை மட்டும் அழிப்பது, மாவோவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவது, அந்த இடங்களில், அரசு நிறுவனங் களை அமைப்பது ஆகியவையே, 'ஆபரேஷன் கிரீன் ஹன்ட்'டின் குறிக்கோள். இந்த நடவடிக்கையின் போது, ராணுவத்தைப் பயன் படுத்தக் கூடாது, பீரங்கி மற் றும் வான்வழித் தாக்குதல் ஆகியவை மேற்கொள்ளக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட் டது.ஆனால், ஏப்ரல் 6ம் தேதி நடந்த சம்பவத்தை பார்க்கும் போது, 'கிரீன்ஹன்ட்' வியூகங் களின் குறைபாடுகள் தெரிந் தன.மத்திய துணை ராணுவப் படையினருக்கு, மாவோவாதிகளைக் கையாள போதுமான பயிற்சி வழங்கப்படவில்லை என்று சத்தீஸ்கர் காவல் துறையினரும், பாதுகாப்பு அதிகாரிகளும் ஏற்கனவே கூறி வருகின்றனர்.
வனப் போரில் ஈடுபடுவோருக்கு, பிரத்தியேக பயிற்சி அளிக்க, கான்கேர் மாவட்டத் தில், 'வனப் போர் பயிற்சி மையம்' உள்ளது. ஆனால் இங்கு, ஓராண்டில், 600 பேருக்கு மட்டுமே பயிற்சி வழங்க முடியும். 'பயிற்சி பெறாதவர்கள், மனித உரிமை மீறல் நடவடிக்கையில் ஈடுபடுவர்' என, இம்மையத்தின் துணை இயக்குனர், கர்னல் ஜோகிந்தர் கூறுகிறார்.பஸ்தர் பகுதியின் நிலைமை நமக்கு விளக்குவது, 60 ஆயிரம் வீரர்களை, 60 ஆயிரத்திற்கு மேற் பட்ட மாவோவாதிகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதே.வெறும் படை பலத்தின் மூலம், இந்தப் போரில் வெல்ல முடியாது என்பது, பாதுகாப்பு அதிகாரிகளின் ஒருமித்த கருத்து.
சத்தீஸ்கர் டி.ஜி.பி., விஷ்வ ரஞ்ஜன் கூறுகையில், 'படைபலத்தைப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாவோவாதிகளுக்கு நெருக்கடி மட் டுமே கொடுக்க முடியுமே தவிர, அவர்களிடம் போரிட்டு வெல்ல முடியாது' என்கிறார். காஷ்மீரை முன்னுதாரணமாகக் காட்டி, பேச்சுவார்த்தைகளால் தான் பிரச்னையைத் தீர்க்க முடியும் என, அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
நிலைமை இவ்வாறு இருக்க, மத்திய உள்துறை அமைச்சரோ, 'மூன்று ஆண்டுகளில் மாவோவாதிகளை அழித்து விடுவோம்' என, பிடிவாதமாக கூறுகிறார். ஏப்ரல் 6 தாக்குதலுக்கு பின் அவர் வெளியிட்ட அறிக்கையில், 'இனி பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை.'பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பேசினால், 76 வீரர்களின் உயிர்த் தியாகத்தை கேலி செய்வதாக ஆகிவிடும்' என்கிறார். முழு வீச்சில் உள்நாட்டுப் போர் உருவாவதற்கான வாய்ப் புகளைக் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு பின்னடைவுக்குப் பின்னும், அடக்குமுறைகளை அதிகரிக்கும் திசையில் மத்திய அரசு பயணிக்கிறது.இந்த ராமாயணம் 2ல், யார் எந்த கதாபாத்திரம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
கனிம நிறுவனங்கள் என்ற சாதுக்கள், இப்பகுதியில் எப்போது குடியேறப் போகின்றனர் என்பது தெரியவில்லை.இந்த ராமாயணமும், கம்பர் எழுதியதைப் போல், முடிவுக்கு வருமா என்பதையும் இப்போது சொல்ல முடியாது. ஏனெனில், இந்த முறை ராட்சதர்கள், நாட்டில் 223 மாவட் டங்களிலிருந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்; ராமனின் கைகளும், ஜனநாயகத்தால் கட்டப்பட்டுள்ளன.எப்படி செயல்படுகின்றனர் மாவோவாதிகள்?மாவோவாதிகளில், 5,000 பேர், இந்திய ராணுவத்துக்கு இணையாக பயிற்சி பெற்றுள்ளனர்; மேலும், 5,000 பேர், அடிப்படை பயிற்சி பெற்றுள்ளனர்; 50 ஆயிரம் பேர், ஆயுதப் பயிற்சி மற்றும் கண்ணி வெடி வைப்பதில் பயிற்சி பெற்றுள்ளனர் என, போலீசார் கணக்கிட்டுள்ளனர்.
ஆயுதங்கள்: ஒவ்வொரு மாவோவாத கம்பெனியும், நான்கு இலகு ரக இயந்திர துப்பாக்கி, எஸ்.எல். ஆர்.,கள், 'இன்சாஸ்' ரைபிள்கள், ஏ.கே., ரக துப்பாக்கிகள், சிறு பீரங்கிகள் மற்றும் ஆர்.பி.ஜி., துப்பாக்கிகள் ஆகியவை வைத் துள்ளனர். இது கிட்டத்தட்ட, இந்திய ராணுவத்திற்கு இணையாக உள்ளது.தாக்குதல் முறைகள்: வாகனங்களால் இடித்து தள்ளிவிட்டு தப்பி செல்வது, பதுங்கியிருந்து தாக்குவது, புத்திசாலித்தனமாக செயல்பட்டு பாதுகாப்பு படையினரின் கவனத்தை திசை திருப்புவது, சாலையில்லாத பகுதிகளில் கண்ணி வெடிகள் வைப்பது.சாதகங்கள்: ஆயுதங்களைக் கடத்தவும், புலனாய்வுப் பணிகளுக்கும் உள்ளூர் மக்கள் ஆதரவு. எப்போது வேண்டுமானாலும் கூடி, கலையும் போர்க் குழு. நிலப்பகுதிகள் குறித்த பரந்த அறிவு.
கட்டுரை எழுதிய நான் ஒரு பிராமணன் தாழ்த்தபட்ட உழைக்கும் மக்களின் எதிரி: நன்றி: கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு அவர்களே.
நன்றி தினமலம் நாளிதழ்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக