திங்கள், 25 ஜனவரி, 2010

ஹிந்து மதத்தில் தொடரும் தீண்டாமை

தனது 75-வது பிறந்த நாளை ஊர் ஊராகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் காஞ்சி ஜெயேந்திரர். திருச்சியில் 3 பெண்கள் கல்வி நிறு வனங்களில் ஜெயேந்திரரின் பிறந்தநாள் டிசம்பர் 17, 18, 19 தேதிகளில் அமர்க்களப்பட்டது. மாணவிகளிடம் ஆசிரியர்கள், ""யாரெல்லாம் தூரமாயிருக்கீங்களோ கை தூக்குங்க. இது சாமி சம்பந்தப்பட்ட விஷயம். யாராவது தீட்டாயிருந்து ஏதாவது தப்பாயிடிச்சின்னா தெய்வ குத்தமாயிடும்'' என்று சொல்ல, ""என்ன இப்படியெல்லாம் கேட்கு றாங்களே'' என்று மாணவிகள் பதறிப்போய், ஓரிருவர் கை உயர்த்தினர். அப்போது ஒரு மாணவி, இவ்வளவு சுத்தம், ஆச்சாரம் பார்க்குறவர் ஏன் மேடம் ஜெயிலுக் கெல்லாம் போகணும்? அந்த விஷயத்திலும் சுத்தமா இருந்திருக்கலாமே'' என்று சொல்ல, மாணவிகளிடம் சிரிப்பலை. இந்திராகாந்தி பெண்கள் கல்லூரியில் நடந்த பிறந்தநாள் விழாவுக்கு வந்த ஜெயேந்திரர் உற்சாக மனநிலையில் இருந்தார். சங்கரராமன் வழக்கின் சாட்சிகள் அடுத்தடுத்து பல்டி அடிக்கிற விவரம் வந்துகொண்டே இருந்ததால்தான் இந்த மனநிலை. ஜெயேந்திரரை வாழ்த்த மதுரை, திருப்பனந்தாள் ஆதீனங்களும், விஸ்வ இந்து பரிஷத் வேதாந்தம், பா.ஜ.க ஹெச்.ராஜா ஆகியோர் வந்திருந்தனர். எந்த மேடையிலும் பேச்சால் பொறி கிளப்பும் மதுரை ஆதீனம், தன்னுடைய தலைமையுரையில், ""பிறந்தநாள் கொண்டாடும் பெரியவாவை ( பொம்பளை பொருக்கி ஜெயேந்திரர்) இயேசு வடிவத்தில் பார்க்கிறேன். ஏன்னா இயேசு சிவப்பா இருப்பார். இவரும் சிவப்பா இருக்கிறார். இவரை நபிகள் நாயகத்தின் அவதாரமா பார்க்கிறேன்'' என மற்ற மதங்களை இழுத்துப்பேசியவர், ஜெயேந்திரர் நூற் றாண்டு வாழ, வந்திருந்தவர்களை கோஷம் போட வைத்தார்.ஜெயேந்திரர் ஏற்புரை வழங்கவில்லை. அருளுரை வழங்கினார். ""மிருகங்களைப் போல வாழாமல் மனிதர்களாய் வாழவேண்டும்'' என்று அவர் சொன்னது தான் ஹைலைட். விழாவில் நால்வருக்கு விருது வழங்கப்பட்டது. அதில் முக்கியமானவர், இளையராஜா. அவர் உட்பட எழுத்தாளர் விக்ரமன், வேதவிற்பன்னர் கிருஷ்ணமூர்த்திகனபாடிகள், சமூகசேவகர் ராதா கிருஷ்ணன் ஆகியோரை தொடவிரும்பாத ஜெயேந் திரர் ஆசி மட்டும் வழங்கிவிட்டு, தன் உதவியாளர் கையால்தான் விருதுகளைக் கொடுக்கச் செய்தார்.இளையராஜா பேசும்போது, ""இயேசு அவதாரம், நபி அவதாரம் என்றெல்லாம் மதுரை ஆதீனம் பேசினார். நீங்க யாருடைய அவதாரமாகவும் இருக்க வேண்டாம். பெரியவாளாகவே இருங்க'' என்றவர், மகாபெரியவர் காலத்திலிருந்தே தனக்கு காஞ்சி மடத்துடன் நெருக்கம் இருப்பதைக் குறிப்பிட்டுவிட்டு, ""எனக்கு இசை தெரியாது. இன்னமும் இசையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்'' என தத்துவார்த்தமாகப் பேசினார்.திருச்சி நேஷனல் கல்லூரியிலும் சீதாலட்சுமி கல்லூரியிலும் ஜெயேந்திரர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. எடைக்கு எடை தங்கம், வெள்ளி எனக் கொடுக்கப்பட்டதால் ரொம்பவும் சந்தோஷத்தில் மிதந்தார் காவி கட்டிய துறவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக