ஞாயிறு, 31 ஜனவரி, 2010

பார்பனர்கள் பிரிட்டீஷாருக்கு சமரம் விசியவேளையில்: காந்தியின் உயிரை காத்த முஸ்லிம்.


பாட்னா:1917 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் இரு தலைவர்கள்- ஒருவர் மகாத்மா காந்தி மற்றொருவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். இருவரும் பீகார் மாநிலத்தின் அன்றைய சம்பரன் மாவட்டத்தின் தலைநகராக விளங்கிய மோடிஹாரிக்கு செல்கின்றார்கள்.

இண்டிகோ பண்ணைத் தோட்டத்தில் வேலைப்பார்த்து வந்த தொழிலாளர்களின் மோசமான நிலையை கண்டறிவதற்காக சென்றார்கள். அவர்களின் நிலையைக் கண்டு அதற்கு காரணமான பிரிட்டீஷ் அரசிற்கெதிரான போராட்டத்தை துவக்கினார்கள். இதுதான் பிரிட்டீஷாருக்கு எதிராக காந்தியடிகள் துவக்கிய முதல் போராட்டமாகும்.இந்த கால கட்டங்களில் பார்பனர்கள் பிரிட்டீஷாருக்கு சேவகம் செய்து இந்தியாவை காட்டிகொடுத்து உயர் பதவிகளில் இருந்து வந்தார்கள்.

இண்டிகோ பண்ணைத் தோட்டத்தின் மேலாளராக பொறுப்பு வகித்த வெள்ளைக்காரன் காந்தியை இரவு உணவுக்கு அழைக்கிறான். காரணம் காந்தி சாப்பிடப்போகும் உணவில் விஷம் கலக்கப்பட்டு அவரைக் கொல்வதுதான் அவனது நோக்கமாகும். அந்த பிரிட்டீஷ் மேலாளரான ஆங்கிலேயனிடம் சமையல்காரராக வேலைப்பார்த்தவர் பதக் மியான். அவரிடம் ஒரு கோப்பை பாலில் விஷம் கலந்து காந்திக்கு கொடுக்குமாறு கூறுகிறான்.ஆனால் பதக் மியானின் தேசப்பற்று இந்தக் கொடுஞ்செயலுக்கு இடம் தரவில்லை. அவர் கோப்பையை எடுத்துச்சென்று காந்தியிடம் விஷயத்தை கூறிவிடுகிறார். இதற்கு டாக்டர் ராஜேந்திரபிரசாத் நேரில் கண்ட சாட்சியாவார்.

இதன் மூலம் பதக் மியான் காந்தியின் உயிரை காப்பாற்றுகிறார். காந்தியின் உயிர் காப்பாற்றப்பட்டதால் காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அங்கமாக விளங்கி இந்தியாவின் தேசத்தந்தை எனப் போற்றப்படுகிறார். ஆனால் இச்சம்பவத்திற்கு பின்னர் பதக் மியான் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாயிற்று.

பதக் மியான் காந்திஜிக்கு விஷம் கொடுக்காததால் பிரிட்டீஷ் மேலாளர் கடும் கோபம் அடைந்து பதக் மியானை சிறையிலடைத்து கடுமையாக சித்திரவதைச் செய்கிறார். அவருடைய வீடு சுடுகாடாக மாற்றப்பட்டது. பின்னர் அவரும் அவருடைய குடும்பமும் அவர் வாழ்ந்து வந்த கிராமத்தை விட்டும் துரத்தப்பட்டனர். இந்திய தேசபிதாவின் உயிரைக் காப்பாற்றிய அந்த மனிதர் மறக்கடிக்கப்பட்டார்.

ஆனால் காந்தியைக்கொன்ற நாதுராம் கோட்சேவை தெரியாத நபர் இல்லை எனலாம். 1950 ஆம் ஆண்டு டாக்டர் ராஜேந்திரபிரசாத் ஜனாதிபதியாக இருக்கும்பொழுது மோடிஹாரிக்கு சுற்றுப்பயணம் சென்றபொழுது பதக் மியானின் தன்னலமற்ற தியாகத்திற்காக 24 ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக அளிக்க உத்தரவிட்டார்.

60 ஆண்டுகள் தாண்டிவிட்டன, இதுவரை மறைந்த ஜனாதிபதியின் உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. மறக்கடிக்கப்பட்ட அந்தத்தியாகி 1957 ஆம் ஆண்டு மரணித்துவிட்டார். தற்பொழுது அவருடைய ஐந்து பேரர்களும் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள அக்வா பர்ஸாவ்னி கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். தனது அன்றாட வாழ்க்கைக்காக இடம் புலர்ந்து தொழிலாளர்களாக வேலைப்பார்த்து வருகிறார்கள்.ஏனெனில் இவர்களுக்கு கல்வியறிவு இல்லை. அவர்கள் அரசு அதிகாரிகளைச் சென்று பார்த்து முறையிட்டபொழுது அவர்களுடைய அனைத்து முயற்சிகளும் வீணானதுதான் மிச்சம்.

சமீபத்தில் இந்தியாவின் ஜனாதிபதியான பிரதீபா பாட்டீல் இவர்களின் பரிதாப நிலையை அறிந்து இந்தியாவின் முதல் ஜனாதிபதியால் அன்பளிப்பாகக் கொடுக்க உத்தரவிட்ட நிலம் அவர்களுக்கு கிடைக்க உறுதியளித்துள்ளார். இது காந்திஜியின் 62-வது நினைவுதினத்திற்கு எட்டு நாட்களுக்கு முன்பு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற பத்திரிகை பதக் மியான் குடும்பத்தின் மோசமான நிலையைப் பற்றி வெளியிட்ட கட்டுரையைப் படித்த பிறகு தான் பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டார்.

ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரி அர்ச்சனா தத்தா சம்பரன் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுகளுக்கு பீகார் அரசு ஜனாதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்துகிறதா என்பதை பற்றி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பீகார் முதல்வரும் இவ்விஷயத்தில் அக்கறையோடு திர்ஹுட் டிவிசனல் கமிசனருக்கு பதக் மியானின் குடும்பத்திற்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுமா அல்லது காந்திஜியின் அடுத்த நினைவுதினம் வரை கிடப்பில் போடப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

திங்கள், 25 ஜனவரி, 2010

பார்ப்பனர்கள் பார்வையில் ஈழப் பிரச்சினை.

பார்ப்பனர்களை அடையாளம் காண வேண்டுமானால் இரண்டு அளவுகோல்கள் இருக்கின்றன; அவற்றின் மூலம் அவர்களைப் பொறி வைத்துப் பிடித்துவிடலாம்.ஒன்று - சமூகநீதி தொடர்பானது, இன்னொன்று தமிழன் என்ற இனக் கோட்பாடு; இரண்டிலும் அவர்கள் தங்களைப் பார்ப்பனர்கள் என்பதைக் காட்டிக் கொள்வார்கள்.இப்பொழுது மிக முக்கியப் பிரச்சினையாக எழுந்துள்ள ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் அண்ணாவின் பெயரைத் தம் கட்சியில் பொறித்து வைத்துள்ள செல்வி ஜெயலலிதா வானாலும், மார்க்சியம் பேசுகின்ற இந்து ராம் ஆனாலும் பத்திரிகா தர்மம் பேசுகின்ற சோ ராமசாமியானாலும் - இந்த அக்ரகாரத் திருமேனிகள் இந்தப் பிரச்சினையில் சுருதி பேதம் இல்லாமல் ஒரே வாசிப்பாக இருப்பதை நாடு அறிந்து கொண்டுதானிருக்கிறது.இலங்கையிலிருந்துகூட அரசு வானொலி சோ ராமசாமியைத் தேடிப் பிடித்துதான் பேட்டி காண்கிறது. அவர் போன்றவர்கள் கூறும் கருத்துகள்தானே அவர்களுக்குத் தேவை. இலங்கை அதிபரின் மூத்த ஆலோசகர்கூட கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதா பேசியிருப்பதை நினைவில் வையுங்கள் என்று எடுத்துக்காட்டுவதையும் கவனித்தால், இந்தப் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் தமிழர் களால் பிழைத்துக் கொண்டிருந்தாலும்கூட, தமிழர்களைக் காட்டிக் கொடுப்பதில் எந்த அளவுக்கு ஆர்வ வெறி பிடித்த வர்களாக இருக்கின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.ஈழத்தில் முதலில் செய்யவேண்டியது போராளிகளை ஒடுக்குவதுதானாம். அதன்பின் பாதிக்கப்படும் மக்களுக்காகச் செய்யவேண்டியதுபற்றி யோசிக்கலாம் என்கிற தோரணையில் பேசியும், எழுதியும் வருகிறார்கள்.போராளிகளைப்பற்றி கொச்சைப்படுத்தவேண்டும் என்பதுதான் இந்தக் கும்பலின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இந்தப் போராளிகள் எந்தச் சூழ்நிலையில் தோன்றினார்கள்? எந்தக் காலகட்டத்தில் ஆயுதங்களை ஏந்தினார்கள் என்கிற திசையிலே தப்பித் தவறிக்கூட அவர்கள் சிந்திக்கமாட்டார்கள் - அந்த இடத்தின் பக்கமே தங்களின் பார்வையைச் செலுத்தமாட்டார்கள்.ஏதோ இந்தப் போராளிகள் தோன்றி ஆயுதங்களைத் தூக்கியதற்குப் பிறகுதான் சிங்கள அரசு தமிழர்களைக் கொன்று குவிக்க ஆரம்பித்ததுபோல ஒரு பித்தலாட்டப் பிரச்சாரத்தைச் செய்துகொண்டு வருகிறார்கள்.1938 இல் இருந்தே இலங்கைப் பிரச்சினை தொடங்கப் பட்டது. 1953-இல் 1983-இல் எல்லாம் என்ன நடந்தது என்பதைப்பற்றி இவர்கள் ஏன் வாயையோ, பேனாவையோ திறப்பதில்லை?தமிழன் மாமிசம் இங்கே கிடைக்கும் என்று சிங்கள வர்கள் விளம்பரம் செய்தது எல்லாம் எந்த அடிப்படையில் சிங்கள இராணுவம்!இவ்வாறு அரசு, போராளிகளைத்தான் தாக்குகிறது; அங்குள்ள தமிழர்களையல்ல என்பது போன்ற தோற் றத்தை இவர்கள் உருவாக்க முயலுகிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.வீடு வீடாகச் சென்று தேடுதல் என்ற போர்வையில் தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத் தினார்களே - அதுகூட போராளிகள்மீதான எதிர்ப்புதானா?தன் தாயையும், தன் மகளையும் தன்னெதிரே பாலியல் கொடுமைக்கு ஆட்படுத்தியபோது, மான உணர்ச்சி உள்ள எவரும் ஆயுதத்தைத் தூக்கமாட்டானா? பார்ப்பனர்களுக்கு வேண்டுமானால் அத்தகைய பிரச்சினைகளில் ரத்தம் சூடேறாது - ஒரு கரண்டி நெய்யின்மூலம் விபச்சார தோஷத் தைப் போக்கிக் கொள்வார்கள்! தமிழர்கள் அத்தகையவர்கள் அல்லவே!ஏதோ ஈழத் தமிழர்கள்மீதுதான் பார்ப்பனர்களுக்குத் துவேஷம் என்று கருதிவிடக் கூடாது. ஈழத் தமிழர்கள் என்பது ஒரு குறியீடு; மற்றபடி எந்த நாட்டில் வாழும் தமிழர்களும் பார்ப்பனர்கள் கண்களில் கருவேல் முள்ளைப்போல உறுத்தத்தான் செய்யும்.தைமுதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்றால், அவர்களின் நிலை என்ன? தமிழ் வழிபாட்டு மொழி என்றால் அவர் களின் பார்வை என்ன? தமிழனும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்றால், அவர்களின் செயல்பாடுகள் எத்தகையவை? அதே நிலைதான் ஈழத் தமிழர்ப் பிரச்சினையிலும்.தமிழர்களே, பார்ப்பனர்களை இதற்கு மேலுமா அடையாளம் காணத் தயங்குகிறீர்கள்?

ஹிந்து மதத்தில் தொடரும் தீண்டாமை

தனது 75-வது பிறந்த நாளை ஊர் ஊராகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் காஞ்சி ஜெயேந்திரர். திருச்சியில் 3 பெண்கள் கல்வி நிறு வனங்களில் ஜெயேந்திரரின் பிறந்தநாள் டிசம்பர் 17, 18, 19 தேதிகளில் அமர்க்களப்பட்டது. மாணவிகளிடம் ஆசிரியர்கள், ""யாரெல்லாம் தூரமாயிருக்கீங்களோ கை தூக்குங்க. இது சாமி சம்பந்தப்பட்ட விஷயம். யாராவது தீட்டாயிருந்து ஏதாவது தப்பாயிடிச்சின்னா தெய்வ குத்தமாயிடும்'' என்று சொல்ல, ""என்ன இப்படியெல்லாம் கேட்கு றாங்களே'' என்று மாணவிகள் பதறிப்போய், ஓரிருவர் கை உயர்த்தினர். அப்போது ஒரு மாணவி, இவ்வளவு சுத்தம், ஆச்சாரம் பார்க்குறவர் ஏன் மேடம் ஜெயிலுக் கெல்லாம் போகணும்? அந்த விஷயத்திலும் சுத்தமா இருந்திருக்கலாமே'' என்று சொல்ல, மாணவிகளிடம் சிரிப்பலை. இந்திராகாந்தி பெண்கள் கல்லூரியில் நடந்த பிறந்தநாள் விழாவுக்கு வந்த ஜெயேந்திரர் உற்சாக மனநிலையில் இருந்தார். சங்கரராமன் வழக்கின் சாட்சிகள் அடுத்தடுத்து பல்டி அடிக்கிற விவரம் வந்துகொண்டே இருந்ததால்தான் இந்த மனநிலை. ஜெயேந்திரரை வாழ்த்த மதுரை, திருப்பனந்தாள் ஆதீனங்களும், விஸ்வ இந்து பரிஷத் வேதாந்தம், பா.ஜ.க ஹெச்.ராஜா ஆகியோர் வந்திருந்தனர். எந்த மேடையிலும் பேச்சால் பொறி கிளப்பும் மதுரை ஆதீனம், தன்னுடைய தலைமையுரையில், ""பிறந்தநாள் கொண்டாடும் பெரியவாவை ( பொம்பளை பொருக்கி ஜெயேந்திரர்) இயேசு வடிவத்தில் பார்க்கிறேன். ஏன்னா இயேசு சிவப்பா இருப்பார். இவரும் சிவப்பா இருக்கிறார். இவரை நபிகள் நாயகத்தின் அவதாரமா பார்க்கிறேன்'' என மற்ற மதங்களை இழுத்துப்பேசியவர், ஜெயேந்திரர் நூற் றாண்டு வாழ, வந்திருந்தவர்களை கோஷம் போட வைத்தார்.ஜெயேந்திரர் ஏற்புரை வழங்கவில்லை. அருளுரை வழங்கினார். ""மிருகங்களைப் போல வாழாமல் மனிதர்களாய் வாழவேண்டும்'' என்று அவர் சொன்னது தான் ஹைலைட். விழாவில் நால்வருக்கு விருது வழங்கப்பட்டது. அதில் முக்கியமானவர், இளையராஜா. அவர் உட்பட எழுத்தாளர் விக்ரமன், வேதவிற்பன்னர் கிருஷ்ணமூர்த்திகனபாடிகள், சமூகசேவகர் ராதா கிருஷ்ணன் ஆகியோரை தொடவிரும்பாத ஜெயேந் திரர் ஆசி மட்டும் வழங்கிவிட்டு, தன் உதவியாளர் கையால்தான் விருதுகளைக் கொடுக்கச் செய்தார்.இளையராஜா பேசும்போது, ""இயேசு அவதாரம், நபி அவதாரம் என்றெல்லாம் மதுரை ஆதீனம் பேசினார். நீங்க யாருடைய அவதாரமாகவும் இருக்க வேண்டாம். பெரியவாளாகவே இருங்க'' என்றவர், மகாபெரியவர் காலத்திலிருந்தே தனக்கு காஞ்சி மடத்துடன் நெருக்கம் இருப்பதைக் குறிப்பிட்டுவிட்டு, ""எனக்கு இசை தெரியாது. இன்னமும் இசையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்'' என தத்துவார்த்தமாகப் பேசினார்.திருச்சி நேஷனல் கல்லூரியிலும் சீதாலட்சுமி கல்லூரியிலும் ஜெயேந்திரர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. எடைக்கு எடை தங்கம், வெள்ளி எனக் கொடுக்கப்பட்டதால் ரொம்பவும் சந்தோஷத்தில் மிதந்தார் காவி கட்டிய துறவி.

காஞ்சி ஜெயேந்திரர் குருக்களும், தேவநாதன் குருக்களும் உரையாடல்.

ஜெயேந்திரன் : அம்பி, தேவநாதா, நம்ம காஞ்சிபுரத்து பெருமையை பரப்புறதுல நீயும், என்னோட சேர்ந்துட்டே போலிருக்கே!
தேவநாதன் : எல்லாம், தாங்கள் காட்டிய வழி சுவாமி!
ஜெயேந்திரன் : போடா, அபிஷ்டு. நானாவது மடத்துக்குள்ளே அப்படி இப்படின்னு இருந்தேன். நீ கர்ப்பக கிரகத்துக்குள்ளேயே திருவிளை யாடல்களைத் தொடங்கிட்டியே, அபார துணிச்சல்டா, நோக்கு!
தேவநாதன் : இதுக்கு என்ன சாமி, துணிச்சல் வேண்டியிருக்கு. நம்ம பகவான்கள் செய்யாததையா நாம் செய்துட்டோம். பகவான்கள் கற்பழிப்பு நடத்தினா, ‘புனிதம்’ங்கிறான்! நாம் செய்தால் கிரிமினல் குற்றம்ங்கிறான். சே... பகவானோட நெருங்கி இருக்குற, நமக்கு, இந்த அற்ப உரிமைகள் கூட கிடையாதா?
ஜெயேந்திரன் : விவரம் தெரியாமப் பேசாதடா அம்பி! பகவானே, இப்ப நேரில் வந்து அந்த திருவிளையாடல்களை நடத்துனா, சட்டத்துலே யிருந்து, எவனும் தப்பிக்க முடியாது தெரியு மோன்னோ?
தேவநாதன் : பகவான் தப்ப முடியாதுங்கிறது, சரிதான்! ஆனா, நீர் தப்பிட்டேளே! கோயிலுக் குள்ளேயே சங்கர்ராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் உங்களுக்கு எதிரான சாட்சிகள் எல்லாம்,பல்டி அடிக்க ஆரம்பிச்சுட்டாளே! தி.மு.க. ஆட்சியிலே, காத்து உங்க பக்கம் வீசுறதே!
ஜெயேந்திரன் : அம்பி, அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கனும்டா! இப்போ நேக்கு எதிரான சாட்சியெல்லாம் பல்டி அடிச்சுட்டாளே; இதை எவனாவது எதிர்த்து வாயை திறக்குறானா பாத்தியா? ஒரு பயலும் பேச மாட்டான். சுப்ரமணியசாமியி லிருந்து சோ ராமசாமி வரைக்கும் எல்லோரும் வாயை மூடிட்டா... என்னைக் கைது செஞ்ச அந்த அம்மாளே, இப்போ, எனக்கு எதிரா வாய திறக்குறதுல்லேயே! போலீசு எல்லாம்கூட இப்ப என் பக்கம் சாஞ்சிடுச்சு! ‘தினமணி’, ‘தினமலர்’ எல்லாம் மீண்டும் நம்மள புகழத் தொடங்கிட்டானே! கவனிச்சியோ!
தேவநாதன்: ம்... கவனிச்சுண்டுதான் இருக்கேன்.... தினகரன் எரிப்பு வழக்குல கூட குற்றவாளி எல்லாம் தப்பிச்சுட்டா! போலீசே பல்டி அடிச்சுடுத்து. அதேபோல உங்களுக்கும் அடிக்குது யோகம்!
ஜெயேந்திரன் : அம்பி, தினகரன் எரிப்பு வழக்குல, போலீசே பல்டி அடிச்சத துக்ளக் சோ கண்டிச்சு எழுதிட்டான். ஆனால் என் விஷயத்துல கண்டுக்கவே இல்லயே கவனிச்சியோ?
தேவநாதன் : அது, எப்படி சாமி கவனிக்காம இருப்பேன். நான் கர்ப்பகிரகத்துக்குள்ளே ‘கசமுசா’ செய்தேனே; அதை நம்ம ராமகோபாலன்னோ, துக்ளக் ராமசாமியோ, சு.சாமியோ கண்டுக்கலியே? இந்து விரோதின்னு எவனாவது சுண்டு விரலை அசைத்தானா? இல்லையே, சாமி! இப்படி நமக்குள்ள ஒரு நல்ல‘அன்டர்ஸ்டான்டிங்’ இருக்கற துனாலதான் நம்ம, வண்டி ஓடிகிட்டு இருக்கு. ஆனா லும், நீங்க தப்பிச்சுட்ட மாதிரி, நான் தப்பிக்கிற துக்கும், ஏதேனும் வழி செய்ய மாட்டேளா சாமி.
ஜெயேந்திரன்: மடையா, செல்போன ஆத்துலேயே விட்டுட்டு வராம - ஏண்டா கர்ப்ப கிரகத்துக்குள்ளே எடுத்துட்டு போன! பூணூலை மட்டும் மாட்டிட்டு வந்தா போதாதோ? அது தானே வினையா வந்து‘முடிஞ்சுருச்சு’! சமஸ்கிருத மந்திரம் மட்டும் ஒலிக்க வேண்டிய இடத்துல, ‘செல்போன்’ அபசுரம் கேட்கலாமோ!
தேவநாதன்: நீங்க சொல்றது சரிதான் சாமி! ஆனா ‘பார்ட்டிகளை’அவசரமாக அழைக் கிறதுக்கு, செல்போன் வேணுமே சாமி. பக்தர்கள், கூட்டம் இல்லாத நேரம்பார்த்து, பகவான் மட்டும் தனியா இருக்குற நேரத்துல அவசரமா ‘பார்ட்டிகள’ அழைக்கணும்னா,பகவானையா அனுப்ப முடியும்? அவன்தான் போவானா? அவன் இருக்கிற இடத்துல கல்லா தானே உட்கார்ந்திருப்பான்! விவரம் தெரியாம பேசறேளே! அவசரத்துக்கு செல்போன் உதவுமே தவிர,ஆண்டவனா உதவுவான்?
ஜெயேந்திரன்: அந்த ஆண்டவன்தான் எதுக்கும் உதவ மாட்டான்ங்குறது நமக்குத் தெரியாதா? நன்னாவே தெரியும். அதனால் தானே, நீயும், நானும் மடத்தையும் கருவறையையும் நமக்கு வசதியா பயன்படுத்த முடியுது! ஆனா, காலம் கெட்டுப் போச்சுடா! இனி நம்ம இஷ்டம்போல விளையாட முடியாது போலிருக்கு.
தேவநாதன் : என்ன சொல்றேள்?
ஜெயேந்திரன் : கர்ப்பகிரகம், மடத்துக்குள்ளே எல்லாம், வீடியோ கேமராவைப் பொருத் திட்டான்னு வச்சுக்கோ, நம்ம கதை அம்போ தான்!
தேவநாதன்: அந்த அளவுக்கு ஏமாந்துருவோமா? அதெல்லாம் சாஸ்திரத்துக்கு விரோதம்னு நம்ம, இராமகோபாலன், துக்ளக்,ராமசாமி எல்லாம் கூச்சல் போட வச்சுட்டா போச்சு!
ஜெயேந்திரன்: ஆமாண்டா, அம்பி! கவர்ன் மென்ட்ல அப்போ பயந்துடுவான்ல. இந்த “சாஸ்திர விரோதம்”, “ஆச்சார விரோதம்”, “பழக்க வழக்க விரோதம்” என்கிறதையெல்லாம் நாம இறுக்கிப் பிடிச்சுக்கனும். இல்லாட்டா, நம்ம பாடு அவ்வளவுதான்!
தேவநாதன்: அதாவது, இந்த “விரோதங்”களை யெல்லாம் செய்யறதுக்கு பூதேவராகிய நமக்கு மட்டுமே உரிமை. மற்றவர்களுக்கு இல்லேங்கிறேள். அப்படித்தானே?
ஜெயேந்திரன் : இதையெல்லாம் நோக்கு விளக்கி விலாவாரியாக சொல்லணுமாடா? புரிஞ்சுக்க வேண்டியது தான்.
தேவநாதன்: புரிஞ்சுகிட்டேன் சாமி. அப்படியே என்னை வழக்கிலேயிருந்து காப்பாத்துறதுக்கு ஏதாவது வழிசொல்லுங்களேன்.
ஜெயேந்திரன் : யோசனை இருக்குடா, அம்பி! காஞ்சிபுரத்தை - தமிழ்நாட்டிலேயிருந்து தனியா பிரிச்சு, நம்ம தலைமையிலே தனி ஆட்சியக் கொண்டு வந்துட்டோம்னா, ஒரு பயலும் நம்மை அசைச்சுக்க முடியாதுடா. அதைத்தான் ஆலோசனை பண்ணிகிட்டு இருக்கேன்.
தேவநாதன் : சபாஷ்! சரியான யோசனை சாமி. அதுல, என்னையும் சேர்த்துக்கோங்க! காஞ்சிபுரத்த நாம் எல்லாம் சேர்ந்து “புண்ணிய”பூமியா மாத்திடுவோம்! அப்ப, எந்த கூட்டம், எந்த போலீசு வந்துடுவான், பார்த்துடுவோம்!

அசத்தியம் ஒருநாள் அழிந்தே போகும்.

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியம் அழிந்தே போகும்.

வா மனிதா வா சத்தியத்தின் பக்கம் உண்மையின் பக்கம்

அன்புள்ள வாசகர்களே உங்களை உண்மையின் பக்கம் சத்தியத்தின் பக்கம் அழைப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம்.