ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

இந்திய பழங்குடி மக்களை அரக்கர்களாகவும், பிராமண உயர்ஜாதி பணக்காரர்களை ராமனாகவும் சித்தரிக்கும் தின(மலம்)மலர்.


மக்களை போராட்டத்தை தீவிரவாதமாக சித்தரிக்கும் பொதுமக்களை அரக்கர்களாகவும் பிராமண முதலாளிகளை ராமனாகவும் சித்தரிக்கும் தினமலம்.

ஏப்ரல் 11,2010, தினமலர் செய்தி:உருவாகிறதா உள்நாட்டுப் போர்? சத்தீஸ்கர் சம்பவம் கற்பிக்கும் பாடம்: என்று தலைப்பிட்டு தினமலர் எழுதிள்ள செய்தியாவது. ராமாயணத்தில் ராமன், தண்டகாரண்யம் காட்டில் வசித்த ராட்சதர்களை விரட்டி, வதம் செய்து, அந்தக் காட்டை, சாதுக்கள் வசிப்பதற்கு உகந்த இடமாக மாற்றியதாகக் கதை உண்டு. இன்று, அதே காட்டில், அதே கதை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.அப்போதைய தண்டகாரண்யம் தான், இப்போதைய தந்தேவாடா உள்ளிட்ட பல மாவட்டங்கள் அடங்கிய பகுதி.

ஏப்ரல் 6ம் தேதி, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீசார் 76 பேரை, மாவோவாதிகள் வழிமறித்துக் கொன்ற பகுதி.சத்தீஸ்கர் மாநிலத்தில், பழங்குடியினர் வாழும், 40,000 சதுர கி.மீ., பரப்பளவு கொண் டது பஸ்தர் பகுதி. கான்கேர், பஸ்தர், தந்தேவாடா, நாராயண்பூர், பிஜாப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களை அடக்கிய, தண்டகாரண்யா காட்டுப் பகுதி. நிலக்கரி, இரும்புத் தாது, சுண்ணாம்புக் கல், தங்கம், வைரம் உட்பட 28 கனிம வளங்களைக் கொண்டது இப்பகுதி.காடுகளில் வசிக்கும் பழங்குடியினர், சுரங்கத் தொழிலை விரும்புவதில்லை. அந்த விருப் பமின்மையை, துப்பாக்கிகள் மூலம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.பஸ்தர் பகுதியில், 60 ஆயிரம் மாவோவாதிகள் உள்ளனர் என்றும், பொதுமக்கள் மாவோவாதிகளாகச் செயல்படவில்லை என்றும், சத்தீஸ்கர் காவல்துறை கணித்துள்ளது. ஆனால், மாவோவாதிகள் உருவாக்கியுள்ள, 'ஜனாதன சர்க் கார்' - மக்களால் நடத்தப் படும் அரசியல் நிர்வாகத்தின் செயல் பாட்டைப் பார்க்கும் போது, காவல் துறையின் கணிப்பு மீது சந்தேகம் எழுகிறது.

தற்போது, தண்டகாரண்யா (டி.கே.,) காடுகள், மாவோவாதிகளின் பிரதான கோட்டை. டி.கே., விடுதலை செய்யப் பட்ட பகுதி என, அவர்களால் அழைக்கப்படுகிறது. 'ஜனாதன சர்க்கார்' ஆட்சி முறையில், இந்தப் பகுதி, கிட்டத்தட்ட தனி நாடாக இயங்குகிறது.சில ஆண்டுகளுக்கு முன் வரை, இப்பகுதிக்கென துல்லியமான வரைபடம் கூட கிடையாது. இதனாலேயே, இதற்கு 'அபுஜ்மாட்' - இருண்ட பகுதி என்று பெயர். அபுஜ்மாட்டில், காலம் காலமாக வசிப்பவர்கள், ஹல்பா, கோண்ட், மூடியா, மாடியா பிரிவு பழங்குடியினர். வனத்துறை அதிகாரிகளும், காட்டு விளை பொருட்களை வாங்கும் ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே, இந்தப் பழங்குடியினருடன் தொடர்பு கொண்ட வெளியாட்கள்.வனத் துறையினர் அவ்வப் போது, பழங்குடியினரின் கோழிகளையும், பெண்களையும் அபகரித்துச் சென்று விடுவர். இவர்கள் இப்படி எனில், ஒப்பந்தக்காரர்களோ, அடிமாட்டு விலைக்கு இவர்களின் விளை பொருட்களுக்கு பேரம் பேசுவர். சில நேரங்களில், பண்டமாற்று முறை போல், வெறும் உப்பை மட்டும் கொடுத்து விட்டுச் செல்வர்.

கடந்த 1980ல், ஆந்திராவில் கெடுபிடி அதிகரித்ததால், போக்கிடம் தெரியாமல் சுற்றிய மாவோவாதிகள், அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள காட்டில், தஞ்சம் புகுந்தனர். பழங்குடியினர் இவர்களை, தங்களிடம் நெருங்கவே விடவில்லை. ஆனால், இவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள, மாவோவாதிகள் அதிக சிரமப்படவில்லை.பழங்குடியினரை அடிமைகளாக நடத்திய வனத் துறையினரை விரட்டி, ஒப்பந்தக்காரர்களிடம் பேரம் பேசி, விளை பொருட்களுக்கு நல்ல விலை பெற்றுத் தந்தனர். இந்த சிறிய வெற்றிகளால், மாவோவாதிகள், பழங்குடியினர் இடையே தங்களை, மெல்ல மெல்ல நிலைப்படுத்திக் கொண்டனர்.

கடந்த 2005ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் மிகப் பெரிய திருப்பம் ஏற்பட இருந் தது. டாடா மற்றும் எஸ்சார் நிறுவனங்கள், இரும்புத் தாது சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்க, மாநில அரசுடன் ஒப்பந்தம் போட்டன.பஸ்தர் மாவட்டம், லோஹாண்டிகுடாவில் 10,000 கோடி ரூபாய் மதிப்பில் டாடா நிறுவனமும், தந்தேவாடா மாவட்டம், துர்லி மற்றும் பான்சியில், 7,000 கோடி ரூபாய் மதிப்பில் எஸ்சார் நிறுவனமும் ஆலைகள் அமைக்க திட்டமிட்டன. இதைத் தொடர்ந்து, மேலும் பல நிறுவனங்களும் இதே போல் ஒப்பந்தம் செய்து கொண்டன.அதே ஆண்டு, ஜூன் மாதம், தந்தேவாடா மாவட்டத்தில், இந்துக்களாக மதம் மாற்றப் பட்ட பழங்குடியினர், 'சால்வா ஜுடும்' என்ற இயக்கத்தைத் துவக்கினர். சால்வா' என்பது, விஷக் காய்ச்சலைப் போக்கும் மந்திர முறை. 'ஜுடும்' என்றால், இணைப்பு.

இந்த இயக்கத்தின் நோக்கம், ஆயுதங் களால், மாவோவாதிகளை எதிர்ப்பது. இந்த இயக்கத் திற்கு, மாநில அரசின் ஆதரவு கிடைத்தது. ஆயுதம், சட்டப் பாதுகாப்பும் கிடைத்தது.இந்த இயக்கத்தின் ஆறு மாதச் செயல்பாட்டில் நேர்ந்த விளைவு, தந்தேவாடா, பிஜாப் பூர் மாவட்டங்களில், 644 கிராமங்கள் சூறையாடப்பட்டன. 60,000 பேர் அகதிகளாக அரசு முகாம்களில் அடைக்கப்பட்டனர். ஒன்றரை லட்சம் பேர் வட ஆந்திர பகுதிகளுக்கு ஓட்டம் பிடித்தனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றி சரியான தகவல் இல்லை. இத்தகைய சட்ட வரம்பை மீறிய, அடக்குமுறை கொள் கைகளால், 2005ல் இருந்து வன்முறை அதிகரித்தது. சுப்ரீம் கோர்ட்டும், 'சால்வா ஜுடும்' இயக்கத்தையும், மாநில அரசையும் கண்டித்தது. ஆனால், மாநில அரசு, அந்த இயக்கத் திற்கு அளித்து வந்த ஆதரவை நிறுத்தவில்லை.

அதே ஆண்டு டிசம்பர் மாதம், சத்தீஸ்கர் சிறப்பு பொதுப் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் மூலம், யாரை வேண்டுமானாலும், பாதுகாப் புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, கோர்ட் உத்தரவு இல்லாமலேயே, சிறை வைக்க முடியும். அதன் பிறகு 2008ல், சத்தீஸ் கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி, 'சால்வா ஜுடும்' இயக்கத்தினர், ஆயிரம் பேரைக் கொன்று குவித்ததாகக் குற்றம் சாட்டினார். ஆனால், ஒப்பந்தங்கள் செய்து பல ஆண்டுகள் ஆகியும், மாவோவாதிகளின் அச்சுறுத்தல், நில ஆர்ஜிதப் பிரச்னை ஆகியவற்றால், கனிம நிறுவனங்கள் செயல்பட முடியாமல் தவித்தன.

சத்தீஸ்கர் மாநில முதன் மைச் செயலர் வைஜேந்திர குமார், 'மாவோவாதிகளின் அச்சுறுத்தலால் தான், பஸ்தர் பகுதியில், கனிம நிறுவனங்களின் திட்டங்களைத் துவக்க முடியவில்லை' என, வெளிப்படையாகக் கூறினார். வர்த்தக நிறுவனங்களும், இது குறித்து, கவலை தெரிவித்தன.ஜெர்மனியை மையமாகக் கொண்ட டாய்ச் வங்கி கூட, ஏப்ரல் 2ம் தேதி தன் அறிக்கையில், 'மாவோவாதிகளை இந்தியா ஒடுக்காவிட்டால், மின்சாரம் மற்றும் கனிமத் துறைகளில் தன்னிறைவு பெற முடியாது' என, கூறியுள்ளது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 15ல், அனைத்து மாநில காவல் துறைத் தலைவர்களின் கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கூட்டினார். அப்போது, 'நம் நாட்டின் பாதுகாப்புக்கு முதன்மையான அச்சுறுத்தல், மாவோவாதிகள் தான். ஆனால், அவர்களுக்கு, பழங்குடியினர் மற்றும் அறிஞர்கள் சிலரின் ஆதரவு உள்ளது. எனவே, இந் தப் பிரச்னையை மிக நுட்பமாகக் கையாள வேண் டும்' என்றார்.அதன் பிறகே, மத்திய அரசின் தீவிர பரிசீலனைக் குப் பின், 'ஆபரேஷன் கிரீன் ஹன்ட்' திட்டம் துவக்கப் பட்டது. திட்டத் தின்படி, ஏற்கனவே உள்ள 20 ஆயிரம் துணை ராணுவப் படையினருடன், மேலும் துணை ராணுவப் படையினர் 40 ஆயிரம் பேர், பஸ்தர் பகுதியில், சாரை, சாரையாகக் குவியத் தொடங்கினர்.

உளவுத் துறை உதவியுடன், மாவோவாதிகளை மட்டும் அழிப்பது, மாவோவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவது, அந்த இடங்களில், அரசு நிறுவனங் களை அமைப்பது ஆகியவையே, 'ஆபரேஷன் கிரீன் ஹன்ட்'டின் குறிக்கோள். இந்த நடவடிக்கையின் போது, ராணுவத்தைப் பயன் படுத்தக் கூடாது, பீரங்கி மற் றும் வான்வழித் தாக்குதல் ஆகியவை மேற்கொள்ளக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட் டது.ஆனால், ஏப்ரல் 6ம் தேதி நடந்த சம்பவத்தை பார்க்கும் போது, 'கிரீன்ஹன்ட்' வியூகங் களின் குறைபாடுகள் தெரிந் தன.மத்திய துணை ராணுவப் படையினருக்கு, மாவோவாதிகளைக் கையாள போதுமான பயிற்சி வழங்கப்படவில்லை என்று சத்தீஸ்கர் காவல் துறையினரும், பாதுகாப்பு அதிகாரிகளும் ஏற்கனவே கூறி வருகின்றனர்.

வனப் போரில் ஈடுபடுவோருக்கு, பிரத்தியேக பயிற்சி அளிக்க, கான்கேர் மாவட்டத் தில், 'வனப் போர் பயிற்சி மையம்' உள்ளது. ஆனால் இங்கு, ஓராண்டில், 600 பேருக்கு மட்டுமே பயிற்சி வழங்க முடியும். 'பயிற்சி பெறாதவர்கள், மனித உரிமை மீறல் நடவடிக்கையில் ஈடுபடுவர்' என, இம்மையத்தின் துணை இயக்குனர், கர்னல் ஜோகிந்தர் கூறுகிறார்.பஸ்தர் பகுதியின் நிலைமை நமக்கு விளக்குவது, 60 ஆயிரம் வீரர்களை, 60 ஆயிரத்திற்கு மேற் பட்ட மாவோவாதிகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதே.வெறும் படை பலத்தின் மூலம், இந்தப் போரில் வெல்ல முடியாது என்பது, பாதுகாப்பு அதிகாரிகளின் ஒருமித்த கருத்து.

சத்தீஸ்கர் டி.ஜி.பி., விஷ்வ ரஞ்ஜன் கூறுகையில், 'படைபலத்தைப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாவோவாதிகளுக்கு நெருக்கடி மட் டுமே கொடுக்க முடியுமே தவிர, அவர்களிடம் போரிட்டு வெல்ல முடியாது' என்கிறார். காஷ்மீரை முன்னுதாரணமாகக் காட்டி, பேச்சுவார்த்தைகளால் தான் பிரச்னையைத் தீர்க்க முடியும் என, அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

நிலைமை இவ்வாறு இருக்க, மத்திய உள்துறை அமைச்சரோ, 'மூன்று ஆண்டுகளில் மாவோவாதிகளை அழித்து விடுவோம்' என, பிடிவாதமாக கூறுகிறார். ஏப்ரல் 6 தாக்குதலுக்கு பின் அவர் வெளியிட்ட அறிக்கையில், 'இனி பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை.'பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பேசினால், 76 வீரர்களின் உயிர்த் தியாகத்தை கேலி செய்வதாக ஆகிவிடும்' என்கிறார். முழு வீச்சில் உள்நாட்டுப் போர் உருவாவதற்கான வாய்ப் புகளைக் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு பின்னடைவுக்குப் பின்னும், அடக்குமுறைகளை அதிகரிக்கும் திசையில் மத்திய அரசு பயணிக்கிறது.இந்த ராமாயணம் 2ல், யார் எந்த கதாபாத்திரம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கனிம நிறுவனங்கள் என்ற சாதுக்கள், இப்பகுதியில் எப்போது குடியேறப் போகின்றனர் என்பது தெரியவில்லை.இந்த ராமாயணமும், கம்பர் எழுதியதைப் போல், முடிவுக்கு வருமா என்பதையும் இப்போது சொல்ல முடியாது. ஏனெனில், இந்த முறை ராட்சதர்கள், நாட்டில் 223 மாவட் டங்களிலிருந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்; ராமனின் கைகளும், ஜனநாயகத்தால் கட்டப்பட்டுள்ளன.எப்படி செயல்படுகின்றனர் மாவோவாதிகள்?மாவோவாதிகளில், 5,000 பேர், இந்திய ராணுவத்துக்கு இணையாக பயிற்சி பெற்றுள்ளனர்; மேலும், 5,000 பேர், அடிப்படை பயிற்சி பெற்றுள்ளனர்; 50 ஆயிரம் பேர், ஆயுதப் பயிற்சி மற்றும் கண்ணி வெடி வைப்பதில் பயிற்சி பெற்றுள்ளனர் என, போலீசார் கணக்கிட்டுள்ளனர்.

ஆயுதங்கள்: ஒவ்வொரு மாவோவாத கம்பெனியும், நான்கு இலகு ரக இயந்திர துப்பாக்கி, எஸ்.எல். ஆர்.,கள், 'இன்சாஸ்' ரைபிள்கள், ஏ.கே., ரக துப்பாக்கிகள், சிறு பீரங்கிகள் மற்றும் ஆர்.பி.ஜி., துப்பாக்கிகள் ஆகியவை வைத் துள்ளனர். இது கிட்டத்தட்ட, இந்திய ராணுவத்திற்கு இணையாக உள்ளது.தாக்குதல் முறைகள்: வாகனங்களால் இடித்து தள்ளிவிட்டு தப்பி செல்வது, பதுங்கியிருந்து தாக்குவது, புத்திசாலித்தனமாக செயல்பட்டு பாதுகாப்பு படையினரின் கவனத்தை திசை திருப்புவது, சாலையில்லாத பகுதிகளில் கண்ணி வெடிகள் வைப்பது.சாதகங்கள்: ஆயுதங்களைக் கடத்தவும், புலனாய்வுப் பணிகளுக்கும் உள்ளூர் மக்கள் ஆதரவு. எப்போது வேண்டுமானாலும் கூடி, கலையும் போர்க் குழு. நிலப்பகுதிகள் குறித்த பரந்த அறிவு.

கட்டுரை எழுதிய நான் ஒரு பிராமணன் தாழ்த்தபட்ட உழைக்கும் மக்களின் எதிரி: நன்றி: கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு அவர்களே.

நன்றி தினமலம் நாளிதழ்.

இந்திய அரசு பயங்கர வாதத்திற்கு சரியான தண்டனை.


புதுடெல்லி:சட்டீஷ்கர் மாநிலம் தண்டே வாடாவில் இரண்டு தினங்களுக்கு முன்பு சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் மீது நடந்த தாக்குதலை நடத்தியவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என அத்தாக்குதலில் காயமடைந்து உயிர்தப்பிய சி.ஆர்.பி.எஃப் படை வீரர் கூறியுள்ளார்.கடுமையாக காயமுற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிட்சையிலிருக்கும் சி.ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் ஆதித்யாசிங்(வயது 21) என்பவர்தான் இதனை தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குப் பிறகு அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று உறுதிச்செய்த பின்னரே மாவோயிஸ்டுகள் திரும்பிச் சென்றனர். அப்பொழுது ஆதித்யாசிங் தான் இறந்தது போல் நடித்துள்ளார். மேலும் ஆதித்யா சிங் கூறியதாவது: "நவீன ஆயுதங்களை மாவோயிஸ்டுகள் வைத்திருந்தனர். மோதல் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது.

மாவோயிஸ்டுகள் எல்லா இடத்திலும் வெடிக்குண்டுகள் வைத்திருந்தனர். தாக்குதல் நடந்தபொழுது நாங்கள் திருப்பித் தாக்கினோம். நான் மட்டும் 120 குண்டுகளை சுட்டேன். அவர்களில் சிலர் குண்டடிப்பட்டு கீழே விழுந்தனர். துப்பாக்கிக் குண்டுகள் தீர்ந்தவுடன் வேறொரு இடத்திற்கு மாறினோம். அங்கே மாவோயிஸ்டுகள் வெடிக்குண்டு வைத்திருந்ததால் அது வெடித்து பல சி.ஆர்.பி.எஃப் ஜவான்களும் கொல்லப்பட்டனர். வெடிக்குண்டு வெடித்ததைத் தொடர்ந்து நான் நினைவிழந்தேன்.

மாவோயிஸ்டுகள் எனக்கு அருகில் வருவதை நான் அரை மயக்கத்தில் கண்டேன். அவர்களில் பெண்கள் அதிகமிருந்தனர். நான் இறந்துவிட்டேனா என்பதை உறுதிச்செய்ய என்னை உதைத்துப் பார்த்தார்கள். அப்பொழுது நான் உணர்வில்லாதவன் போல் கிடந்தேன். நான் இறந்துவிட்டேன் எனக்கருதி அவர்கள் என்னை விட்டுச்சென்றனர். நான் என்னுடைய சக படைவீரர்களின் உடல்களுக்கு மத்தியில் கிடந்தேன்.

சுற்றுவட்டாரத்தில் மிகக்குறைவான ஆதிவாசிகளே உள்ளனர். அவர்களுக்கு எங்களுக்கு உதவ பயம். சி.ஆர்.பி.எஃப் உதவிக்காக வரும் வரை நான் இரத்தம் வெளியேறிக் கிடந்தேன்." இவ்வாறு ஆதித்யா தெரிவித்தார்.ஆதித்யா சிங்கிற்கு நிறைய குண்டுகள் தாக்கியுள்ளன. அவருடைய இடது கண்ணின் பார்வை நஷ்டமடைந்துள்ளது. ஆதித்யா இரண்டு குழந்தைகளின் தந்தையாவார்.

முஸ்லிம் சமுதாயமே உணர்ந்துகொள்:
இந்திய அரசு நடத்தும் பயங்கரவாதத்திற்கு சரியான தண்டனை. இந்த இதயம் அழுகிய காவல் துறை கயவர்கள் முஸ்லிம்கள் மேல் கட்டவிழ்த்து விட்ட பயகரவாத தாக்குதல்களுக்கு முஸ்லிம்களால் பதில் சொல்ல தென்பும் திராணியும் இல்லாது இந்த நீதிமன்ற கயவர்களை நாடி நீதியும் கிடைக்காமல் எத்தனை முஸ்லிம் மக்களும் தாழ்த்த பட்ட மக்களும் அலை கழிக்க பட்டார்கள். அவர்களது பிரார்த்தனைக்கு கிடைத்த பலன். முஸ்லிம் தலைவர்கள் போலி ஜனநாயகம் போசி முஸ்லிம்களை பாதுகாக்கிறோம் என்று நேரத்தை வீண் செய்யாமல் ஒரு ஆயூத போராட்டத்தை நோக்கி போனால் தான் இதற்க்கு ஒரு தீர்வு கிடைக்கும். சிந்திப்பார்களா? இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்று சொல்லி முஸ்லிம்களை ஏமாற்றி கருவறுக்க பார்கிறார்கள். இந்தியாவில் மத சார்பின்மை என்பது ஏட்டளவில் தான் உள்ளது. இதனால் இந்த ஒட்டு பொருக்கி அரசியல் வாதிகளை நம்பாமல். சீக்கிரமாக ஒரு ஆயூத போராட்டத்திற்கு தயாராகுங்கள். இலையேல் எதிர் காலத்தில் இந்தியாவில் முஸ்லிம் என்றொரு சமுகம் இருந்ததா என்று கேட்க்க வேண்டி வரும்.
Read more...

சனி, 27 மார்ச், 2010

ஹிந்து சாமியார் ஓஷோ ராஜனீஷ் ஒரு பார்வை.


1981-ம் ஆண்டு. மருத்துவத்துக்காக அமெரிக்கா சென்ற ரஜனீஷ் , சீடர்களின் அன்புக்கு இணங்க ஆசிரமம் தொடங்கி அங்கேயே தங்கினார். ரஜனீஷின் புரட்சிக் (கிறுக்கு தனமான) கருத்துகளால் விரைவிலேயே ஆசிரமம் புகழடைந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கினர். ‘ரஜனீஷ்புரம்’ எனப் பெயரிடப்பட்ட ஆசிரமத்தில் வீடுகள், தியான மண்டபங்கள்,சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் தொடங்கப்பட்டு, குட்டியாக ஒரு விமான நிலையமும் ஏற்படுத்தப்பட்டது. பரிசுகளாக வந்த 93 ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் தினம் ஒன்றைப் பயன்படுத்திய ரஜனீஷ் , ஒரு தனி ராஜாங்கமே நடத்திக்கொண்டு இருந்தார். (நம்ம சாமியாருங்க எல்லாருமே இப்படிதான் போல... ஹீ...ஹீ... அமெரிக்க சனமும் எங்கள மாதிரிதான்... என்டுறதுல ஒரு சந்தோஷம்... :D)

தங்களின் சொத்துக்களை ஆசிரமத்துக்கு எழுதிவைத்து ரஜனீஷிடம் தஞ்ச மடையும் அமெரிக்கர்கள் அதிகரிக்கவே அதிர்ச்சியடைந்த அமெரிக்க அரசு, ஆசிரமத்தை முடக்கும் வேலைகளில் இறங்கியது. ரஜனீஷின் ஆசிரமத்தில் 1984-ம் வருடம் ஆயிரக்கணக்கான சீடர்கள் தற்கொலைக்கு முயன்றதாக பொய்க்குற்றச் சாட்டைப் பரப்பியது. அதே நேரம், ஆசிரம நிர்வாகி ஷீலா பெரும் சொத்துக்களுடன் தலைமறைவாகிவிடவே, ஆசிரமத்துக்குள் நுழைந்தது போலீஸ் ‘அமெரிக்க அரசு சதிவலை பின்னுகிறது, தப்பிச் செல்லுங்கள்’ என்று சீடர்கள் ரஜினீசிடம் கெஞ்சினார்கள். அத்தனை நாளும் சீடர்களுக்கு போதித்த பிரச்னைகளைக் கண்டு விலகி ஓடாதீர்கள்... எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்’ என்ற மந்திரத்தையே உரக்கச் சொன்னார் ரஜனீஷ்.ஆசிரமத்தில் ஊழலும், விசாவில் மோசடியும் இருப்பதாக ரஜனீஷை கைது செய்துவலுக்கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றியது அமெரிக்க அரசு.
(இது தான் அமெரிக்க இப்படி இருக்குது... நாம...)

1931-ம் ஆண்டு மத்தியப் பிரேதசத்தில் குச்வாடா என்ற சிறிய கிராமத்தில் ஜெயின் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ரஜனீஷ் சந்திரேமாகன். ‘ஏழாவது வயதில் மரணமைடந்து விடுவார்’ என ஜோசியர் கணிக்கவே, பயந்துபோன பெற்றோர், அரை பாட்டி வீட்டுக்கு அனுப்பினர். ஏழு வயதுவரை சுதந்திரப் பறவையாகத் திரிந்தவருக்கு இனி மரணம் வராது என ஜோதிடர் சொன்னபிறகே படிக்கவைத்தனர்.

1953-ம் வருடம் தத்துவம் படித்தபோது, தன்னிடம் ஒரு தனித்துவம் இருப்பதாக நினைத்து கொண்ட ரஜனீஷ், பிறகு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்ததும், சிறு கூட்டத்தினரிடம் பேசத் தொடங்கினார். அந்த வட்டம் விரிவடையவே, வேலையை விடுத்து, ‘ஹிந்து பகவான் ரஜனீஷ் ’ ஆக மாறி மும்பையிலும் பின்னர் பூனே விலும் ஆசிரமம் அமைத்துப் பரபரப்பாகச் செயல்படத் தொடங்கினார்.ஹிந்து மதம் செக்ஸுக்கு அதிகக் கட்டுப்பாடுகள் விதித்தபோது, ‘செக்ஸை ஒரு பிரச்னையாக நினைத்து விலகி ஓடாதீர்கள். அதனை முழுமையாக அனுபவித்து வெற்றிகொள்ளுங்கள்’ என்று ரஜனீஷ் சொன்னது இந்தியா வெங்கும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியது. ‘செக்ஸ் சாமியார்’ என்ற பெயர் சூட்டி, கடுமையாக‌ விமர்சித்தனர். (ம்.. அதே தனித்துவம். இப்போது கூட இதே டெக்னிக்தான்..)

இந் நேரம் கடுமையான முதுகுவலியும் சர்க்கரை நோயும் ஏற்படவே, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார், அங்கே மக்களது(முட்டாள்களின்) ஆதரவுடன் ஹிந்து ஆன்மிகப் புரட்சியை உண்டாக்கவே மறுபடியும் நாடு கடத்தப்பட்டார். செக்ஸ் புரட்சியாளர், போதை அடிமை என அமெரிக்கா திட்டமிட்டு வதந்தி பரப்பியிருந்ததால், சுற்றுலா விசாவில் ஜேர்மனி போன ரஜனீஷ் , துப்பாக்கி முனையில் நாடு கடத்தப்பட்டார். முதலில் குடியுரிமை வழங்கிய உருகுவே அரசாங்கம் அமெரிக்காவின் கடன் மற்றும் பொருளாதாரத் தடை மிரட்டலால்
ரஜனீஷிக்கு வழங்கிய குடியுரிமையைத் திரும்பப் பெற்றது.
(ஆ..ஊன்டா.. பொருளாரதடையை கைல எடுத்துடுவாங்க... ஆனா... சீனாட்ட... :P..P )

அதனால், 1987-ம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி பூனே ஆசிரமத்தில் பணியைத் தொடர்ந்தார். ரஜனீஷ் என்ற பெயரை, ‘ஓஷோ’ என்று மாற்றி, ‘வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள், பிரச்னைகளைக் கண்டு விலகி ஓடினால் அது இன்னும் பெரிதாகும். அதனால், எதிர்த்து நின்று வெற்றி பெறுங்கள்’ என்று தினமும் ஒரு வேற்று வேதாந்தத்தை போதித்து பிரசங்கமும் தியானமும் நடத்தி மக்களிடம் நம்பிக்கை விதைக்க முனைந்தார்.
1990-ம் ஆண்டு நாடித்துடிப்பு குறையத் தொடங்கிய நேரத்தில், ‘மரணத்தில் இருந்து என்னை தப்பவைக்க நினைக்காதீர்கள், நான் அதனை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்’ என்று பெரிய தத்துவ முத்தை உதிர்த்து விட்டு ஹிந்து மதத்தின் பெயர் சொல்லி இந்த உலகில் ஏய்ட்ஸ் அதிகரிக்க காரணமாக இருந்து கடைசியில் பரிதாபமாக மருத்துவ சிகிச்சயை மறுத்து மரணமடைந்தார்.

ஞாயிறு, 21 மார்ச், 2010

எழுத்தாளர் ஜெயமோகனது பயனக்கட்டுரைக்கு ஒரு விளக்கம்.


ஹிந்துத்துவா சிந்தனை கொண்ட எழுத்தாளர் ஜெயமோகனது சுத்தம் குறித்த தத்துவப் பித்தத்தைப் பார்க்கும் போது இந்து முன்னணியின் புகழ் பெற்ற மற்றொரு பித்தம் நினைவுக்கு வருகிறது. “இந்துக்கள் கிறித்தவராகவோ, இசுலாமியராகவோ மதம் மாறினால் பாரதப் பண்பாடும் மாறிவிட்டது, பாரதத்தின் புனிதம் கேட்டுவிட்டது என்று கூச்சல் போடும் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கமும் அதன் துணை அமைப்பான இந்து முன்னணி அமைப்பும் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் அதிகாலையில் குளித்து வாசல் தெளித்து கோலமிட்டு, முற்றத்தில் இருக்கும் துளசி மாடத்தை சுற்றி வந்து வழிபாடு நடத்தும் இந்த பித்தத்தை சகல இந்துக்களுக்கும் பொருத்திப் பார்த்தால் பெரும்பாலானோர் இந்துக்கள் இல்லை என்றாகிவிடும்.

முதலில் முற்றம், துளசிமாடம் போன்றவையெல்லாம் இருக்க வேண்டுமென்றால் வீடும், வீட்டைச்சுற்றி விசலாமான இடமும் வேண்டும். இதிலேயே முக்கால்வாசி இந்துக்கள் அவுட். அப்புறம் மீனவர் குடிசை முன்பு கருவாடும், கோனார் வீட்டு முன்பு ஆட்டுப்புழுக்கைகளும், கறிக்கடை தேவர் வீட்டு முன்பு உப்புத் துண்டமும், சென்னை சேரி மக்களின் குடிசை முன்பு குழந்தைகளின் கக்காவும், விவசாயி வீட்டு முன்பு சாணமோ, தானியமோ இருக்கும். ஐயர் வீட்டு முன்புதான் துளசி மாடம் இருக்கும். உழைக்கும் இந்துக்களின் வீட்டை அவர்களது உழைப்பின் விளைபொருள் அலங்கரிப்பது இந்து முன்னணிக்கு மட்டுமல்ல ஜெயமோகனுக்கும் அருவருப்பாக இருக்கிறது.

சென்னையின் சேரிப்பகுதிகளில் மிகவும் நெரிசலான இடங்களில் பல இலட்சம் மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு வாழ்கின்றனர். 100, 200 சதுர அடிகளில் குடும்பங்கள் கூண்டில் அடைபட்ட கோழிகள் போல எல்லா வேலைகளையும் முடிக்கின்றனர். வீட்டின் இடத்தை பல விதமான சில்லறைப்பொருட்கள் ஆக்கிரமித்திருக்கும். சமைக்க, துணி துவைக்க, குளிக்க, படுக்க எல்லாம் ஒரே இடம்தான். ஒரு சேரியில் சில ஆயிரம் மக்கள் இப்படி வாழம் போது தெருவெங்கும் குப்பைகளும், கழிவு நீரும், எல்லாம் கலந்துதான் இருக்கும். திருமணப் பந்தல், சாவுக்கான பந்தல், விருந்துக்கான சமையல் எல்லாம் தெருவில்தான். பார்க்க ரணகளமாகத்தான் இருக்கும்.நகரங்களை ஒட்டி வாழும் மீனவர் குடிசைகளும் இப்படித்தான் இருக்கின்றன. விசாலமான கடல் சார்ந்த இடங்கள் இன்று அவர்களது பயன்பாட்டிற்கு இல்லை. இருக்கும் குடிசை கூட தனது பரப்பளவை சுருக்கிக்கொண்டேதான் வருகிறது.

நகரத்து சேரிகளில் இருக்கும் நெரிசல் உருவாக்கும் எல்லா துன்பங்களையும் சகித்துக் கொண்டு அந்த மக்கள் இந்தப் பாழாய்ப் போன நகரின் மேட்டுக்குடி வர்க்கத்தினருக்கு எல்லா சேவைகளையும் செய்கின்றனர். அந்த மக்களின் வாழ்விடத்தைப் பார்த்து குப்பைக் கூளமென்றும் அதற்கு மனப்பயிற்சி இல்லையென்றும் எக்காளமிடும் ஜெயமோகன் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தனிவீடுகட்டி வாழும் வாழ்க்கையை துறந்து விட்டு சென்னை வியாசர்பாடியில் ஒரு வருடம் வாழ்ந்து பார்க்கட்டும்.

சனி, 13 மார்ச், 2010

பேராசிரியர் டாக்டர் பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவினார்.


கருத்தம்மா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பெரியார்தாசன். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கடவுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாகயிருந்தவர். தனது பெயரையே நாஸ்திக சிந்தனையாளரான தந்தை பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற வார்த்தையை இணைத்துக் கொண்டவர்.


தமிழகத்தில் பிரபலமான பெரியார்தாசன் பல்வேறு மேடைகளில் சமூக சிந்தனை கருத்துக்களை பரப்பியவர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இஸ்லாத்தை பற்றி பலகாலமாக ஆய்வுச்செய்த பெரியார்தாசன் கடந்த வியாழக்கிழமை(மார்ச் 11) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா மையத்தில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.


தனது பெயரை அப்துல்லாஹ்(அல்லாஹ்வுக்கு அடிமை) என்று மாற்றிக் கொண்டார். இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டதைக் குறித்து டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) கூறியதாவது: "இவ்வுலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவனிடமிருந்து நேரடியாக இறக்கியருளப்பட்ட வேதத்தைக் கொண்டுள்ளது. நான் பல்வேறு மதங்களின் வேதங்களையும் ஒப்பீட்டு ஆய்வுச் செய்தேன். அதில் இஸ்லாத்தைத் தவிர மற்ற அனைத்து நூல்களுமே இறைவனிடமிருந்து நேரடியாக அருளப்பட்டது அல்ல. குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து எந்த வடிவில் முஹம்மது நபிக்கு அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதோ அதே வடிவில் இன்றும் உள்ளது. நான் நாத்திகக் கொள்கையின் மூலமாக இந்தியாவில் அனைவருக்கும் நன்றாக அறிமுகமானவன். இஸ்லாம்தான் இவ்வுலகிலும், மறுவுலகிலும் மனித இனத்திற்கு பொருத்தமான மார்க்கம் என்பதை புரிந்துக்கொண்டேன்." என்றார்.


டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) இன்று(மார்ச் 13) உம்ரா செய்வதற்காக புனிதஸ்தலமான மக்காவிற்கு செல்கிறார். பின்னர் மதீனாவும் செல்வார். அல்லாஹ் அவருடைய நல்லச் செயல்களை பொருந்திக் கொண்டு கடந்த கால பாவங்களை மன்னித்து நேரான வழியில் செலுத்துவானாக! என பிரார்த்திப்போம்.
நன்றி அரப் நியூஸ், மார்ச் 12, 2010