திங்கள், 13 டிசம்பர், 2010

உலகத்தை முட்டாளாக்கும் ராஜ பக்சே (ஆக்டோபஸ்).

"கூரையில் ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்."இந்தப் பழிமொழி இப்போது சரியாகப் பொருந்துவது சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்குத் தான். பிரித்தானியாவில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சமாளித்துக் கொள்ள அவர் வெளியிட்ட கருத்தே இப்படிக் கூற வைத்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உரையில் தெளிவுபடுத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்தாராம். தமது திட்டம் சர்வதேச மயப்படுவதைத் தடுப்பதற்காக சிலர் செயற்பட்டு அந்த நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளதாகவும் புலம்பியிருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ. அவரது இந்த உரையைக் கேட்டபோது புல்லரிக்கிறது.

தமிழ்மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதில் தான் அவருக்கு எத்தனை ஆர்வம்.தமிழ்மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குப் புலிகளே தடையாக உள்ளனர். அவர்களை அழிக்கத் தான் இராணுவ நடவடிக்கை, தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்று கூறிக் கொண்டு போரை நடத்தியவர் தான் மகிந்த ராஜபக்ஸ.

போர்முடிந்த பின்னர் அரசியல் தீர்வு வழங்குவேன் என்று கூறியவர்.ஆனால் போர் முடிந்த பின்னரும் அரசியல் தீர்வு பற்றியே சிந்திக்காதவர் அவர். தனது மனதில் உள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தை உள்நாட்டில் அரசியல்கட்சிகளும் மக்களும் ஏற்க வேண்டும் என்று கூறிக் கொண்டு திரிந்தவர் திடீரென அதை சர்வதேச சமூகத்திடம் முன்வைத்திருப்பாரா என்ன? அரசியல் தீர்வை சர்வதேச சமூகத்திடம் முன்வைப்பதற்கு அவர் ஒக்ஸ்போர்ட்டைத் தான் தெரிவு செய்ய வேண்டும் என்பதில்லை. ஏற்கனவே கடந்த செப்ரெம்பர் மாதம் ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றக் கிடைத்த சந்தர்ப்பதை அதற்குப் பயன்படுத்தியிருக்கலாம்.

அதைவிட எமது பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண்போம் என்று கூறி வந்தவர் மகிந்த.தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்று தமிழ் அரசியல்கட்சிகள் விடுக்கின்ற வேண்டுகோள்களை செவி சாய்க்காமல் இருக்கும் மகிந்த ராஜபக்ஸ, அதை சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறி யாரைத் தான் ஏமாற்ற முனைக்கிறார்? இதுவரை காலமும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை முட்டாளாக்கிய அவர் இப்போது சர்வதேசத்தை முட்டாளாக்க முனைகிறார்.

புலம்பெயர் தமிழர்களும் பிரித்தானியாவும் அரசியல் தீர்வை அறிவிக்கும் வாய்ப்பைக் கெடுத்து விட்டதாக அவர் புலம்பித் தள்ளியிருக்கிறார். அரசியல் தீர்வில் அவர் அக்கறையுள்ளவராக இருந்திருந்தால் பிரித்தானியா திருப்பிய அனுப்பிய கையோடு அதை நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிப்பட்டவர் அல்ல. இப்போதும் சரி -இனி எப்போதும் சரி அரசியல் தீர்வை அறிவிக்கின்ற எண்ணம் அவரிடம் துளியும் கிடையாது என்பதே உண்மை. அவரது மனதில் தீர்வு யோசனை இருப்பதாகக் கூறுவதெல்லாம் சுத்த பம்மாத்து.

அவரது மனதில் படிந்துள்ளதெல்லாம் தமிழருக்கு எதிரான இனவாதமும், குரோத மனப்பாங்கும் தான். தமிழரை எப்படியெல்லாம் அடக்கி ஆளலாம் என்று சதா சிந்தித்துக் கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ஸவா அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறார்? அவரது இந்தக் கதைகளையெல்லாம் நம்புகின்ற நிலையில் தமிழர்கள் இல்லை.
அதனால் தான் அவர் அரசியல் தீர்வுக்கு ஒக்ஸ்போர்ட் உரையுடன் முடிச்சுப் போட்டு- கெடுத்து விட்டார்களே என்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.

அவர் உண்மையிலேயே தமிழர் பிரச்சினையைத் தீர்க்கின்ற ஆற்றலும் விருப்பமும் கொண்டவராக இருந்தால்- அந்த அரசியல் தீர்வை உடனடியாக வெளியிடலாம்.
ஆனால் அதை அவரால் செய்ய முடியாது. ஏனென்றால் அவர் சிங்களப் பேரினவாதத்தின் சக்கரவர்த்தியாக- சிங்களப் பேரினவாதத்தின் சின்னமாக- இருக்க விரும்புகிறாரே தவிர, தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் எண்ணம் அவரிடம் துளியும் கிடையாது.

இந்த உண்மை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.அதேவேளை, மகிந்த ராஜபக்ஸ போடுகின்ற வேடத்தையும், ஆடுகின்ற நாடகத்தையும் மேற்கு நாடுகள் இப்போது ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டன.எனவே, அரசியல்தீர்வு பற்றி அவர் அளக்கின்ற இந்தக் கதைகளையெல்லாம்- அவரைச் சுற்றியுள்ளவர்களைத் தவிர வேறு யாரும் நம்புகின்ற நிலையில் இல்லை. இது தான் உண்மை.

நன்றி: முகிலன்

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

இலங்கையில் இனி சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் பாடப்படும்.

கொழும்பு: இனவெறியின் எல்லைகளை காட்டாறு போல கட்டறுத்து ஓடிக் கொண்டிருக்கிறது ராஜபக்சே அரசு. எப்படியெல்லாம் தமிழையும், தமிழைனையும் கொல்ல முடியுமோ, அதையெல்லாம் செய்து வருகிறது ராஜபக்சே அரசு.தற்போது அதில் ஒரு முக்கிய நிகழ்வாக, இனிமேல் இலங்கையில், தேசதிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும், தமிழில் பாடப்பட மாட்டாது என்ற முடிவை எடுத்துள்ளதாம் ராஜபக்சே அரசு.

தற்போது சிங்களத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. ஆனால் தற்போதுதான் ஒரே நாடாகி விட்டதே, இனியும் எதற்கு தமிழ் என்று பேசி வருகிறாராம் ராஜபக்சே. இதையடுத்து இனிமேல் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதத்தைப் பாடினால் போதும் என்று அவர் முடிவெடுத்துள்ளாராம்.

லண்டனுக்குப் போன ராஜபக்சேவுக்கு தமிழர்கள் கொடுத்த பிரமாதமான வரவேற்பினால் வெகுண்டு திரும்பிய பின்னர் அவர் அமைச்சரவையைக் கூட்டி எந்த நாட்டிலும் பல மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை. அப்படிஇருக்கையில் இலங்கையில் மட்டும் ஏன் இரு மொழிகளில் பாட வேண்டும் என்று கேட்டாராம்.

சனி, 11 டிசம்பர், 2010

தமிழக காவல்துறையும் & ஹிந்துதுவாவும் : ஒரு சமூக பார்வை.

திண்டுக்கல்,டிச.11:தீவிரவாதிகள் திடீரென தாக்கினால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்பதுக் குறித்த பாதுகாப்பு ஒத்திகை கடந்த 9-06-2010 அன்று திண்டுக்கல்லில் போலீசாரால் நடத்தப்பட்டது.nதீவிரவாதிகளாக வேடமிட்டு ஒத்திகையில் கலந்துக் கொண்டவர்களின் முகத்தில் தாடி ஒட்டப்பட்டு முஸ்லிம்கள் போல் காணப்பட்டன.

இச்செய்தி பல்வேறு பத்திரிகைகளிலும் வெளியானது. ஒவ்வொரு மதத்தினருக்கும் வெவ்வேறான மத அடையாளங்கள் உள்ளன. முஸ்லிம் ஆண்கள் மார்க்க கடமையாக கருதி தாடியை வளர்க்கின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் என்றாலே அவர்களை முஸ்லிம்கள் தான் என்று தீர்மானிப்பது கடைந்தெடுத்த கயவாளித்தனமின்றி வேறென்ன? பகுத்து அறியும் ஆற்றலைப் பெற்ற கலைஞரின் ஆட்சியில் அவரது கட்டுப்பாட்டிலிலுள்ள போலீஸ் துறைதான் இந்த கோமாளித்தனத்தை அரங்கேற்றியுள்ளது.

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில் ஏன் தமிழகத்தின் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் தங்களது தலைமையகத்திற்கு தாங்களே குண்டை வைத்து விட்டு முஸ்லிம்களின் பழியைப்போட தீட்டவும் செய்தனர்.

கிறிஸ்தவ ஆலயங்களை இடித்தும், முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணை வயிற்ரை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தாயையும் குழந்தையையும் கொன்ற கொடூர பாவிகள். குஜராத் கலவரத்தில் முஸ்லிம் பெண்களை கூட்டமாக சுற்றி நின்று கற்பழித்து அதை விடியோ எடுத்து ரசித்தவர்கள். குஜராத் பேஸ்ட் பேக்கரியில் அதன் உரிமையாளர் மற்றும் வேலை செய்தவர்கள் எல்லாரையும் அப்படியே தீயிட்டு கொளுத்தியவர்கள். குஜராத்தின் காங்கிரஸ் முன்னாள் MP யையும் அவர் வீட்டில் அடைக்கலம் புகுந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குழந்தைகள் எல்லோரையும் வெட்டி கொன்று தீயிட்டு கொளுத்தினர்.

ஆஸ்திரேலிய கிறஸ்தவ பாதரியார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் காரோடு வைத்து தீவைத்து கொளுத்திய கொடும் பாவிகள். குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணை வயிற்ரை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தாயையும் குழந்தையையும் கொன்றார்கள். இவர்கள் போல் உள்ள ஒரு கொடியவர்களை வரலாறுகளில் பார்க்க முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருக்கமுடயுமா? இவர்கள் மனிதர்களா? இல்லை மிருகங்களா? இவர்கள் மனம்தான் என்ன இரும்பினால் செய்யபட்டதா? இப்படி பட்ட ரெத்த வெறி பிடித்த கயவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா மிருகங்கள். இந்நிலையில் தீவிரவாதிகளாக ஏன்? இவர்கள் போல் வேடம் இட்டு ஒத்திகை பார்க்கவேண்டியது தானே.
இதில் இருந்து தமிழக காவல் துறையில் ஹிந்துதுவாவின் தாக்கத்தை உணரமுடிகிறது.

தொடர்ந்து தமிழக காவல் துறை முஸ்லிம் விரோத போக்கோடு செயல்பட்டு வருகிறது. கோவையில் செல்வராஜ் என்ற ட்ராபிக் கான்ஸ்டபில் கொல்லப்பட்டபோது சம்மந்த பட்டவர்கள் மீது வழக்கு தொடராமல். 19 முஸ்லிம்களை சுட்டு கொன்ற கயவர்கள் ஆச்சே இவர்கள்.. ஜனநாயக முறையில் முஸ்லிம்கள் நடத்தும் போராட்டங்களை தீவிரவாதமாக சித்தரிப்பது, அவர்கள் மீது திட்ட மிட்டு பொய் வழக்குகள் போடுவது, இப்படி தமிழக காவல்துறை ஹிந்துதுவாவின் மறு உருவமாக செயல்பட்டு வருகிறது. இம்மாதிரியான நடவடிக்கைகளை கலைஞரின் போலீஸ் துறை மேற்கொள்வது அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சமூக நல்லிணத்தை சீரழிக்கவே உதவும். தமிழக காவல்துறையின் இத்தகைய செயலுக்கு அனைத்து மக்களும் தங்களது கண்டனத்தை பதிவுச்செய்ய வேண்டும்.

தினமலர், தினமணியின் பத்திரிகை தர்மம்: முதலாளித்துவத்தின் அடிவருடிகள்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆதாரங்கள், செய்திகள், வீடியோக்களை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். உலகமே துடிதுடித்துப் பார்த்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிற அந்த அராஜகங்கள் எதுவும் நமது அருமையான பத்திரிகைகளுக்கு முக்கியமாகத் தெரியவில்லை போலும். எதுவுமே நடக்காதது போல மலை விழுங்கி மகாதேவன்களாக, வேறு செய்திகளை வாசித்துக்கொண்டு இருக்கின்றன.

தினமலர், தினமணி போன்ற பார்பன பத்திரிக்கைகள் ஹிந்துத்துவா ஆதரவு செய்திகளை போட்டு வழக்கம்போல் இந்தியாவில் யாருக்கும் கொசுகடித்தாலும் ஐ.எஸ்.ஐ. சதி என்றும் செய்தி போட்டு அரிப்பை சொரிந்து கொள்கிறார்கள். தங்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்புகள் அம்பலமான போது அதை மறைத்தும் திசை திருப்பியும் செய்தி போட்டார்கள்.தமிழகம் ராமேஸ்வரத்தில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பின் பெண்கள் அமைப்பான துர்காவாகினியை சேர்ந்த பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டதை பற்றி ஒரு செய்தியும் போடாமல் இருட்டடிப்பு செய்தார்கள். தினமணி, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் இந்த விக்கிலீக்ஸ் பற்றிய எந்த செய்தியும் போடாமல் செய்தி “ஆத்தூரில் மான் வேட்டை : 2 பேர் கைது”, “வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை தப்பியோடியது” போன்றவை கூட தினமலரின் முக்கியச் செய்திகள். இளவரசர் சார்லஸின் கார் விபத்து உலகச் செய்தியாகிறது. விஜயகுமார், அவரது மகள் விவாகரங்கள் உள்ளூர் செய்திகளாகின்றன. அதே வேலையில், “ஐரோப்பிய யூனியனுடன் பொருளாதார ஒத்துழைப்பு: மன்மோகன் சிங்” மற்றும் “நோபல் அமைதிப் பரிசு வழங்கும் விழா: இந்தியா உள்பட 46 நாடுகள் பங்கேற்பு” போன்ற செய்திகளைப் போட்டு தங்கள் பிறவிப்பயனை அடைந்து இருக்கின்றனர்.தேடிப்பார்த்தால் விக்கிலீக்ஸ் பற்றிய செய்தியொன்றை தினகரன் கடைசிப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. "பேச்சு சுதந்திரம் பற்றி அந்த மனிதர் பேசிய பேச்சில் மயங்கினார் அந்த 27 வயதுப் பெண்” என்று ஆரம்பித்து விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச்சை ஒரு பெண் பித்தராக சித்தரித்து இருக்கிறது. இதுதான் இந்த பார்பன ஹிந்துத்துவா பத்திரிக்கைகளின் தரமும், தர்மமும் போலும்.

முதலாளித்துவ நாடுகள் மீது இந்த பத்திரிகை முதலாளிகளுக்குத்தான் எத்தனை விசுவாசமும், அடிமை மோகமும். இந்த பார்பன வந்தேறிகள் சுதந்திரத்துக்கு முன்னாள் இந்திய சுதந்திர வீரர்களை வெள்ளை பிரிட்டிஷ்காரர்களுக்கு காட்டி கொடுத்து உயர் பதவிகள் வகித்தார்கள் இப்ப முதலாளித்தவ விசுவாசிகளாகி மேற்கத்திய நாடுகளுக்கு குடை பிடிகிறார்கள். ஓபாமாவின் வருகையை முன்பக்கத்தில் பிரசுரிக்க முடிந்த இந்த பூதகணங்களுக்கு, விக்கிலீக்ஸ் வெளியிட்ட வீடியோக்களையும், செய்திகளையும் பற்றி, எதாவது ஒரு மூலையிலாவது எழுதிவைக்க தெம்பு இருக்கிறதா? ஊடக அரசியலின் சூட்சுமங்களும், சூழ்ச்சிகளும் பிடிபடுகிற இடம் இது. இப்பொழுது ஒரே ஆறுதலும், ஆதரவும் இணையதளங்கள் தான் கருத்துரிமைக்காகவும், மனித உரிமைக்காகவும் குரல் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். மாற்று ஊடகமாகவும், மக்களின் ஊடகமாகவும் இந்த வலைப்பக்கங்கள் பரிணமிக்கட்டும்.

நன்றி: தீராத பக்கங்கள்

வெள்ளி, 10 டிசம்பர், 2010

காஞ்சி கொலைகார காம கேடி சங்கராச்சாரி போலியா?: தினமலர்???

பார்ப்பன ஏடுகள் பக்தியைப் பரப்புவதில் - மூட நம்பிக்கைகளைக் குழைத்துத் தருவதில் முன்னணியில் எப்பொழுதும் இருப்பவை - தொழில் போட்டியில் பார்ப்பனர் அல்லாதார் ஏடுகளும் ராஜாவை விஞ்சிய விசுவாசிகளாக இதழ்களை நடத்திக்கொண்டு திரிகின்றனர் - நாய்விற்ற காசு குரைக்கப்போவதில்லையே!

போலிச் சாமியார்களை நம்பாதீர்கள்! என்ற ஒரு தலைப்பிலே தினமலர் வார மலர் (தினமலம்28.11.2010) ஒரு கட்டுக் கதையை வெளியிட்டுள்ளது.திருக்கோயிலூரைத் தலை நகரமாகக் கொண்டு மெய்ப் பொருளார் என்பவர் ஆட்சி செய்து வந்தாராம். திருநீறுப்பூசிய சைவ மெய்யன்பர்கள் மீது ஏகப்பட்ட மரியாதையாம் அவருக்கு. முத்தநாதன் என்பவர் ஒரு நாத்திகனாம் - மெய்ப்பொருளாரின் பலகீனத்தைப் பயன் படுத்தி உடல் முழுவதும் திருநீறு அணிந்து அந்த அரசனைப் பார்க்க வந்தாராம்.

திருநீறு அணிந்த சாமியார்கள் வந்தால் அவர்களைத் தடுக்கக் கூடாது என்பது அரசக் கட்டளையாம்; அதனால் அந்த முத்தநாதன் அரசரின் அந்தப் புரத்திற்குள்ளேயே நுழைந்து விட்டானாம். ராணியுடன் அந்தப்புரத்தில் இருந்த அரசன் திடுக்கிட்டான்; ஆனால், திருநீறு கோலத்தில் வந்துவிட்டாரே, அரசன் என்ன செய்வான்?

திருநீறு அணிந்த ஆசாமியின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டபோது மறைத்து வைத்திருந்த வாளால் தாக் கினாராம்; அவனைக் கொல்ல காவலாளி முயன்றபோது திரு நீறுப் பூசியவரைக் கொல்லக் கூடாது என்று அரசன் உத்தரவிட்டானாம். தன் பக்தனின் உண்மைப் பக்தியைக் கண்டு வழக்கம் போல சிவபெருமான் அங்குத் தோன்றி உயிர்நீத்த மெய்ப் பொருளாராகிய அரசனுக்கு உயிர் கொடுத்தானாம். அதன் பின் அரசன் பல காலம் சிவத்தொண்டு செய்ய கைலாயத்துக்கு அனுப்பி வைத்தாராம் சிவன்.

இந்த சிவன் தன் மதக் கோட்டைத் தாண்டி மற்ற மதப் பக்தர்களைச் சோதிக்கமாட்டார். அடுத்த மதக்காரன்தான் இந்தக் கடவுளைச் சீண்ட மாட்டானே! தன் பக்தனை சோதித்துத்தான் ஒரு கடவுளால் உணர முடியும் என்றால், அவன் எப்படி சர்வ சக்திக் கடவுளாவான்?
நாத்திகனைக் கொலையாளி என்று காட்டவும், வேடக்காரன் என்று காட்டவும் புனையப்பட்ட கதை இது.

அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த அத்வானியும், கரசேவர்களும் நாத்திகர்களா? பக்தர்கள்தானே! இன்னொரு மதக்கடவுள் சம்பந்தப்பட்ட நினைவிடத்தையல்லவா அடித்து நொறுக்கினார்கள்? எந்த நாத்திகன் எந்தக் கோயிலை இடித்தான்? நிரூபிக்க முடியுமா?
கடைசியாக தினமலர் என்ன கூறி முடிக்கிறது? போலிச் சாமியார்களை அவர்களின் உருவத்தைக் கண்டு கணிக்காதீர்கள் என்று அறிவுரை கூறுகிறது.சாமியார்களில் என்ன ஒரிஜினல் சாமியார்? போலி சாமியார்? யானை லத்தியில் முதல் லத்தி என்ன, இரண்டாம் லத்தி என்ன? அதுசரி, காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சாமியார்? போலியா? ஒரிஜினலா? தினமலர், தின மணி, கல்கி, சோ கூட்டம் கொஞ்சம் பதில் சொன்னால் நல்லது! thanks - மயிலாடன்

வெள்ளி, 3 டிசம்பர், 2010

டெஹல்கா பெண் நிருபருக்கு எதிரான நடவடிக்கையை அனுமதிக்கக் கூடாது: NCHRO.

கொச்சி,டிச.4:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களை நேரடியாக பேட்டியெடுத்ததற்காக கர்நாடக போலீசார் வழக்கு பதிவுச் செய்தது பத்திரிகைப் பணியின் மீதான அத்துமீறலும், மனித உரிமை மீறலுமாகும் என மனித உரிமை அமைப்பான என்.சி.ஹெச்.ஆர்.ஓ அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுத்தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் கேரள மாநிலத் தலைவர் டாக்டர் எம்.எஸ்.ஜெயப்பிரகாஷ், துணைத் தலைவர்களான அஹ்மத் ஷெரீஃப் மற்றும் ரெனி ஐலின் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஷாஹினா தனது பத்திரிகைத்துறை தர்மத்தை நிறைவேற்றியுள்ளார். இந்நிலையில் அவர் மீது வழக்குத் தொடர்வது பாசிச நடவடிக்கை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

பத்திரிகைத் துறையில் பணியாற்றும் பெண்மணியொருவரை அவருடைய தொழில் ரீதியான நேர்மையை தவறாக விளக்கி தளர்வடையச்செய்து மனோரீதியான சித்தரவதைக்கு உள்ளாக்குவது மனித உரிமைகள் மீது விடுக்கப்பட்ட சவாலாகும்.

பொய் சாட்சிகளை காட்டி மஃதனியை வழக்கி சிக்கவைக்க கர்நாடகா போலீஸ் நடத்திய நாடகம் வெளியான நிலையில் தங்களது கோபத்தை தீர்ப்பதற்காக நடத்தும் வெறுக்கத்தக்க முயற்சிகளை ஜனநாயகவாதிகள் அனுமதிக்கக் கூடாது என என்.சி.ஹெச்.ஆர்.ஓ வலியுறுத்தியுள்ளது

வியாழன், 2 டிசம்பர், 2010

'லவ் ஜிஹாத்' : ஹிந்த்துதுவா பயங்கரவாதிகளின் கற்பனை புரட்டு.

கொச்சி,டிச.1:முஸ்லிம் சமுதாயத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை லட்சியமாகக் கொண்ட 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டை கேரள மாநில உயர்நீதிமன்றம் முற்றிலும் நிராகரித்து இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சில ஊடகங்களும், அமைப்புகளும் அதிக ஆர்வம் காண்பித்த 'லவ் ஜிஹாதி'ற்கு எவ்வித ஆதாரமுமில்லை என கேரள மாநில உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதிபட கூறியுள்ளது.
இவ்வழக்கில் பத்தணம்திட்டை என்ற இடத்தைச் சார்ந்த ஷாஹின்ஷா என்பவர் தாக்கல் செய்த மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது கேரள மாநில உயர்நீதிமன்றம்.

தனக்கெதிராக திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றும் நிலுவையில் இல்லை எனவும், எனவே விசாரணையை பரிபூரணமாக வாபஸ்பெற வேண்டுமெனவும் கோரி ஷாஹின்ஷா கேரள உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

மனுவை பரிசீலித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சசீதரன் நம்பியார், ஒரு குறிப்பிட சமூகத்தை குற்றவாளிக் கூண்டில் நிற்கவைக்கும் விசாரணையை முடித்துவிட போலீசாரிடம் வலியுறுத்தினார். தொடர்ந்து ஷாஹின்ஷாவுக்கு எதிரான விசாரணையைக் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் இளம் பெண்கள் இருவரின் பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்த எர்ணாகுளம், திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றங்களின் விசாரணை அறிக்கையை போலீஸ் சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின்படி எவ்வித ஆதாரமும் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கெதிராக இல்லை என நீதிபதி கண்டறிந்தார். 'லவ்ஜிஹாத்' குற்றச்சாட்டை நிரூபிக்கும் எவ்வித ஆதாரத்தையும் போலீசாரால் கண்டறிய இயலவில்லை. இதனால் இவ்வழக்கில் இனிமேல் விசாரணை தேவையில்லை என இறுதித் தீர்ப்பை கேரள உயர்நீதிமன்றம் இறுதித் தீர்ப்பளித்துள்ளது.

அறிவோம் ஹிந்து மத பெரியவர் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், என்னும் வைணவப் பெரியார் (ஒரு இந்து மதப் பார்ப்பனர்) என்பது குறிப்பிடத் தக்கதாகும். இன்று பல சடங்குகள் அர்த்தம் புரியாமல் செய்கிறார்கள் என்றும், மந்திரங்கள், ஸ்லோகங்கள் இப்போது வாத்தியார்களுக்கே அர்த்தம் தெரியாமல் சொல்கிறார்கள் என்றும் தாத்தாச்சாரியர் அவர்கள் சொல்கிறார்.

தாத்தாச்சாரியர் அவர்கள் ஹிந்து மத வேதங்களை எல்லாம் கற்ற மாமனிதர். இவரை தவிர யாராலும் வேதங்களில் உள்ள தவறுகளை சுட்டி காட்ட முடியாது என்ற அளவுக்கு ஹிந்து மத வேதங்களில் அறிவு முதிர்ச்சி பெற்றவர். இவர் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் ஹிந்து மத வர்ணாசிரம கொள்கையையும், அதில் கொட்டி கிடக்கும் மூட நம்பிக்கைகள்,ஜாதி வெறி, ஏற்றதாழ்வுகள் குறித்தும் ஹிந்து மத மக்களுக்கு தெரிவித்த இந்த நூற்றாண்டி சிறந்த அறிவு ஜீவிகளில் இவரும் ஒருவர்.

அவர் எழுதிய ஹிந்துமதம் எங்கே போகிறது, சடங்குகளின் கதை போன்ற நூல்களில் இந்து மதச்சடங்குகளை,சம்பிரதாயங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளார். சங்கர மடங்களின் சங்கராச்சாரியார்களின் இந்து மத வருணவெறி மற்றும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ள இந்நூல்கள் பெரிதும் உதவும். எந்தக் காலத்திற்கோ ஏற்படுத்தப்பட்ட சமஸ்கிருத சடங்குகளை தமிழர்கள் இன்னும் சுமந்து கொண்டு திரிய வேண்டுமா? அவைகளைத் தூக்கி எறிய வேண்டாமா? என்ற கேள்வியே இந்நூலைப் படித்த போது எழுகிறது.

நூல்: சடங்குகளின் கதை, இந்துமதம் எங்கே போகிறது? ஆசிரியர்: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் . வெளியீடு: நக்கீரன் பப்ளிகேசன்ஸ், ஜானி ஜான்கான் தெரு, இராயப்பேட்டை, சென்னை-14 பக்கம் 152 ரூ. 75.

.“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... என்றால் என்ன அர்த்தம்???

Monday, November 29,2010 தெரியுமா? .“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள். பெண்ணுக்கு சீதனமாக இன்னொரு பெண். கல்யாண வீட்டில் மதுவகையுடன் மாட்டிறைச்சியும். சீதனம் என்றால் நகைகள், வாசனை வஸ்துக்கள் போன்ற ஜடப் பொருள்கள் மட்டும்தானா? பெண்ணுக்கு இன்னொரு பெண்ணையே சீதனமாக கொடுப்பது.

திருமணத்துக்கு முதல்நாள் மதுவர்க்கம் என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின்போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படிக் கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டுகிறார்கள்.“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள்.

சிந்திக்க: OH MY GOD இந்த ஆர்.எஸ்.எஸ். பாசிச ஹிந்துத்துவாவை சார்ந்தவர்கள் பசுவதை தடைச்சட்டம் என்று சொல்லுவது எல்லாம் வெறும் கண்துடைப்பு என்பது கட்டுரையை படிக்கும் போதுதான் விளங்குகிறது. போலி ஹிந்துத்துவா பேசி ஆட்சியை பிடிக்கும் மாய்மாலம் என்பது தெளிவாகிறது. வாழ்க வளமுடன் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

இந்துமதம் எங்கே போகிறது பகுதி 40: அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

காஞ்சி சங்கரமடம், சிறீரங்கம் கோவில்: ஒரு வரலாற்று பார்வை.

காஞ்சிபுரம் ஒரு காலத்தில் பவுத்தர்களின் கோட்டமாக விளங்கியது. கி.பி. 640 இல் காஞ்சிபுரத்திற்கு வந்த யுவான்சுவாங் என்ற சீன யாத்திரீகர் காஞ்சிபுரத்தில் நூறு பவுத்தப் பள்ளி களும், ஆயிரம் பிட்சுகளும் இருந்ததாகக் குறிப்பிட் டுள்ளார். காஞ்சிபுரத்தில் கச்சீஸ்வரர் எனும் பெயரில் உள்ள சிவன் கோயில் தொடக்கத்தில் புத்தர் கோயிலாக இருந்தது. இக்கோயிலின் முன் கோபுரத்து அஸ்திவாரக் கல் கட்டடத்தில் சில புத்த விக்கிரகங்கள் இருப்பதை இன்றும் காணலாம். காஞ்சி காமாட்சியம்மன் கோயில் ஒரு காலத்தில் பவுத்தரின் தாராதேவி ஆலயமாகும்.

பிற்காலத்தில் இவை எல்லாம் அடிச்சுவடு தெரியாமல் ஆரிய சதிகாரர்களால் அழிக்கப்பட்டு விட்டன என்பது தான் வரலாறு. மேலும் தகவல் அறிய விரும்புவோர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூலான பவுத்தமும் தமிழும் என்ற நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.பவுத்தத்தை அழித்து ஆரியம் குடி கொண்ட ஆரிய பிராமணர்களின் வெறிச்சின்னம் தான் காஞ்சி சங்கரமடமாகும்.

அதுமட்டும் அல்ல சிறீரங்கம் கோயிலும் ஒரு காலத்தில் பவுத்தக் கோயிலாகவே இருந்திருக்கின்றது என்று ஆதாரங்கள் பேசுகின்றன. நாகைப்பட்டினத்தில் இருந்த அய்ம் பொன்னாலான பவுத்த சிலையைத் திருடிக் கொண்டு வந்து சிறீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு மதில்சுவர் எழுப்பினான் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார்.(ஆதாரம் : தஞ்சைவாணன் கோவை).

சிந்திக்க; இப்படி பவுத்த கோவில்களை இடித்து இந்த வந்தேறி பிராமணர்கள் ஹிந்து கோவில்களை கட்டி இருகிறார்கள். ஹிந்து மதம் என்பது இந்த ஆரிய வந்தேறி கூட்டத்தால் உருவாக்கப்பட்டது. இவர்கள் மக்களை மதத்தை சொல்லி மூடநம்பிக்கைகளை சொல்லி, சில மேஜிக் வித்தைகளை காட்டி ஏமாற்றி, மத மாட்ச்சாரியங்கள் பேசி வர்ணாசிரம கொள்கைகள் மூலம் மக்களை பிளந்து, சிறு கூட்டமான இவர்கள் இந்தியாவின் எல்லா உயர் பீடங்களிலும் வீற்றிருகிரார்கள். என்று இவர்கள் சூழ்ச்சி முரியடிக்கபடுமோ அன்றுதான் இந்தியா ஒளிரமுடியும்.

10 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்” திரைப்படம் வெளியாகிறது.


அம்பேத்கர் விருது பெற்றவருமான தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் ஆட்சி நடைபெற்றும், தமிழகத்தில் டாகடர் அம்பேத்கர் பற்றிய திரைப்படம் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இத்தனைக்கும் இந்தியாவில் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் மூன்றாவது மிகப்பெரிய மாநிலம் தமிழகம்.ஒரு “தலித்” வாழும்போது மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குப் பின்னரும் சாதி ஆதிக்கத்தின் பிடியில் அவலம் நேரத்தான் செய்கிறது. இந்திய அரசியல் அமைப்பையே உருவாக்கிக் கொடுத்தவரும், இந்திய சமூக நீதிப் போராட்டத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான டாக்டர். பி.ஆர். அம்பேத்கருக்கும் இந்த நிலைதான் என்பது எத்தனை மோசமானது.

ஆம், ஜபார் படேல் இயக்கிய “டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்” திரைப்படம் தயாரிக்க கடந்த 1991 ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசு ரூ.7.7 கோடி ஒதுக்கியது. ஆயிரக்கணக்கான நடிகர்களைப் பார்த்து, பொருத்தமான நடிகராக மம்மூட்டி தேர்வு செய்யப்பட்டார்.
ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, இந்தியாவின் பிற 9 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட படம் கடந்த 1998 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியானது. மிகத் துல்லியமான ஆய்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட சிறந்த படமாக பத்திரிக்கைகள் கொண்டாடின. இதனால் அந்த ஆண்டுக்கான சிறந்த ஆங்கிலப்படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த கலை இயக்கம் உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருதுகளை இப்படம் குவித்தது.

ஆனால், இத்தனைச் சிறப்புகளைப் பெற்ற அந்தப்படம், சேரவேண்டிய மக்களை அடையவில்லை. “இதற்கு காரணம் பெரும்பாலான தியேட்டர்கள் சாதி ஆதிக்க உணர்வு படைத்தவர்கள் வசம் இருப்பதே” என்று அன்றே தலித் விடுதலைப் போராளிகள் வருத்ததுடன் கூறினர்.

சுதந்திர இந்தியாவின் சட்டத்தை இயற்றியவருக்கே அநீதியா?” என்று நாம் கேட்கலாம். அது அப்படித்தான், இன்னும் வர்ணாசிரம கொள்கைகளே இந்தியாவில் ஆட்சி செய்கிறது என்பதையே பார்க்கமுடிகிறது. தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு 120 படங்கள் வெளியாகின்றன, 800 கோடிக்கும் குறையாமல் வர்த்தகம் நடக்கிறது. ஆயிரத்து 800 திரையரங்கங்கள் நாள்தோறும் இயங்குகின்றன. ஆனாலும், ஒரு தலித் விடுதலைப் போராளியின் வரலாறு மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டது.

10 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் அம்பேத்கர் இப்போது டிசமபர் 3ம் தேதி வெளியாக இருக்கிறார். இதுபற்றி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில நிர்வாகியும், ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளருமான வழக்கறிஞர் நீலவேந்தன் கூறுகையில், “இந்தியா முழுவதும் செய்ததைப் போல, தமிழகத்திலும் ஆதிக்க எண்ணம் கொண்ட சக்திகள் திரையரங்குகளில் படத்தை இருட்டடிப்பு செய்யக்கூடும். அதனை முறியடித்து, இந்தப் படத்தையே ஒரு இயக்கமாக்க வேண்டும்” என்றார்.

‘விக்கிலீக்ஸ்’ தொடர்ந்து அம்பலபடுத்திவரும் உண்மைகள்.

இராக் போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, விக்கிலீக்ஸ்’ இணையதள நிறுவனம் தற்போது உலகம் முழுவதிலும் அமெரிக்க நிர்வாகமும், அமெரிக்க தூதரகங்களும் நடத்தி வரும் நாசகர பேச்சுவார்த்தைகள், பேரங்கள், அராஜகங்களை அம்பலப்படுத்தும் விதமாக லட்சக்கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது.இதனால் தனது நண்பர்கள், கூட்டாளிகளுடனான உறவுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அமெரிக்க நிர்வாகம் கதிகலங்கிப் போயுள்ளது. இதையடுத்து விக்கிலீக்ஸ் நிறுவனத்தை மூடுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சுவீடனைச் சேர்ந்த இணைய தள நிறுவனம் விக்கிலீக்ஸ். இந்நிறுவனம், உலக மக்கள் அனை வரும் உண்மைத்தகவல்களை அறிந்து கொள்ள உரிமை உடையவர்கள் என்ற கருத்தோட்டத்தை முன் வைத்து, ரகசிய தகவல்களையெல்லாம் கைப்பற்றி இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா அரங்கேற்றிய அட்டூழியங்கள் குறித்த விவரங்கள் ஏராளமாக இந்நிறுவனத்திடம் சிக்கியுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு, இராக் போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய கொடிய தாக்குதல்கள், அப்பட்டமான மனித உரிமை மீறல்கள். இதில் அமெரிக்க ராணுவம், சிஐஏ உள்ளிட்ட நாசகர உளவு ஸ்தாபனங்கள் நடத்திய சதி ஆலோசனைகள் என அனைத்தையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

இது அமெரிக்க நிர்வாகத்தை ஆத்திரத்திற்கு உள்ளாக்கிய நிலையில், தற்போது 2 லட்சத்து 51 ஆயி ரத்து 287 ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் அமெரிக்காவிலும், உலக நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்ககளிலும் நடத்தப்பட்ட சதித்திட்டங்கள், சிறிய நாடுகளுக்கு எதிரான தாக்குதல் திட்டங்கள் என பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை உள்ளடக்கியவை ஆகும். 1966ம் ஆண்டு முதல் 2010 பிப்ரவரி வரை அமெரிக்காவிலும், பல்வேறு நாடுகளில் உள்ள 274 அமெரிக்க தூதரகங்களிலும் உருவாக்கப்பட்ட ரகசிய ஆவணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவணங்கள் மூலம் உலகம் முழுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவு நடவடிக்கைகள் எந்தளவிற்கு இழிவானவையாக இருக்கின்றன என்பது அம்பலமாகியுள்ளது. இது போன்ற, மிகப்பெரும் அளவிலான ரகசிய ஆவணங்கள் உலக மக்களுக்கு பகிரங்கமாக வெளியிடப்பட்டது, வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதுமான தலைவர்கள், அவர்களின் அந்தரங்க விஷயங்கள், நாடுகள், அவைகளுக்கிடையேயான பிரச்சினைகள் எல்லாவற்றையும் கண்காணித்து, அமெரிக்கா வைத்திருக்கும் கருத்துக்கள் இதனால் வெளிவந்திருக்கின்றன. இவை சர்வதேச அளவில் அமெரிக்காவின் அபிலாஷைகளையும், அட்டூழியங்களையும் காட்டுகின்றன. அவைகளில் சில:
பாலஸ்தீனத்தை தொடர்ந்து தாக்குவோம் என்றும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தீவிரமாக தாக்க திட்டமிட்டிருப்பதாகவும், ஒரு அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் இஸ்ரேலின் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் எகுத்பராக் கூறியுள்ளார். இது தொடர்பாக எகிப்திடம் ஏற்கெனவே பேசிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபிய மன்னர் ஈரானை தாக்குமாறு தொடர்ந்து அமெரிககாவிடம் வலியுறுத்தி வந்துள்ளார். சவூதி மன்னர் அப்துல்லா, 2008 ஏப் ரல் மாதம் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளோடு நடத்திய சந்திப்பின்போது இதை வலியுறுத்தியுள்ளார். இதை பரிசீலிப்பதாக, அமெரிக்கா கூறியது.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீது கர்சாய், மனநிலை பிறழ்ந்தவர் என்றும், அவர் போதை மருந்து கடத்தல் மற்றும் ஊழலில் திளைப்பதாகவும் இது நீடிக்கட்டும் என்றும் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தூதரக அதிகாரிகள் பேசியுள்ளனர். இந் நாட்டின் துணை ஜனாதிபதியும் ஒரு ஊழல் பேர்வழி என்றும் பேசியுள்ளனர். அவர் போதை மருந்து கடத்தல் தடுப்பு தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் 52 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் வாங்கியது தெரியவந்துள்ளது.

இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகங்களிலிருந்து பதிவுசெய்யப்பட்ட 3,038 ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் குறித்த விவரங்கள் அடங்கும். இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைகளை தீர்க்க அமெரிக்கா முழுமையாக தலையிட்டு வருவது குறித்தும் இந்த ஆவணங்கள் உண்மைகளை வெளிக்கொண்டுவந்துள்ளது. (இந்தியா - பாகிஸ்தான் இடையே தாங்கள் ஒருபோதும் தலையிட விரும்பவில்லை என்று அமெரிக்க தூதர்கள் அடிக்கடி கூறி வருவது கவனிக்கத்தக்கது).

இந்த ஆண்டு துவக்கத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாகவும் துருக்கி ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. இஸ்தான்புல் நகரில் நடை பெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளில் ஒன்றான இந்தியாவை அழைக்க வேண்டாம் என்று அமெரிக்காவின் ஒப்புதலோடு துருக்கி முடிவு செய்தது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் விவகார துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் மற்றும் துருக்கியின் வெளி யுறவுத்துறை அரசியல் விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு விவகாரத் துறை துணை அமைச்சர் ரவுப் என்ஜின் சொய்சால் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, பாகிஸ்தானை கைக்குள் வைத்திருக்க வேண்டுமானால் ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்த சந்திப்பிற்கு இந்தியா வரக் கூடாது என்று பேசப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காகவும் இப்படி திட்டமிடப்பட்டது என்பதும் இந்த ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

இவை தவிர வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளில் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்தும், இவற்றை அழிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவது குறித்தும், இதற்கு இஸ்ரேல் உள்ளிட்ட தனது கைக்கூலி நாடுகளுடன் அமெரிக்க நிர்வாகம் வாஷிங்டனிலிருந்தும், பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் மூலமாக தொடர்ந்து பேசி வருவது குறித்தும் ஏராளமான ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்கா, உலகின் முன்னே அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது

சனி, 18 செப்டம்பர், 2010

காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு! காஷ்மீர் மக்களின் உரிமை போராட்டம்.

இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை!” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. “இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது” என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர். பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள்.

காஷ்மீரில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்துவரும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக இந்திய அரசு பழிபோட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தை யார் தூண்டிவிடுகிறார்கள் என்பதை அலசி ஆராயும் முன், காஷ்மீர் மாநிலம் கடந்த இருபது ஆண்டுகளில் எப்படி ஒரு திறந்தவெளி இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, காஷ்மீரில் 3,00,000 இந்திய இராணுவச் சிப்பாய்களும், தேசியத் துப்பாக்கி படைப் பிரிவைச் சேர்ந்த 70,000 சிப்பாய்களும், மத்திய போலீசு படையைச் சேர்ந்த 1,30,000 சிப்பாய்களும் – ஆக மொத்தம் 5,00,000 சிப்பாய்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலப் போலீசுப் படை இந்த எண்ணிக்கையில் சேராது.

காஷ்மீரில் ‘அமைதி’யை ஏற்படுத்த இத்தனை இலட்சம் துருப்புகள் தேவை என்றால், எத்தனை ஆயிரம் தீவிரவாதிகள் அம்மாநிலத்தில் இருக்கக்கூடும் என உங்கள் மனம் கணக்குப் போடலாம். அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள், அங்கே வெறும் 660 தீவிரவாதிகள்தான் இருப்பதாக சமீபத்தில் இந்திய இராணுவம் அறிக்கை அளித்துள்ளது.

‘‘தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டத்தை முசுலீம் தீவிரவாத அமைப்புகள் எதுவும் தலைமை தாங்கி நடத்துவதாகத் தெரியவில்லை; இளைஞர்களும் தாய்மார்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடுகிறார்கள்; போராடுபவர்கள் கைகளில் துப்பாக்கிகள் கிடையாது; மாறாக, தங்களைத் தற்காத்துக் கொள்ள கற்களைத்தான் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்; இப்போராட்டத்தை போலீசைக் கொண்டே கட்டுப்படுத்திவிட முடியும்; இராணுவம் தேவையில்லை” எனச் சில நடுநிலையான பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர். உண்மை இப்படியிருக்க, அம்மாநிலத் தலைநகர் சீறிநகரை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமென்ன?

ஈராக்கில் 166 பேருக்கு ஒரு சிப்பாய் என்ற எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவம் இறக்கிவிடப்பட்டிருக்கும்பொழுது, காஷ்மீரிலோ 20 காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியச் சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இந்திய இராணுவம் இறக்கிவிடப்பட்டுள்ளது. அதனை அமெரிக்க ஆக்கிரமிப்பு எனும்பொழுது, காஷ்மீர் நிலையை இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிடாமல் வேறெப்படிக் கூற முடியும்?

தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரிலும், பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரிலும் திணிக்கப்பட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பு, எப்படிபட்ட அநீதியை காஷ்மீர் மக்களுக்கு இழைத்து வருகிறது தெரியுமா? 1990-ஆம் ஆண்டு தொடங்கி 2007-ஆம் ஆண்டு முடியவுள்ள 17 ஆண்டுகளில் இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் அம்மாநில போலீசும் நடத்திய துப்பாக்கி சூடுகள், போலி மோதல்கள், இரகசியக் கொலைகள், கொட்டடிச் சித்திரவதைகளில் ஏறத்தாழ 70,000-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அரசுப் படைகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 8,000 காஷ்மீரிகள் சுவடே தெரியாமல் ‘காணாமல்’ போய்விட்டனர். அப்படைகள் நடத்தியிருக்கும் பாலியல் வல்லுறவுகள் இந்தக் கணக்கில் அடங்காது.

அம்மாநிலத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக அமலில் இருந்துவரும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இராணுவச் சிப்பாய்கள் மீது, இந்திய அரசின் அனுமதியின்றி அம்மாநில அரசு புகார்கூடச் செய்ய முடியாது என்ற பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. தேசிய நலன் என்ற பெயரில் இராணுவச் சிப்பாய்கள் நடத்தும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு பற்றி காஷ்மீரத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் புகார் கொடுக்க வேண்டும் என்றால், அவர் முதலில் “தான் இந்திய தேசிய நலனுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை” என்று நிரூபித்தாக வேண்டும்.

காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு நாளும் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைச் சந்தித்து வரும்பொழுது, மைய அரசோ கடந்த பதினேழு ஆண்டுகளில் இராணுவச் சிப்பாய்களுக்கு எதிரான வெறும் 458 வழக்குகளைத்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. இதே காலத்தில் இந்திய இராணுவத்தின் மனித உரிமைப் பிரிவு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 1,321 வழக்குகளில் 54 வழக்குகளைத் தவிர பிற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

காஷ்மீர் மக்கள் பல போராட்டங்களை நடத்திய பிறகுதான், இவ்வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதையும், இப்போராட்டங்களின்பொழுது நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இப்படி காஷ்மீர் மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் இந்திய அரசையும் அதனின் இராணுவத்தையும் வெளியேறக் கோரி அம்மக்கள் போராடுவது தேச விரோதச் செயல் என்றால், கொலையும், கொள்ளையும், பாலியல் வன்புணர்ச்சியும்தான் தேச நலனின் பொருளாகிவிடுகிறது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 'காணாமல் போனவர்களின்' புகைப்படங்களைப் பார்ர்த்து விம்மியழும் காஷ்மீரத்துத் தாய் இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் கடந்த இருபது ஆண்டுகளாக நடத்திவரும் போராட்டத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற முசுலீம் தீவிரவாத அமைப்புகளின் பங்கு இருப்பதை மறுக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இந்திய அரசின் இந்து தேசிய வெறிதான் இப்பிரச்சினையின் மூல காரணமாக இருக்கிறது என்பதும்.

இந்திய அரசு, ஐ.நா. மன்றத்தில் ஒப்புக்கொண்டபடி ஜம்மு-காஷ்மீரில் பொதுஜன வாக்கெடுப்பை நடத்தாமல் மறுத்தது; இந்திய அரசியல் சாசனத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சில தனியுரிமைகளை நீர்த்துப் போகச் செய்தது; காங்கிரசு கும்பல் தனது சுயநலனுக்காக அம்மாநிலத்தில் நடத்திய ஆட்சி கவிழ்ப்புகள், தேர்தல் மோசடிகள் – இவைதான் 1980-களின் இறுதியில் காஷ்மீரில் ஆயுதந்தாங்கிய போராட்டம் வெடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தன. வரலாற்றை அவ்வளவு பின்னோக்கிப் பார்க்கத் தேவையில்லை. இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளால் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துபோய்விட்டதாகச் சொல்லப்பட்ட பின்னும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காஷ்மீரில் அடுத்தடுத்து இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதற்குக் காரணம் பாகிஸ்தானா, இல்லை இந்திய தேசியவாதிகளா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசு-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அம்மாநிலத்தை ஆண்டு வந்தபொழுது, அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கிப் போவதற்காக 39.88 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கப் போவதாக அக்கூட்டணி ஆட்சி அறிவித்தது. அமர்நாத் யாத்திரை முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைத் தூண்டிவிடும் வருடாந்திர நிகழ்ச்சி நிரலாக மாறிப் போனதால், காஷ்மீர் மக்கள் பக்தியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த நில ஒதுக்கீடு நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர். உடனே, ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெளிமாநிலங்களில் இருந்து ஜம்முவிற்கு ஆட்களைத் திரட்டிவந்து எதிர் போரட்டத்தை நடத்தியதோடு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மீது ஒரு சட்டவிரோத பொருளாதார முற்றுகையைத் திணித்தது. காஷ்மீர் மக்கள் இம்முற்றுகையை முறியடிக்கும் வண்ணம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடப்பது என்ற போராட்டத்தைத் தொடங்கினர். இப்போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியான பின்னர், நில ஒதுக்கீடு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

இப்போராட்டத்திற்குப் பின் நடந்த தேர்தலில் எதிரெதிராகப் போட்டியிட்ட காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் தேர்தலுக்குப் பின் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின. இந்தச் சந்தர்ப்பவாத ஆட்சிக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொள்ளும் முகமாக, “காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படும்; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்; அத்துமீறல்கள் குறித்த உண்மை கண்டறியும் குழு நிறுவப்படும்” என்ற வாக்குறுதிகளை அள்ளி வீசினார், முதல்வர் ஒமர் அப்துல்லா. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறவில்லை என்பது ஒருபுறமிருக்க, காஷ்மீர் மக்களின் மீதான இராணுவத்தின் பிடியும், அடக்குமுறையும் கொஞ்சம்கூடக் குறையவில்லை என்பதையும் மக்கள் கண்டனர்.

ஷோபியான் என்ற சிறுநகரைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது; கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஜஹித் ஃபாரூக் என்ற 16 வயது சிறுவன் நடுத்தெருவில் நாயைச் சுடுவது போல எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; கடந்த ஏப்ரல் மாதம் தேசியத் துப்பாக்கிப் படைப் பிரிவினர், மூன்று தொழிலாளர்களை எல்லைப் பகுதிக்குக் கடத்திக்கொண்டு போய்ச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களை எல்லை தாண்டி வரமுயன்ற தீவிரவாதிகளாக ஜோடனை செய்த சம்பவம் – இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தினரும், துணை இராணுவப் படைகளும், காஷ்மீர் போலீசாரும் நடத்திய பல பச்சைப் படுகொலைகள்தான் இப்போராட்டத்தின் தூண்டுகோலாக அமைந்தன.

‘‘துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்ட பிறகு, மக்களின் விடுதலை உணர்வும் செத்துவிடும்; அடுத்த தலைமுறை இளைஞர்கள் பாலிவுட் திரைப்படங்களிலும், பப் கலாச்சாரத்திலும் மூழ்கிப்போய் விடுவார்கள் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால், எங்களின் விடுதலை வேட்கை கொஞ்சம்கூடக் குறையாமல் இருப்பதைத்தான் இப்போராட்டம் காட்டுகிறது” என காஷ்மீர் மக்களின் மனோநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார், பள்ளத்தாக்கைச் சேர்ந்த புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் ஷாத் சலீம்.
காஷ்மீர் மக்களின் தேசிய இன விடுதலை உணர்வுதான் இப்போராட்டத்தின் அடிப்படையாக உள்ளது என்ற உண்மையை மூடிமறைக்க, இப்போராட்டம் பற்றிப் பலவித கட்டுக்கதைகளையும் அவதூறுகளையும் மைய அரசும் அதனை நத்திப் பிழைக்கும் தேசியப் பத்திரிகைகளும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு பரப்பி வருகின்றன. “விரக்தியடைந்த இளைஞர்களின் போராட்டம்” என ஒருபுறம் நையாண்டி செய்துவரும் அக்கும்பல், இன்னொருபுறமோ, “லஷ்கர்-இ-தொய்பாவிடம் 200 ரூபாய்யை வாங்கிக்கொண்டு நடத்தப்படும் கூலிப் போராட்டம்” என அவதூறு செய்து வருகிறது.

சோபுர் நகரில் கடந்த ஜுன் 29 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது மத்திய ரிசர்வ் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுவன் கொல்லப்பட்டான். “அவன் அப்பாவி கிடையாது; கூலிக்காக வேலை செய்யும் போக்கிரி” என அச்சிறுவனைப் பற்றிக் கூறியிருக்கிறார், உள்துறை அமைச்சகச் செயலர். இப்படி வக்கிரமும், காலனியாதிக்க ஆணவமும் நிறைந்த இந்திய அரசை வெளியேறக் கோருவது எந்த விதத்தில் தவறாகிவிடும்?

பதாமாலூ என்ற ஊரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது வீட்டை விட்டு வெளியே வருவதைப் பார்த்த இராணுவச் சிப்பாய்கள், துப்பாக்கியை நீட்டியபடியே அவனை நோக்கிப் பாய்ந்து வந்து, “உன்னைக் கொன்று விடுவோம்” என மிரட்டியுள்ளனர். அரண்டு போய் வீட்டுக்குள் ஓடிப்போன அந்தச் சிறுவன் பயத்தில் அடுத்த பத்து நிமிடங்களுக்கு ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத ஊமையாகிப் போனான். ஐந்து வயதுச் சிறுவனைக் கொன்றுவிடுவோம் என மிரட்டும் இந்திய இராணுவம் காஷ்மீரில் யாரைக் காப்பாற்ற நிற்கிறது?

இந்தக் கேள்வியை காஷ்மீருக்கு வெளியேயுள்ள பெரும்பாலான “இந்தியர்கள்” எழுப்ப மறுக்கிறார்கள். “அவர்கள் காஷ்மீர் பற்றி பொய் சொல்கிறார்கள்; தங்களின் சொந்தப் பொய்யைத்தான் அவர்கள் நம்புகிறார்கள்” என இத்தகைய இந்தியர்களைப் பற்றிக் கூறுகிறார், டெல்லியில் வாழும் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர். காஷ்மீர் பற்றிய உண்மை நிலவரம் வெளியே தெரியக்கூடாது என்ற நோக்கில், இந்திய இராணுவம் உள்ளூர் செய்தி ஊடகங்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாட்டுகளைக் கண்டித்து பத்திரிக்கையாளகர் நடத்தும் ஆர்பாட்டம்

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் 800-க்கும் மேற்பட்ட அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீன மக்கள் இசுரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தி வரும் இண்டிஃபதா போராட்டத்தைத்தான் இது நமக்கு நினைவூட்டுகிறது. சமூகம் தழுவிய ஆதரவோடு நடைபெற்று வரும் இப்போராட்டங்களை, இராணுவ அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலம் ஒடுக்கிவிட முடியும் என ஆளுங்கட்சி காங்கிரசும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.-வும் ஒரேவிதமாக எண்ணுகின்றன.

ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டில், இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தங்களைத் தற்காத்துக் கொள்ள இராணுவம்-துணை இராணுவப் படைகள் மீது கற்களை வீசியெறியும் இளைஞர்கள், மரண தண்டனைகூட விதிக்கப்படும் சாத்தியமுள்ள, “அரசின் மீது போர் தொடுத்த” குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். இந்த அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் நெஞ்சுரத்தையும் தியாக உணர்வையும் 200 ரூபாய் கூலிப் பணத்தால் ஊட்டிவிட முடியுமா? விடுதலை உணர்வால் உந்தித் தள்ளப்படும் அந்த இளைஞர்கள் தமது மனங்களிலிருந்து பயம் என்பதையே அகற்றி விட்டார்கள் என்கிறார், ஹுரியத் மாநாட்டு கூட்டணியைச் சேர்ந்த தலைவரான சையத் ஷா கீலானி.

காஷ்மீரில் ஒரு தற்காலிக அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றால்கூட, “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது; இராணுவத்தையும், துணை இராணுவப் படைகளையும் திரும்ப அழைத்துக் கொள்வதோடு, காஷ்மீர் போலீசு துறையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை குழுவைக் கலைப்பது; மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பது” ஆகிய குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்ற மைய அரசு முன்வர வேண்டும்.

ஆனால், மைய அரசோ, இந்த குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளைக்கூட நிறைவேற்ற மறுக்கிறது. இதற்குப் பதிலாக, பொருளாதார சலுகை என்ற பெயரில் அஞ்சையும் பத்தையும் தூக்கியெறிந்து, இப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என இந்திய ஆட்சியாளர்கள் மனப்பால் குடிக்கின்றனர். விடுதலை உணர்வை பணத்தால் விலை பேசும் இந்திய அரசின் முட்டாள்தனமான ஆணவம் காஷ்மீரில் பலமுறை தோல்வி கண்டிருக்கிறது.

‘‘காஷ்மீரில் ஒரு அடி மண்ணைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்” எனத் தேசிய வெறியூட்டும் ஓட்டுக்கட்சிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இந்திய மண்ணைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கத் தயங்குவதில்லை. இதனை ஒப்பிட்டுப் பார்த்தாலே ஆளும் கும்பலின் தேசியம் என்பது மாபெரும் மோசடி என்பதைப் புரிந்து கொண்டுவிட முடியும்.

இந்து தேசியவெறி கொண்ட ஓட்டுக்கட்சிகள், அவர்களை நத்திப் பிழைக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற துரோகிகள், போலி மோதல் கொலைகள் மூலம் பணத்தையும் பதவியையும் அள்ளிக் கொள்ளத் துடிக்கும் காக்கிச் சட்டை கிரிமினல்கள் – ஆகியோர்தான் காஷ்மீர் இந்திய அரசின் காலனியாக நீடிப்பதால் இலாபமடையப்போகும் பிரிவினர். போலி தேசியப் பெருமையில் மூழ்கிப் போயுள்ள பிற இந்தியர்களுக்கு ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை எந்தப் பலனையும் அளிக்காது. மாறாக, முசுலீம் தீவிரவாதம் வளர்வதற்கும், பாகிஸ்தான் அதனைத் தூண்டிவிடுவதற்கும், இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து முறுகல் நிலை நீடிப்பதற்கும் ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

இந்திய அரசு பயங்கரவாதம் & காஷ்மீர் மக்களின் கண்ணீர்: தெக‌ல்கா வார‌இதழின் ரிப்போர்ட்.

காசுமீரிகள் கல்லெறிவதை மட்டும் திரும்ப, திரும்ப காட்டி கல்லெறிவதை ஏதோ பயங்கரவாதத்தின் இன்னொரு வடிவம் போல சித்தரிக்க முயல்கின்றன‌‌ செய்தி ஊடகங்கள். இதன் ஒரு பகுதியாக தான் “நல்ல வேளை என் மீது செருப்பைத் தான் எறிந்தார், கல்லை அல்ல என்ற காசுமீரின் முதல்வர் பரூக் அப்துல்லாவின்” பேச்சைக் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் உண்மை அவ்வாறு இல்லை. இந்த பொய்யை மட்டுமே கூறும் ஊடகங்களுக்கு நடுவே க‌ட‌ந்த‌ வார‌ம் தெக‌ல்கா வார‌இத‌ழில் வெளிவ‌ந்ததுள்ளது இந்த‌ க‌ட்டுரை. காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ? என்ற கேள்விக்கு விடை தான் இந்த கட்டுரை. கட்டுரையாளர் சாகித் இரஃபிக் ஒரு காசுமீரி, இவர் தில்லியில் வாழ்ந்துவரும் ஒரு ஊடகவியலாளர்.

நான் எப்பொழுதும் ச‌ண்டையை விரும்பிய‌து கிடையாது. க‌ல்லூரி கால‌ங்க‌ளில் என் ந‌ண்ப‌ர்க‌ள் குழு என்னை எப்போதும் கோழை என்றே விம‌ர்ச‌ன‌ம் செய்வார்க‌ள். என்னால் ஒரு உட‌ல் வ‌லு இல்லாத‌வ‌னை கூட‌ அடிக்க‌ இயலாது என்றும் கூட சொல்வார்க‌ள். ஆனால் நான் கோழை அல்ல‌. என்னை பொருத்த‌வ‌ரை பெரும்பான்மையான‌ ச‌ண்டைக‌ள் ப‌ய‌னில்லாத‌வை. அகிம்சாவாதி என்ற வார்த்தை என‌க்கு பிடிக்காது என்றாலும் நான் ஒரு அகிம்சாவாதி தான். வ‌ன்முறையை விட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை, க‌ருத்து விவாத‌ங்கள் போன்ற ப‌‌ல‌ ந‌ல்ல‌ வ‌ழிக‌ள் உள்ள‌ன‌ என்ப‌தே என் க‌ருத்து.

ஆனால் இன்று நான் ஒரு ஊட‌க‌விய‌லாள‌னாக‌ எழுத்தை எதிர்ப்பின் ஒரு அடையாளமாக நான்‌ கொண்டிருக்காவிட்டால், என‌து ந‌ண்ப‌ர்க‌ளை போலே நானும் காசுமீர‌த்து ந‌க‌ர‌வீதிக‌ளில் க‌ல்லெறிந்து கொண்டிருப்பேன்.ஆரம்ப காலங்களில் காசுமீரில் நான் கண்ட அடக்குமுறைகளும், ப‌டுகொலைகளும் என்னுள் எப்பொழுதும் ஒரு தெளிவின்மையை ம‌ட்டுமே ஏற்ப‌டுத்தி வ‌ந்த‌ன‌. ஆனால் க‌ட‌ந்த‌ இரு மாத‌ங்க‌ளாக‌ காசுமீரில் ந‌ட‌ப்ப‌வை எல்லாம் தெளிவான நீரோடையை போல‌‌ உள்ளது‌. உல‌க‌ம் காசுமீரில் ந‌ட‌ப்ப‌தை க‌ண்டும் காணாம‌ல் வாய் மூடி மௌனித்துள்ள‌து. இந்த‌ மௌன‌ம் அகிம்சாவாத‌த்தை தின‌மும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ தின்றுகொண்டே வ‌ருகின்ற‌து. இந்த கள்ள மௌனமே எல்லா வ‌ன்முறைக‌ளும் ஆர‌ம்பிக்க‌ கார‌ண‌மாகும்.

வீட்டிலிருந்து வ‌ருகின்ற‌ எல்லா அலைபேசி அழைப்புக‌ளுமே இத‌ய‌த்தை பிள‌க்க‌க் கூடிய‌ செய்திகளாக‌ உள்ள‌ன‌. என்னுள் வ‌ன்முறை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் வ‌ள‌ர்வ‌தை உண‌ர்கின்றேன் நான். எங்க‌ள் வீட்டின் அருகிலுள்ள‌ காய்க‌றி க‌டைக்கார‌ர் அர‌ச ப‌டைக‌ளால் சுட்டுக் கொல்ல‌ப்ப‌ட்டார் என்று என் அம்மா என‌க்கு கூறிய‌ போது நான் தில்லியில் இருந்தேன். நான் காசுமீரிலிருந்து தில்லிக்கு வ‌ரும் முன்பு என் ப‌க்க‌த்து வீட்டிலிருந்து க‌டைசி ந‌ப‌ர் அவர் ஒருவர் ம‌ட்டும் தான். விடைபெறும் முன் இருவ‌ரும் புன்ன‌கையை ப‌ரிமாறிக் கொண்டோம். ஆனால் இப்பொழுது என் மனதை க‌டுங்கோப‌ம் சூழ்ந்துகொண்டுள்ள‌து. ம‌த்திய‌ ஆயுத‌ப் படையைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் மிக‌க்க‌டுமையான‌ கோப‌த்துடன் வீடுகளின் சாளரக் கண்ணாடிகளை உடைத்து, வீட்டினுள்ளே உள்ள‌ அனைவ‌ரையும் க‌டுமையாக‌ தாக்குகின்ற‌ன‌ர் என‌ என்னிட‌ம் கூறினான் என் த‌ம்பி.

தில்லியில் காசுமீரை மேற்பார்வையிடும் நிறுவ‌ன‌ம் ஒன்றில் வேலை செய்யும் என் ந‌ண்ப‌ன் க‌ட‌ந்த‌ வார‌ம் ஒரு நாள் மாலையில் என்னை அழைத்தான். அவ‌ன‌து ப‌ணிக‌ளுக்கு இடையிலும் அவ‌ன் காசுமீரில் அர‌ச‌ ப‌டையினால் அடித்தே கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஒன்ப‌து வ‌ய‌து சிறுவ‌ன் ச‌மீர் அக‌ம‌தின் உட‌லை அவனும் பார்த்திருப்பான் என‌ நினைக்கின்றேன்.அவ‌ன‌து உட‌லெங்கும் ல‌த்தி குச்சியின் வ‌ரிக‌ள் சாரை, சாரையாக‌ உள்ள‌ன‌. அவ‌ன் தின்று கொண்டிருந்த‌ மிட்டாயின் மீத‌ம் இன்னும் அவ‌ன‌து வாயில் அப்ப‌டியே உள்ள‌து. நான் அவ‌னை ச‌மாத‌ன‌ப்ப‌டுத்த முயல‌ இறுதியில், இருவரும் ஒருவரை ஒருவர் ச‌மாத‌ன‌ப்ப‌டுத்திக் கொண்டோம். அடுத்த‌ நாள் காலை அவ‌ன் தில்லியிலிருந்து காசுமீருக்கு செல்ல‌ப் போவ‌தாக‌ கூறினான். “இங்கு எல்லோரும் பொய்யை ம‌ட்டுமே கூறுகின்ற‌ன‌ர். மேலும் அவ‌ர்களின் பொய்யை அவ‌ர்க‌ள் உண்மையென்று ந‌ம்புகின்றார்க‌ள்” என்றான் அவ‌ன்.

இந்தியாவில் ஒரு “பொய்” எல்லோராலும் ப‌ர‌வ‌லாக‌ ந‌ம்ப‌ப்ப‌டுகின்ற‌து, அதாவ‌து அர‌ச‌ ப‌டைக‌ள் காசுமீர‌த்து ம‌க்க‌ளை பாதுகாக்கின்ற‌ன‌ர் என்ப‌தே அந்த‌ “பொய்”. ஆனால் காசுமீரிக‌ள் தாங்க‌ள் அர‌ச‌ப‌டைக‌ளால் பாதுகாக்க‌ப்ப‌டுவ‌தாக‌ ந‌ம்புவ‌தே இல்லை. இந்தியாவில் உள்ள‌வ‌ர்க‌ள் அர‌ச‌ப‌டையை “பாதுகாவ‌ல‌ர்கள்” என்றும், அவ‌ர்க‌ள் தான் தீவிர‌வாதிக‌ளிட‌ம் இருந்து காசுமீரிக‌ளை பாதுகாக்கின்ற‌ன‌ர் என்றும் எண்ணுகின்ற‌ன‌ர். ஆனால் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து தான் காசுமீரிக‌ளை பாதுகாக்க‌ வேண்டியுள்ள‌து என்ப‌தே உண்மை. காசுமீரிக‌ள் த‌ங்க‌ளை ஆக்கிமிர‌த்துள்ள‌ இந்த‌ ப‌டைக‌ள் த‌ங்க‌ள் நில‌த்தை விட்டு வெளியேற‌ வேண்டும் என்று கோருகின்ற‌ன‌ர். அர‌ச‌ப‌டைக‌ள் மீது அவ‌ர்க‌ள் கொண்டுள்ள‌ உண‌ர்வு ப‌யம், வெறுப்பு, பழிஉணர்ச்சி போன்ற‌வை ம‌ட்டுமே.

க‌ட‌ந்த‌ இர‌ண்டு மாத‌த்தில் ம‌ட்டும் காவ‌ல் துறை ம‌ற்றும் ம‌த்திய‌ பாதுகாப்பு ப‌டை சுட்ட‌தில் 55 ஆயுத‌ம் ஏந்தாத‌ பொதும‌க்க‌ள் காசுமீரில் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். இவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர் சிறுவ‌ர்க‌ள். ஒன்று இவ‌ர்க‌ள் க‌ல்லெறிந்து கொண்டிருந்திருக்க‌லாம் அல்ல‌து அண்டை வீடுக‌ளில் விளையாடிக் கொண்டிருந்திருக்கும் போது சுடப்பட்டிருக்கலாம். காசுமீரில் ப‌த‌ட்ட‌நிலை ஆர‌ம்பிக்கும் கால‌க‌ட்ட‌ங்க‌ளில் நான் அங்கு இருந்தேன். ஒவ்வொரு இறுதி ஊர்வ‌ல‌த்திற்கும் சென்ற‌ நான் ம‌க்க‌ள் மிகக்கடுமையான‌ கோப‌த்துட‌ன் இருப்ப‌தை க‌ண்டேன். க‌ங்ப‌க் என்ற‌ ப‌குதியில் 17 வ‌ய‌து சிறுவ‌னின் இறுதி ஊர்வ‌ல‌த்தில் ஊர‌ட‌ங்கு உத்த‌ர‌வை மீறி ஆயிர‌க்க‌ண‌க்கானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். அவ‌ன‌து இரு ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌னை காவ‌ல்துறை அழைத்துச் சென்ற‌தாக‌வும், பின்னால் அவ‌ன் நீரில் மூழ்கி இற‌ந்துவிட்டான் என‌ காவ‌ல் துறையை கூறிய‌தாக‌வும் ஊட‌க‌ங்க‌ளுக்கு சொன்னார்க‌ள். ஆனால் இற‌ந்த‌ சிறுவ‌ன் ந‌ன்கு நீச்ச‌ல் தெரிந்த‌வ‌ன், ர‌ண‌ அறுவை சிகிச்சையில் த‌லையில் இரண்டு ப‌ல‌த்த‌ காய‌ங்க‌ள் இருப்ப‌து தெரிந்த‌து.

இத‌ற்கு ம‌று நாள் “NDTV” என்ற‌ செய்தி ஊட‌க‌த்தில் பேசிய‌ மாநில‌ முத‌ல்வ‌ர் ப‌ரூக் அப்துல்லா “அவ‌ன‌து ந‌ண்ப‌ன‌து உயிர் முக்கிய‌ம் என‌த் தெரிந்திருந்தால், இந்த‌ இருவ‌ரும் அவ‌னை நீரிலிருந்து காப்பாற்றியிருக்க‌ வேண்டிய‌து தானே” என‌ கேட்டார். இவ்வாறு கேட்ப‌த‌ற்கு ப‌ரூக் அப்துல்லாவால் ம‌ட்டும் தான் முடியும், அதிகார‌வ‌ர்க்க‌த்தின் பார்வை இவ்வாறு தான் இருக்கும். இவ‌ர்க‌ளை பொருத்த‌ வ‌ரையில் காசுமீரிக‌ள் “PDP” யின் ப‌ண‌த்திற்காக‌வும், பாகிசுதானின் உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ளுக்காக‌வும் உயிரை விடும் த‌ர‌க‌ர்க‌ள் தானே. இந்தியாவில் 40 ஆண்டு கால‌ம் வாழ்ந்த‌தால் ப‌ரூக் அப்துல்லாவிற்கு இந்த உலகப்பார்வை வ‌ந்துள்ள‌து. முஃப்திக‌ளோ இவ‌ர்க‌ளை விட‌ மோச‌ம், அவ‌ர்க‌ள் எப்பொழுது பிரிவினை கோருவார்க‌ள், எப்பொழுது இந்திய‌ தேசிய‌வாதிக‌ளாக‌ மாறுவார்க‌ள் என்ப‌து யாருக்குமே தெரியாத‌ ஒன்று. அவ‌ர்க‌ளின் தேவை எல்லாம் ஆட்சி அதிகார‌ம் ம‌ட்டும் தான். ம‌த்திய‌ அர‌சு ப‌ரூக் அப்துல்லாவை தூக்கியெறிந்து விட்டு மெக‌பூபாவை முத‌ல் ம‌ந்திரி ஆக்க‌வேண்டும் என்ப‌தே அவ‌ர்க‌ள் எண்ண‌ம்.காசுமீரிக‌ளுக்கும், அப்துல்லாக்க‌ளுக்கும் இடையில் மிக‌ப்பெரிய‌ இடைவெளி உள்ள‌து. காசுமிரீக‌ளை நோக்கி எப்பொழுதும் துப்பாக்கிக‌ள் த‌யாராக‌ இருக்கும், அப்துல்லாக்க‌ளை நோக்கி அல்ல. தங்கள் உயிரை பற்றிய கவலையில்லாமல் ஏன் தடையையும் மீறி இறுதி ஊர்வலத்திலும், அரச படைகளை எதிர்த்தும் கல்லெறிந்து கொண்டிருக்கின்றனர் என அப்துல்லாக்க‌ளும், முப்திக்க‌ளும் புரிந்து கொள்ள‌ ம‌றுக்கின்ற‌ன‌ர். இருப‌து வ‌ருட‌ கால‌ங்க‌ளில் இங்கு கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ 70,000 ம‌க்க‌ளின் புதைகுழிக‌ளில் த‌ங்க‌ள் பொய்யையும் சேர்த்தே அவ‌ர்க‌ள் புதைத்து வ‌ந்துள்ள‌ன‌ர். ஒரு கால‌த்தில் தேசிய‌ காங்கிர‌சின் தீவிர‌மான‌ ஊழிய‌ராக‌ இருந்த‌ எங்க‌ள் உற‌வின‌ர் ஒருவ‌ர் பிற்கால‌த்தில் அதே க‌ட்சி காசுமீரிக‌ளுக்கு துரோக‌ம் செய்து விட்ட‌து என‌க் கூறினார் என்பத‌ன் பொருள் என‌க்கு இப்பொழுது தான் புரிகின்ற‌து. சேக் அப்துல்லா டோர்கா ம‌ன்ன‌ர்க‌ளின் இரும்புப் பிடியிலிருந்து காசுமீரை மீட்டு அதை விட‌ மோச‌மான‌ அட‌க்குமுறை அர‌சிட‌ம் ஒப்படைத்து விட்டார் என‌ அவ‌ர் தின‌மும் கூறுவார்.

சிறீந‌க‌ரின் க‌சூரி பாக் ப‌குதியில் வ‌ய‌தான த‌ந்தை ஒருவ‌ர் கொல்ல‌ப்ப‌ட்ட‌ த‌ன‌து ம‌க‌னின் உடலை பிடித்து கொண்டிருந்த படத்தை பார்த்தேன். ஆனால் ஆறுக்கும் மேற்ப‌ட்ட‌ காவ‌ல்துறையின‌ர் அவ‌ரை அவ‌ர‌து ம‌க‌னின் உட‌லை விட்டு பிரித்துச் செல்ல‌ முய‌ன்று கொண்டிருந்த‌ன‌ர். ஆனால் அவ‌ர் ம‌க‌னின் உட‌லை விட்டு பிரியாம‌ல் அருகிலேயே இருந்தார். அவ‌ர‌து ச‌ட்டை ம‌க‌னின் இர‌த்த‌தில் ந‌னைந்து போன‌து, அவ‌ர‌து வெள்ளை தாடி இர‌த்தத்தால் சிக‌ப்பு நிற‌மான‌து. அந்த‌ ப‌ட‌த்தை நான் பார்க்க‌ பார்க்க‌ என்னுள் ஏற்ப‌டும் வ‌லியின் ர‌ண‌ம் அதிக‌ரித்துக் கொண்டே சென்ற‌து. இற‌ந்த‌ த‌ன‌து ம‌க‌னின் உட‌லை க‌ட்டிய‌ணைத்து த‌ன‌து சோக‌த்தை ஒரு தந்தை வெளிப‌டுத்துவ‌தை த‌விர‌ அவ‌ரால் என்ன‌ செய்ய‌ முடியும் என்று என‌க்கு தெரிய‌வில்லை. ப‌ரூக் அப்துல்லாவால் அந்த‌ த‌ந்தையை அட‌க்குமுறையை மீறி அர‌ச‌ ப‌டைக்கு எதிராக‌ க‌ல்லெறிவ‌தை த‌டுக்க‌ குடியுமா? அந்த‌ வ‌ய‌தான‌ ம‌னித‌ரின் இட‌த்தில் ப‌ரூக் அப்துல்லா இருந்திருந்தால் எப்ப‌டி ந‌ட‌ந்திருப்பார், ஒரு த‌ந்தையைப் போல‌வா? ஒரு முத‌ல்வ‌ரை போல‌வா?. இந்நேர‌ம் இந்ந‌க‌ரமே துண்டாட‌ப்ப‌ட்டிருக்காதா? சிறீந‌க‌ர‌ம் ப‌ற்றி எரிந்திருக்காதா?

த‌ங்க‌ளின் நேச‌த்திற்குரிய‌ இற‌ந்த‌ உற‌வுக‌ளை க‌ல்லெறிவதன் மூலமாகவும், அரசு வாகனங்களை எரிப்பதன் மூலமாகவும் மிகச்சிறிய அளவில் மட்டுமே நினைவு கொள்கின்றார்க‌ள் அவ‌ர்க‌ளின் த‌ந்தைக‌ள், ச‌கோத‌ர‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ள், ந‌ண்ப‌ர்க‌ள். இது மட்டும் எப்ப‌டி த‌வறாகும்? காசுமீரை ச‌ட்ட‌ ஒழுங்கு பிர‌ச்ச‌னை என்று சுருக்கி பார்த்திட‌ முடியாது, அது ஒரு மீக‌ நீண்ட குருதி தோய்ந்த‌ வ‌ர‌லாற்றை கொண்டது. ம‌த்திய‌ ஆயுத‌ ப‌டையால் அனாதையாக‌ ஆக்க‌ப்ப‌ட்ட‌ சிறுவ‌ர்க‌ள் ம‌ட்டும் க‌ல்லெறிய‌ ஆர‌ம்பித்தால் உங்க‌ளால் 60,000 க‌ல்லெறிப‌வ‌ர்க‌ளை காண‌ முடியும், இவ‌ர்க‌ளுட‌ன் அர‌ச‌ ப‌டையால் வித‌வையாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளும் சேர்ந்தாலே 30,000 பெண்க‌ள் ஒவ்வொரு ப‌துங்கு குழி மற்றும் ஒவ்வொரு ப‌டை வீர‌ரை நோக்கியும் க‌ல்லெறிவ‌தை நீங்க‌ள் காண‌லாம்.

கையில் க‌ல்லுட‌ன் ஒரு சிறுவ‌ன் ப‌டை வீர‌ருக்கு எதிராக‌ வ‌ந்து நிற்கும் போது அவ‌னுக்கு படை வீரனுக்கும், தனக்கும் இடையே உள்ள‌ ப‌டை வ‌லுவின் வித்தியா‌ச‌ம் ந‌ன்கு தெரியும். அவ‌ன் என்ன தான் ச‌ரியாக‌ குறி பார்த்து எறிந்தாலும் ஒரு சிறிய‌ காய‌மோ அல்ல‌து ஒன்றிர‌ண்டு தைய‌ல்க‌ளுட‌னான‌ காய‌த்தை ம‌ட்டும் தான் ப‌டை வீர‌னுக்கு கொடுக்க‌ முடியும் இத‌ற்கே அவ‌ன் ப‌டைவீர‌னின் காலில் உள்ள‌ பாதுகாப்பு உறை, குண்டு துளைக்காத‌ மேல் ச‌ட்டை, த‌லைக் க‌வ‌ச‌ம் இதை எல்லாம் மீறி அவ‌ன் எறியும் க‌ல் செல்ல‌ வேண்டும். ஆனால் படை வீர‌னின் துப்பாக்கியில் இருந்து வ‌ரும் துவ‌க்கு(Bullet) ம‌ற்றும் படை வீரன் எறியும் க‌ண்ணீர் புகைக்குண்டுக‌ளினால் அந்த‌ சிறுவ‌ன் மிக‌க் க‌டுமையாக‌ பாதிக்க‌ப்ப‌ட‌லாம் அல்ல‌து உயிரையும் கூட‌ இழ‌க்க‌க்கூடும் என்ப‌து அந்த‌ சிறுவ‌ன் ம‌ற்றும் ப‌டைவீர‌ன் என இருவ‌ருக்குமே தெரியும்.

த‌ன‌து ஆயுத‌மாக‌ எப்பொழுது அந்த‌ சிறுவ‌ன் க‌ல்லை கையிலெடுக்க‌த் தொட‌ங்கினானோ அப்பொழுதே அவ‌ன‌து போராட்ட‌ம் ச‌மூக‌ நெறிகளின் படி(Social Moral) உய‌ர் நிலையை அடைந்துவிடுகின்ற‌து. அந்த‌ சிறுவ‌ன‌து நோக்க‌ம் ப‌டைவீர‌னை கொல்வ‌து தான் என்ப‌து மிக‌வும் முட்டாள்த‌ன‌மான‌ ஒரு க‌ருத்து. இந்த‌ ஒரு கார‌ண‌த்தினால் தான் க‌ட‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌டைபெற்றுவ‌ரும் க‌ல்லெறியும் போராட்ட‌ங்களில் ஒரு ப‌டை வீர‌னோ, காவ‌ல் துறையைச் சேர்ந்தோரோ கூட‌ இதுவ‌ரை இற‌க்க‌வில்லை. ஐந்து க‌ல்லெறியும் போராளிக‌ளுக்கு ந‌டுவே சிக்கிக்கொண்ட‌ காவ‌ல்துறை அல்ல‌து ப‌டை வீர‌ர்க‌ள் ப‌ல‌ர‌து புகைப்ப‌ட‌ங்க‌ளை நாம் பார்த்திருக்கின்றோம் ஆனால் இவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் கூட‌ இது வ‌ரை இற‌ந்த‌தில்லை என்ப‌து ம‌றுக்க‌முடியாத‌ உண்மை.

உலகமும், இந்தியாவும் தங்கள் துயரமான வரலாற்றை கேட்பார்கள் என பல காலம் காசுமீரிக‌ள் காத்திருந்த‌ன‌ர். ஆனால் அவ‌ர்க‌ளின் மொழியை யாரும் புரிந்துகொள்ள‌வில்லை. இத‌னால் எல்லா ம‌னித‌ர்க‌ளும் புரிந்த‌ ஒரு மொழியில் பேச‌ வேண்டும் என‌ காசுமீரிக‌ள் எண்ணினார்க‌ள். க‌ட‌ந்த‌ இர‌ண்டு மாத‌ங்க‌ளாக‌ க‌ல்லெறியும் மொழியின் மூல‌மாக‌ த‌ங்க‌ள் துய‌ர‌த்தை காசுமீரிக‌ள் உல‌க‌த்தாரிட‌ம் எடுத்துக் கூறுகின்றார்க‌ள்.


எந்த‌ தாயிட‌ம் உங்க‌ள் குழ‌ந்தைக‌ளை வெளியே அனுப்ப‌ வேண்டாம் என‌ ப‌ரூக் அப்துல்லா கேட்டுக் கொண்டாரோ அந்த‌ தாயே வீதிக‌ளுக்கு வ‌ந்து க‌ல்லெறிய‌ துவ‌ங்கியுள்ளார். க‌ட‌ந்த‌ மாத‌ம் தொலைக்காட்சியில் “இல‌சுக‌ர் இ தொய்பாவின்” பணத்திற்காக‌ இந்த‌ க‌ல்லெறித‌ல் நிக‌ழ்வ‌தாக‌ காட்டிய‌ போது அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” நான் என‌க்கு அடையாள‌ம் தெரிந்த‌ சில‌ரை பார்த்தேன். அவ‌ர்க‌ள் இருவ‌ரும் எனது வீட்டிற்கு ப‌க்க‌த்தில் வ‌சிக்கும் இரு பெண்க‌ள். 2005ஆம் ஆண்டு அந்த‌ பெண்க‌ளின் த‌ம்பியை ம‌த்திய‌ ஆயுத‌ப் ப‌டை கைது செய்து அழைத்துச் சென்ற‌ பொழுது இவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் வெறும் கால்க‌ளில் ம‌த்திய‌ ஆயுத‌ப் ப‌டை வ‌ண்டியை துரத்திக் கொண்டு நெடுதூர‌ம் சென்றார். ப‌த்து நாட்க‌ளுக்கு பிற‌கு அந்த‌ பெண்ணின் த‌ம்பியின் உட‌ல் ப‌க்க‌த்து தெருவில் கிட‌ந்த‌து. அவ‌ன‌து தோல்க‌ள் எரிந்த‌ நிலையில் இருந்த‌ன‌. அவ‌ன‌து உட‌லில் க‌ன‌ர‌க‌ ச‌க்க‌ரங்கள் ஏறிய‌து போலிருந்த‌து. அவ‌ன‌து பிற‌ப்புறுப்பில் மின்சார‌ க‌ம்பிக‌ள் இருந்த‌ன‌. இந்த‌ நிகழ்வுக்கு பின்னால் அந்த‌ பெண்க‌ள் முன்பு போல் இல்லை. 1995ல் த‌ன‌து க‌ண‌வ‌னை தொலைத்து விட்ட‌ (காணாம‌ல் போன‌) ஒரு பெண்ணையும் நான் அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” பார்த்தேன். அர‌ச‌ ப‌டையால் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ம‌க‌னை ப‌றிகொடுத்த‌ தாயை நான் அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” பார்த்தேன். அந்த‌ கூட்ட‌த்தில் இருந்த‌ ஒவ்வொருவ‌ரின் பின்னும் கடந்த‌ 20 வருடங்களாக சொல்லாத துய‌ர‌மான‌ க‌தை உண‌டு அதை அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் கைக‌ளில் உள்ள‌ க‌ல்லின் மூல‌மாக‌ சொல்லுகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள் எறியும் க‌ல் ப‌டைவீர‌ரை நோக்கி செல்கின்றதா என்ப‌து அவ‌ர்க‌ள் நோக்க‌ம‌ல்ல‌. அவ‌ர்க‌ள் நோக்க‌ம் க‌ல்லை எறிவ‌து ம‌ட்டும் தான். குறிபார்த்து அடிப்ப‌து அல்ல‌. இத‌ற்காக‌ தான் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வீடுக‌ளை விட்டு வெளியில் வ‌ந்துள்ள‌ன‌ர்.

பெண்க‌ள் தான் இந்த‌ பிர‌ச்ச‌னையில் மிக‌வும் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். க‌ற்ப‌ழிப்புக‌ளும், பாலிய‌ல் வ‌ன்முறைக‌ளும் அர‌ச‌ ப‌டைக‌ள் ந‌ட‌த்தும் உள‌விய‌ல் தாக்குத‌ல்க‌ளாகும். ஆனால் இவை எல்லாம் மிக‌வும் குறைத்தே இது வ‌ரை ம‌திப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. ஆனால் அந்த‌ வ‌லி பெண்க‌ளுக்கும், ம‌ன‌விய‌ல் ம‌ருத்துவ‌ர்க‌ளுக்கும் ம‌ட்டுமே தெரிந்த‌ ஒன்றாகும். க‌ல்லெறிவ‌தை அவ‌ர்க‌ள் இராணுவ‌த்திற்கு த‌ரும் பேதி ம‌ருந்தாக‌ பார்க்கின்ற‌ன‌ர். ஒவ்வொரு முறை க‌ல்லை எறியும் போதும் த‌ங்க‌ள் இத‌ய‌க்கூட்டினுள் எரிந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு பாட‌த்தையும் அவ‌ர்க‌ள் இராணுவ‌த்திற்கு க‌ற்பிக்கின்ற‌ன‌ர்.சில‌ வார‌ங்க‌ளுக்கு முன்பு பாட்டிமலூவில் உள்ள த‌ன‌து வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த‌ என‌து அத்தையின் மகன் அதாரை உன்னை நாங்க‌ள் கொன்று விடுவோம் என‌ மிர‌ட்டி உள்ள‌ன‌ர் ம‌த்திய‌ ஆயுத‌ ப‌டையைச் சார்ந்த‌வ‌ர்க‌ள். அவ‌ன் உள்ளே சென்று ஒழிந்து கொண்டான். என‌து அத்தையின் ப‌த்து நிமிட‌ கெஞ்ச‌லுக்கு பின்ன‌ரே அவ‌ன் ப‌டைவீர‌ர்க‌ள் அவ‌னை பார்த்து மிர‌ட்டிய வார்த்தைக‌ளை சொன்னான். என‌து அத்தை வ‌ணிக‌வியலில் இளங்கலை ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர். கோப‌த்தில் த‌ன் க‌ண்க‌ளில் வ‌ந்த‌ க‌ண்ணீரை துடைத்துக் கொண்டு த‌ன‌து வீட்டின் அருகே ந‌ட‌ந்து கொண்டிருந்த‌ விடுத‌லை போராட்ட‌ ஊர்வ‌ல‌த்தில் த‌ன்னையும் த‌ன் ம‌க‌னையும் இணைத்து கொண்டு, தங்களின் பயன் போகும் வரையில் விடுத‌லை முழக்கங்க‌ளை எழுப்பினார். இது அவர்களுக்கு பயனும் தந்தது. அவ‌ர்க‌ள் இருவ‌ருமே வீட்டை விட்டு வ‌ந்து இது போன்ற‌ ஊர்வ‌ல‌த்தில் க‌ல‌ந்து கொள்வ‌து இது தான் முத‌ல் முறை. என‌து அத்தை த‌ன‌து கைக‌ளில் உள்ள‌ ரூபாய் நோட்டுக‌ளில் எல்லாம் “இந்தியாவே வெளியேறு, இந்தியாவே திரும்பி போ (Go India, Go Back)” என்ற‌ வாச‌க‌ங்க‌ளையும், அந்த‌ ஐந்து வ‌ய‌து சிறுவ‌னோ அதே வாச‌க‌ங்க‌ளை த‌ன‌து வீட்டு சுவ‌ர்க‌ளில் எழுதிவைத்தான். இந்த‌ ஒரு வாக்கிய‌ம் ம‌ட்டும் தான் அவ‌னுக்கு ஆங்கில‌த்தில் அவ‌னுக்குத் தெரியும்.இது போன்ற‌ சிறுவ‌ர்க‌ள் தான் சிறீந‌க‌ரின் அடைக்க‌ப்ப‌ட்ட‌ க‌டைக் க‌த‌வுக‌ளிலும், யாருமில்லாத‌ சாலைக‌ளிலும், சுவ‌ர்க‌ளிலும் இது போன்ற‌ விடுத‌லை முழ‌க்க‌ங்க‌ளை எழுதுகின்ற‌ன‌ர்.

பாகிசுதான், ஆப்கானிசுதான் போன்ற‌ பிர‌ச்ச‌னைக‌ளை எல்லாம் தாண்டி காசுமீர் விடுத‌லை நிக‌ழ்வு சென்று விட்ட‌து. காசுமீர் துப்பாக்கிக‌ளிலிருந்து விடுதலை முழ‌க்க‌ங்க‌ளுக்கு மாறிவிட்ட‌து. இதில் க‌ல்லெறிவ‌து கூட‌ த‌ங்க‌ள் அமைதி வழி போராட்ட‌ம் அர‌சால் மிக‌க்க‌டுமையாக‌ அட‌க்க‌ப்ப‌டும் போது ம‌ட்டுமே நிக‌ழ்கின்ற‌து. 2008ல் 3 இல‌ட்ச‌ம் ம‌க்க‌ள் வீதிக‌ளுக்கு வ‌ந்து ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளுக்கு எதிராக‌ ம‌னித‌ ச‌ங்க‌லி போராட்ட‌ம் ந‌ட‌த்தின‌ர். அப்பொழுது ஒருவ‌ர் கூட‌ எந்த‌ ஒரு ப‌துங்கு குழியையும், ப‌டை வீர‌ரையும் தொட‌க்கூட‌ இல்லை. ஆனால் இந்த‌ வ‌ருட‌ம் காசுமீர் ம‌க்க‌ளின் அமைதி ஊர்வ‌ல‌ங்க‌ள் அரசால் க‌ட்டாய‌மாக‌ த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌. கூட்ட‌த்தை க‌லைப்ப‌தற்காக‌ ம‌க்களை சுடுவதற்கு இராணுவ‌த்திற்கு அனும‌தி கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த வருடத்தில் எந்த‌ ஒரு சூழ்நிலையிலும் ம‌க்க‌ள் கூடுவ‌த‌ற்கு இராணுவ‌ம் அனும‌தியே கொடுக்க‌வில்லை. இறுதி ஊர்வ‌ல‌த்தில் சென்ற‌வ‌ர்க‌ளை நோக்கி அவ‌ர்க‌ள் ப‌ல‌முறை சுட்ட‌ன‌ர். இத‌னால் ப‌ல‌ர் க‌ல்லெறிப‌வ‌ர்க‌ளாக‌ ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ள்.

காசுமீரில் இன்று இராணுவ‌த்தினால் ஒரு ம‌ருத்துவ‌மனையையோ, த‌ங்க‌ளுக்கு உத‌வக் கூடிய‌ வீட்டையோ காண்ப‌து அரிதான‌ ஒன்று. காசுமீரிக‌ள் இந்தியாவுட‌னான‌ த‌ங்க‌ள் பிர‌ச்சனையை துப்பாக்கிக‌ள் இல்லாம‌ல் தீர்வு காணுகின்ற‌ன‌ர். ஊட‌க‌ங்க‌ள் காசுமீரிக‌ளை பாகிசுதானின் உள‌வு நிறுவ‌ன‌த்தின் காசுக்காக‌வும், PDP யின் காசுக்காக‌வும் போராடுப‌வ‌ர்க‌ளை போல‌ காட்டும் போது நான் கடுமையான கோபத்திற்கு உள்ளாகின்றேன். சிறீந‌க‌ரின் எல்லா தொகுதிக‌ளையும் வென்ற‌து தேசிய‌ காங்கிர‌சு, PDP அல்ல‌. இந்த‌ இட‌ம் தான் க‌ல்லெறித‌லில் மிக‌ முக்கிய‌மான‌ ந‌க‌ர‌மாகும். இந்த‌ வ‌ருட‌த்தின் ஆர‌ம்ப‌த்தில் ஒரு நேர்காண‌லில் ப‌ரூக் அப்துல்லாவிட‌ம் இந்த‌ கேள்வியை கேட்டேன், நீங்க‌ள் உங்க‌ளை காசுமீரிக‌ளின் த‌லைவ‌ராக‌ பார்க்கின்றீர்களா?, அல்ல‌து காசுமீரில் உள்ள‌ ஒரு அர‌சிய‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ராக‌ பார்க்கின்றீர்க‌ளா?. அவ‌ர் மிக‌வும் கோப‌மாக‌ சொன்னார் நான் 60 விழுக்காடு வாக்குக‌ள் வாங்கி வெற்றி பெற்றுள்ளேன். இப்பொழுது அந்த‌ வாக்குக‌ள் எல்லாம் எங்கு சென்று விட்ட‌ன‌ என‌ எண்ணுகிறார் அவ‌ர்?

க‌ல்லெறிப‌வ‌ர்க‌ளும், அமைதி வ‌ழியில் போராடுப‌வ‌ர்க‌ளும் தீவிர‌வாதிக‌ள் என்று முத்திரை குத்த‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌டுவ‌து தொட‌ர்ந்தால் காசுமீரிக‌ள் தாங்க‌ள் முன்பு வைத்திருந்த‌ துப்பாகிக‌ளை க‌ண்டிப்பாக‌ மீண்டும் கையிலெடுப்பார்க‌ள். உல‌கிலேயே அதிக‌ ஆயுத‌ கொள்வ‌ன‌வு செய்யும் நாடான‌ இந்தியாவிற்க்கும், காசுமீரில் உள்ள‌ 7,00,000 துருப்புக‌ளுக்கும் எதிரான‌ இன்னொரு ஆயுத‌ புர‌ட்சியும் தீவிர‌வாத‌ம் என்ற பெயரில் மறைத்து அழிக்கப்படும். AK 47 துப்பாக்கிக்கு எதிராக‌ கையில் க‌ல்லுட‌ன் மோதும் இன்றைய‌ த‌லைமுறை இளைஞ‌ர்க‌ள் கையில் உள்ள‌ க‌ல்லை கீழே வைத்து விட்டு தாங்க‌ளும் AK 47 துப்பாக்கியை கையிலெடுத்தால் நிலைமை 1990க‌ளில் இருந்த‌தைவிட‌ மிக‌ மோச‌மாக‌ மாறிவிடும். காசுமீர்க‌ளுக்கு தெரியும் எவ்வாறு ஆயுத‌ப் போராட்ட‌ம் த‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளையே அரித்து தின்னும் என்று, ஆனாலும் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் விடுத‌லைக்காக‌ அதைச் செய்வார்க‌ள். ஆனால் த‌ற்போது காசுமீர் போராட்ட‌ம் வெறும் க‌ற்க‌ளுட‌ன் ம‌ட்டுமே ந‌டைபெறுகின்ற‌ன‌து. ஆனால் த‌ங்க‌ளைச் சுற்றி உள்ள‌ இந்த‌ க‌ண்ணாடி மாளிகைக‌ள் அப்ப‌டியே இருக்காது. போர் மிக‌த் தீவிர‌மான‌ ஒன்றாக‌ மாறும், இருந்த‌போதிலும் என்னுள் உள்ள‌ அமைதி விரும்பி அந்த‌ நிலைக்கு காசுமீர் த‌ள்ள‌ப்ப‌டாது என்று கூறுகிறான்.

காசுமீரில் இசுலாம் என்ற‌ வார்த்தை தொன்று தொட்டு இருந்து வ‌ருகின்ற‌து, இதை காசுமீரிக‌ள் த‌ங்க‌ளுக்கே உரிய‌ த‌னித்துவ‌ முறையில் புரிந்துகொண்டுள்ள‌ன‌ர். என‌து தாயார் புனித‌ த‌ள‌ங்க‌ளுக்கு செல்வார். என‌து பெண் தோழியும் கூட‌. என‌க்கு தெரிந்த‌ எல்லா பெண்க‌ளும் அங்கே செல்வார்கள். ம‌சூதிக‌ளை விட‌ அதிக‌மான‌ கூட்ட‌ம் இந்த‌ புனித‌ த‌ள‌ங்க‌ளில் எப்போதும் இருக்கும். சூபி இசுலாம் இங்கு ப‌ல‌ நூறு வ‌ருட‌ங்க‌ளாக‌ இருந்து வ‌ருகின்ற‌து. இந்த‌ புர‌ட்சிக‌ளும் கூட‌ ஒழுக்கு நெறிக‌ளை பின்ப‌ற்றியே ந‌ட‌க்கின்ற‌து. காசுமீரிக‌ள் ப‌ணிவான‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் விட்டுக் கொடுப்ப‌வ‌ர்க‌ள் என்ப‌தை எப்பொழுது எங்களின் ப‌ல‌வீன‌மாக‌ அர‌சு க‌ருத‌ ஆர‌ம்பிக்கின்ற‌தோ அப்பொழுது அர‌சு அட‌க்குமுறை த‌க‌ர்க்க‌ப்ப‌டும்.

1990க‌ளில் காசுமீர் ப‌ண்டிட்டுக‌ளுக்கு என்ன‌ ந‌டைபெற்ற‌து என்ப‌து என‌க்கு தெரியாது. நான் அப்பொழுது சிறிய‌வ‌ன். ஆனால் இன்று அந்த‌ நிக‌ழ்வு ப‌ல‌ திரிபுக‌ளுக்கு உள்ளாகிவிட்ட‌து. காசுமீரில் ப‌ண்டிட்டுக‌ளையே காணாத‌ இசுலாமிய‌ இளைய‌ த‌லைமுறைக‌ளில் நானும் ஒருவ‌ன். ஆனால் அந்த‌ வ‌ருட‌ம் என்ன‌ ந‌டைபெற்ற‌து என்ப‌து ப‌ற்றிய‌ ப‌ல‌ க‌தைக‌ளை நான் கேள்விப்ப‌ட்டுள்ளேன். எப்பொழுதெல்லாம் அன்று என்ன‌ ந‌டைபெற்ற‌து என‌ தெளிவாக‌ தெரிந்துகொள்ள‌ ஆர‌ம்பிக்கின்றோனோ அப்பொழுதே அது தெளிவில்லாம‌ல் செல்ல ஆரம்பிக்கின்றது. எங்க‌ள‌து பழைய குடும்ப‌ புகைப்ப‌ட‌ங்க‌ளில், ப‌ல‌ காசுமீர் ப‌ண்டிட்டுக‌ளை நான் பார்த்த‌துண்டு. எங்க‌ள‌து குடும்ப‌த்தை பொருத்த‌வ‌ரையில் ப‌ண்டிட்டுக‌ளுக்கு எதிராக‌ பேசுவ‌து த‌வ‌று, அவ‌ர்க‌ள் விடுத‌லையை எதிர்க்கும் வ‌ல‌து சாரி இய‌க்க‌த்தை சார்ந்த‌வ‌ர்க‌ளாக(இதை ஒரு மத போராட்டமாக பார்ப்பவர்கள்) இருந்தாலும் ச‌ரி. ப‌ண்டிட்டுக‌ள் மீண்டும் அவ‌ர்க‌ளின் பூர்விக‌ நில‌ங்க‌ளில் வ‌ந்து குடியேற‌ வேண்டும். என்னை போன்ற‌ இளைஞ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை வேறு யாரோ ஒருவ‌ர் என‌ எண்ணாம‌ல் ந‌ண்ப‌ர்க‌ள் போல‌ ப‌ழ‌க‌வேண்டும் என்ற‌ எண்ண‌ம் என்னுள் எப்போதும் உண்டு.என்னை பொருத்த‌வ‌ரை காசுமீர் என்ப‌து கென்றி காரிட்ட‌ர் பிர‌ச‌னின் புகைப்ப‌ட‌த்தை போல‌. அந்த‌ புகைப்ப‌ட‌த்தில் ஒரு பெண்க‌ள் கோ.இ.மார‌ன் ம‌லை உச்சியில் நின்று கொண்டு த‌ங்க‌ள‌து தெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்கிக் கொண்டிருப்பார்க‌ள். ஒருவ‌ர் ப‌ழைய‌ காசுமீரி ப‌ர்காவிலும், இன்னொருவ‌ர் காசுமீரின் பாரம்பரிய‌ உடையுட‌னும் ம‌லைக‌ளையும், அக‌ண்ட‌ வான‌வெளியை பார்த்த‌ மாதிரி இருப்பார்க‌ள். அவ‌ர்க‌ளின் இறைவ‌ழிபாட்டு முறைகளில் வேறுபாடிருப்பினும், அவ‌ர்க‌ளின் கோரிக்கை ஒன்றாக‌ இருந்த‌து. இந்த‌ பிர‌ச்ச‌னை ஏற்க‌ன‌வே அவ‌ர்க‌ள் பாதுகாப்பின்மையை ஏற்ப‌டுத்தியுள்ள‌து. அமைதி வ‌ழி போராளிக‌ள் கொல்ல‌ப்ப‌டுவ‌து தொட‌ர்ந்தால் இந்த‌ பெண்க‌ளும் ஒரு நாள் காணாம‌ல் போய் விடுவார்க‌ள். நாம் க‌ன‌வு க‌ண்ட‌ காசுமீர் க‌ன‌விலேயே போய்விடும் போல் உள்ளது.

ஐந்து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் நானும் “விடுத‌லை” போராட்ட‌ம் முடிவ‌டைந்து விட்ட‌தாக‌ நினைத்தேன். ஆனால் துப்பாக்கிக‌ளிலிருந்து க‌ல் என்ற ஆயுதமாக‌ மாற எடுத்துக் கொண்ட‌‌ கால‌ம் தான் அது என்ப‌து என‌க்கு இன்று புரிகின்ற‌து. 1953க‌ளில் ச‌ர்வ‌ச‌ன‌ வாக்கெடுப்பு என்று இருந்த‌து. 1970க‌ளின் ஆர‌ம்ப‌த்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமான “Al Fatah” (அல் பாத்தா என்பதற்கு வெற்றி எனப் பொருள். இந்த இயக்கம் முன்னெடுத்த போராட்டமே சுய நிர்ணய உரிமை போராட்டம் ஆகும்) என்றானது , 1989க‌ளில் ச‌ம்மு காசுமீர் விடுத‌லை அமைப்பு என்றான‌து, இன்று ஒன்ப‌து வ‌ய‌து க‌ல்லெறியும் சிறுவ‌ன் என்றிருக்கும் போராட்ட‌ நிலையில் என்றும் விடுத‌லை முழ‌க்கம் ம‌ட்டும் மாற‌வே இல்லை. போராட்ட‌ வ‌ழிமுறைக‌ள் ம‌ட்டுமே மாறியுள்ள‌ன‌.

“பெரிய‌ பொருளாதார மற்றும் அதிகார‌ போட்டியில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் நாடான‌ இந்தியா” காசுமீரி ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளை க‌வ‌ர ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ கோடிக‌ளை செல‌வு செய்து முய‌ற்சி செய்த‌து. பெரும்பான்மையானோர் அந்த‌ ப‌ண‌த்தை பெற்றிருப்பினும் த‌ங்க‌ள் உண‌ர்வுக‌ளை ஒரு பொழுதும் அவர்கள் மாற்றிகொள்வ‌தாயில்லை. இது வ‌ழிமுறை 1. இது ச‌ரியாக‌ ந‌டைபெறாத‌தால் வ‌ழிமுறை 2ல் த‌வ‌றான‌ ந‌ப‌ர்க‌ளுக்கு ந‌ட்ச‌த்திர‌ விடுதிக‌ளில் க‌வ‌னிப்பு ந‌ட‌ந்த‌து. ஆனால் அதுவும் வேலை செய்ய‌வில்லை. இந்தியா த‌ன‌து ப‌ண‌த்தையும், ஆயுத‌த்தையும் கீழே வைத்து விட்டு காசுமீர் பிர‌ச்ச‌னையை காசுமீரிக‌ளுட‌ன் பேச்சுவார்த்தை ந‌ட‌த்தி தீர்க்க‌ வேண்டும். இர‌ண்டு வ‌ழிக‌ளில் இப்பிர‌ச்ச‌னைக்கு தீர்வு காண‌லாம். முதலில் இதை பிரச்சனை என்றுணர்து, பிர‌ச்ச‌னையில் ச‌ம‌ ப‌ங்குள்ள‌வ‌ர்க‌ள் என‌ க‌ருதி தில்லி காசுமீரி ம‌க்க‌ளுட‌ன் ச‌ரியான‌ முறையில் பேச்சுவார்த்தை ந‌ட‌த்தி தீர்வு காண்ப‌து. அல்ல‌து இது ச‌ட்ட‌ம் ஒழுங்கு பிர‌ச்ச‌னை என‌க் கூறி நோயை அல்லாம‌ல் நோயின் அறிகுறிக‌ளை ம‌ட்டும் குண‌ப்ப‌டுத்தும் வேலையில் ஈடுப‌டுத‌ல். தேசிய‌ காங்கிர‌சு PDP போன்ற‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் கூறும் இந்திய‌ அர‌சமைப்பின் எல்லைக்குள் “சுயாட்சி” போன்ற‌வ‌ற்றை எல்லாம் மைய‌ அர‌சு தூக்கியெறிந்து ப‌ல‌ நாளாகி விட்ட‌து.

ம‌க்க‌ள் கூட்ட‌மைப்பின் த‌லைவ‌ர் “சாச்ச‌த் லோனோ கூறும் “அடையக்கூடிய‌ தேசிய‌ம்” என்ப‌தை ப‌ற்றி இர‌ண்டு வ‌ருட‌மாக‌ ஒருவ‌ர் கூட இதுவரை வாயே திற‌க்க‌வில்லை. குரியத் கூட்டமைப்பின் தலைவரான மிர்வாசு உமர் கூறுகையில் “தில்லியுட‌ன் பேச்சுவார்த்தை ந‌ட‌த்துவ‌த‌ன் மூல‌ம் நா‌ங்கள் எங்கள் நேர்மை ம‌ற்றும் ந‌ம்ப‌க‌த்த‌ன்மையை ஊசலாட்ட‌தில் வைத்துள்ளோம்” என்கிறார். இந்தியா வெறும் புகைப்ப‌ட‌த்திற்கு ம‌ட்டும் அல்லாம‌ல் குறைந்த‌ப‌ட்ச‌ம் நேர்மையுட‌ன் பேச்சு வார்த்தை ந‌ட‌த்தும் என‌ நாங்க‌ள் ந‌ம்புகின்றோம் என்றார் அவ‌ர்.

இந்திய‌ ப‌டை வீர‌ர்க‌ளோ மிக‌வும் ஏழ்மையான‌ கிராம‌த்திலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாழ்க்கையை யாரும‌ற்ற‌ ப‌துங்கு குழிக‌ளில் க‌ழிக்கின்ற‌ன‌ர். கல்லுக்கு பதிலாக காசுமீர‌த்து சிறுவ‌ர்க‌ளின் வாழ்க்கையை முடித்து விடுகின்றார்க‌ள். சுற்றி போட‌ப்ப‌ட்டுள்ள‌ முள்வேலிகள், உளவிய‌ல் ரீதியான‌ கோளாறுக‌ளால் அதிக‌ ப‌ட்ச‌மான‌ த‌ற்கொலைக‌ளும், தங்க‌ள் குடும்ப‌த்தின‌ரையே கொலை செய்த‌ல் போன்றவையும் காசுமீரில் மிக‌ அதிக‌ அள‌வில் உள்ள‌ன‌. இந்தியா இவ‌ர்க‌ளை தேச‌ ப‌க‌திக்காக‌ எரியும் மெழுகாய் ம‌ட்டும் பார்க்காம‌ல் த‌குதி வாய்ந்த‌ குடிம‌கன்க‌ளாய் என்று பார்க்க‌த் தொட‌ங்குகின்ற‌தோ அன்று தான் காசுமீரிக‌ளுக்கும், ப‌டையின‌ருக்கும் உண்மையான‌ விடுத‌லை ஆகும்.

இந்தியா ஒன்று காசுமீரை விட்டு வெளியேற‌லாம் அல்ல‌து அங்குள்ள ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இட‌ம்பிடிக்க‌லாம். ஆனால் 63 வ‌ருட‌ங்க‌ளாகியும் இந்தியாவால் காசுமீர் ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இட‌ம்பிடிக்க‌ முடிய‌வே இல்லை.

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிரா உருக்கு ஆலையும் & மக்கள் போராட்டமும்.

நேற்று வேதாந்தா நிறுவனம் ஒரிசாவில் பழங்குடி மக்களின் தாலியறுக்கும் அநீதியை அதில் பழங்குடி மக்களின் கடைசி நபர் இருக்கும் வரை அந்தப் போராட்டம் தொடரும் அதற்கு அச்சாரமாக தூத்துகுடியிலிருந்து ஒரு இனிய செய்தி. தூத்துக்குடியில் 1997ஆம் ஆண்டு வேதாந்தா நிறுவனம் தாமிரம் உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட் தாமிரா உருக்காலை நிறுவனத்தை கடும் எதிர்ப்புக்கிடையில் ஆரம்பித்தது.அந்த போராட்டம் தோல்வியடைந்ததற்கு ஓட்டுக்கட்சிகள் காசு வாங்கிக்கொண்டு துரோகமிழைத்ததும், அரசியல் ரீதியில் தன்னாவர்க் குழுக்கள் போராட்டத்தை வழிநடத்தியதும் ஆகும்.

இந்நிலையில் மக்கள் விரோதமாக உற்பத்தியை ஆரம்பித்த ஸ்டெர்லைட் நிறுவனம் பல மோசடிகளை செய்து வந்தது. எல்லா மோசடிகளையும் அரசின் உதவி கொண்டும், பணபலத்தின் செல்வாக்கிலும் கையாண்டது. சிலநாட்களுக்கு முன்னர் ஒரு வரி ஏய்ப்பு வழக்கில் இந்த நிறுவனம் 1000 கோடி ரூபாய் மோசடி செய்திருந்ததற்கு நீதிமன்றத்தில் தடை வாங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று மத்திய கலால் துறை இந்நிறுவனம் 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக மற்றொரு வழக்கு பதிவு செய்தது.

ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரக் கம்பிகள், தாமிர கேத்தோடுகள் போன்ற தாமிரப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்காக ஆஸ்திரேலியா, ஜாம்பியா போன்ற நாடுகளில் இருந்து தாமிரத்தாது இறக்குமதி செய்யப்படுகிறது. தாதுப் பொருளை இறக்குமதி செய்துவிட்டு அதே நாடுகளுக்கு தாமிரத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்தால் இறக்குமதி வரியில் சலுகை வழங்கப்படும்.

ஆனால் இந்தியாவிலேயே தாமிரப்பொருட்களுக்கு கடும் கிராக்கி இருப்பதால் ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்றுமதி செய்யாமலேயே செய்ததாகக்கூறி வரிச் சலுகை பெற்று வந்தது. இதன்மூல் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் ரூ.750 கோடிக்கு அந்த நிறுவனம் இறக்குமதி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக மத்திய சுங்கம் மற்றும் கலால் வரித் துறையினருக்கு தெரிய வந்தது. அதனால் இத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஸ்டெர்லைட் நிறுவனத்தில் சோதனை செய்து வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இதன் பொருட்டு ஸ்டெர்லைட்டின் துணை தலைவர் வரதராஜன் என்பவரை போலீசின் உதவியுடன் கைது செய்து கலால் துறை சனிக்கிழமை காலை தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தது. செய்தியைக் கேள்விப்பட்ட வழக்கறிஞர்கள் பெருமளவில் கூடினர். அதில் குறிப்பாக மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உண்டு. அவர்கள் வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்து நீதிமன்ற வாயிலில் முழக்கமிட்டனர். “கோடிக்கு ஒரு நீதி, சேரிக்கு ஒரு நீதியா, வரதராஜனை தேசிய பாதுகாப்பு செட்டத்தில் அடை, ஸ்டெர்லைட்டே தூத்துக்குடி மண்ணை விட்டு வெளியேறு” போன்ற முழக்கங்களை வழக்கறிஞர்கள் முழங்கினர்.

வேதாந்தா நிர்வாகி வரதராஜனுக்காக ஸ்டெர்லைட் நிறுவனம் ஏராளமான வழக்கறிஞர்களை இறக்கியிருந்தது. ஆயினும் முற்போக்கு வழக்கறிஞர்களின் போராட்டக்குரலை செவியுற்ற நீதிபதி மோசடி செய்த நிர்வாகி வரதராஜனை சிறையில் அடைக்குமாறு உத்திரவிட்டார். சமூக அக்கறையுடன் குழுமிய வழக்கறிஞர்களை பாராட்டவும் செய்தார்.

பின்னர் போலீசார் வரதராஜனை வெளியே கொண்டு வந்த போது வழக்கறிஞர்களும், பத்திரிகையாளர்களும் புகைப்படம் எடுக்க முயன்றபோது, ஸ்டெர்லைட் குண்டர் படை காவல்துறையுடன் தடுத்தது. இதனால் ஆத்திரமுற்ற வழக்கறிஞர்கள் முழக்கமிட்டவாறே வரதராஜனை அடிப்பதற்கு முயன்றனர். பெரும் முயற்சிக்கு பின்னரே காவல்துறை வரதராஜனை மீட்டது. இதனால் நீதிமன்றம் பெரும் பரபரப்பிற்குள்ளானது. இந்த வழக்கிற்காக இலண்டனில் இருக்கும் வேதாந்தா தலைவர் அனில் அகர்வாலை கைது செய்ய வேண்டுமென்றும் வழக்கறிஞர்கள் முழக்கமிட்டனர்.

இலண்டனில் இருக்கும் அனில் அகர்வாலுக்கு இந்த வரதராஜன் மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு சாதாரண வரியைக்கூட கட்டாமல் இப்படி 750 கோடிக்கு ஏய்ப்பு செய்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்? போராட்டத்தை முன்னெடுத்து ஒரிசா மக்களின் நீதிக்கு உதவிடும் வண்ணம் செயல்பட்ட தூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கு வாழ்த்துக்கள்!!

வியாழன், 1 ஜூலை, 2010

முள்ளிவாய்க்கால் – போபால் ஒரு ஆய்வு.

1983 ஜூலையில் இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் 1984 போபால் நச்சுவாயு படுகொலைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. முள்ளிவாய்க்கால் முடிவுக்கும் போபால் நீதிமன்ற தீர்ப்புக்கும் இடையிலேயும் நேரடித் தொடர்பு இல்லை. விசவாயுப் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு தலைவர் ஆண்டர்சன் இந்தியாவிலிருந்து வழியனுப்பி வைக்கப்பட்டதற்கும், முள்ளிவாய்க்கால் படுகொலை நாயகன் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் வரவேற்பு வழங்கப்பட்டதற்கும் கூட நேரடித் தொடர்பு இல்லைதான். எனினும் இவ்விரு பிரச்சினைகளிலும் இந்திய அரசும், ஆளும் வர்க்கமும் கடைப்பிடித்த அணுகுமுறைகளில் ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கின்றது.

போபால் நச்சுவாயுவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினரும், ஊனமடைந்த மக்களும் நிவாரணம் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாமல் அவசரமாக தலையிட்டு சட்டம் இயற்றித் தடுத்த இந்திய அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுத்தரும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொள்வதாக வாக்கும் கொடுத்தது. தற்போது போபால் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டு அதிர்ச்சியுற்றதைப் போல நடிப்பவர்கள் அனைவரும் இப்படியொரு தீர்ப்பை வரவழைப்பதற்காகத்தான் எல்லா முனைகளிலிருந்தும் காய் நகர்த்தினார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. மத்திய, மாநில அரசுகள், சி.பி.ஐ, உச்சநீதி மன்றம் ஆகிய அனைவரும் இணைந்து நடத்திய நாடகத்தின் முடிவுதான் 26 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்திருக்கும் இந்தத் தீர்ப்பு.

1983 ஜூலையில் சிங்கள இனவெறி அரசு நடத்திய ஈழத்தமிழினப் படுகொலைக்கு எதிராக தமிழகம் கொந்தளித்தபோது, பல போராளிக் குழுக்கள் ஈழ மண்ணில் தோன்றியபோது. போபாலைப் போலவே இதிலும் தலையிட்ட இந்திய அரசு, ஈழத்தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை பெற்றுத்தரும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தது. போராளிக் குழுக்களை இந்திய உளவுத்துறையின் கைப்பாவைகளாகச் சீரழித்து, பின்னர் ஈழத்தை ஆக்கிரமித்து, முடிவில் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவத்துக்கு களத்தில் உடன் நின்று வழிநடத்தியது இந்திய அரசு. ஜூலை படுகொலை நடந்த 26 ஆண்டுகளுக்குப் பின், அம்மக்களின் போராட்டம் முள்ளிவாய்க்கால் படுகொலையும், முட்கம்பி வேலிக்குப் பின்னால் 3 இலட்சம் ஈழத்தமிழ் அகதிகளும் என்று போபாலைப் போலவே ஒரு துயரமாக முடிந்தது

ஆண்டர்சனை அன்று சிறப்பு விமானத்தில் வழியனுப்பி வைத்தது முதல் வழக்கைச் சீர்குலைத்தது வரையிலான நடவடிக்கைகளுக்குப் பின்புலமாக இருந்த காரணமும், இன்று கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட வேண்டிய டக்ளஸ் தேவானந்தாவுடனும், இனப்படுகொலையாளன் ராஜபக்சேயுடனும் மன்மோகன்சிங் கை குலுக்குவதற்கான காரணமும் வேறு வேறல்ல. அமெரிக்க மேலாதிக்கத்தின் அடியாளாகவும், தெற்காசியப் பிராந்திய வல்லரசாகவும் நிலைபெறத் துடிக்கும் இந்தியத் தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவத்தினுடைய வெறியின் வெளிப்பாடுதான் இந்த நடவடிக்கைகள். 1983 இலிருந்து தில்லியில் 9 அரசுகள் மாறிமாறி வந்திருந்த போதும், ஒன்றுபட்ட இலங்கை என்ற கொள்கைதான் எல்லா அரசுகளையும் வழிநடத்தி வருகிறதென்று ப.சிதம்பரம் சமீபத்தில் கூறியிருப்பதை, போபால் படுகொலைக்கும் பொருத்தலாம். யூனியன் கார்பைடு நிறுவனத்தை விடுவிப்பதிலும் கூட 9 அரசுகளும் ஒத்த கருத்துடன்தான் செயல்பட்டிருக்கின்றன. இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட இந்திய இராணுவ அதிகாரிகளின் பிணங்கள் இந்திய அரசின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தியது போலவே, யூனியன் கார்பைடுக்கு எதிரான எல்லா வழக்குகளையும் முடித்துக் கொள்வதன் மூலம் அமெரிக்க முதலீடுகளை பெருமளவில் ஈர்க்கலாமென்று ஆலோசனை அளித்த ப.சிதம்பரம், கமல்நாத் ஆகியோரின் குற்றமும் இப்போது அம்பலமாகியிருக்கின்றது.

தமது சுரண்டல் ஆதிக்க நலனுக்காக சொந்த நாட்டு மக்களில் சுமார் 25,000 பேரின் உயிரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பலிபீடத்தில் காணிக்கையாகச் செலுத்துவதற்கும் தயங்காத இந்திய ஆளும் வர்க்கத்தின் இரக்கமின்மைக்கும், இலங்கையின் மீது தனது விரிவாதிக்கக் கால்களைப் பதிப்பதற்காக முள்ளிவாய்க்கால் படுகொலையை முன்நின்று நடத்திய அதன் கொலைவெறிக்கும் நேரடித் தொடர்பு இல்லையா என்ன? போபால் வேறு, முள்ளிவாய்க்கால் வேறுதான்; ஆண்டர்சன் வேறு, ராஜபக்சே வேறுதான்; விமானமும், சிவப்புக் கம்பளமும் கூட வெவ்வேறு பொருட்கள் என்பது உண்மைதான். எனினும் இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான்.
நன்றி :வினவு

புதன், 2 ஜூன், 2010

ஃப்ரீடம் ஃப்ளோடில்லா’ என்ற கப்பல்களின் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதல்.


இஸ்ரேலின் கடுமையான தடையின் காரணமாக பட்டினியால் வாடி வதங்கும் ஃபலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக அத்தியாவசியப் பொருட்களுடன் காஸ்ஸாவை நோக்கி வந்துக் கொண்டிருந்த ‘ஃப்ரீடம் ஃப்ளோடில்லா’ என்ற கப்பல்களின் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது.

உயிர்வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுடன் கப்பல்களில் புறப்பட்ட ஐந்நூறுக்கும் மேற்பட்ட பணியாளர்களின் மீதுதான் இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது.அத்தோடு இனிமேலும் தாக்குவோம் என வெறித்தனமாக கொக்கரித்து வருகிறது. தாக்குதலுக்குள்ளானவர்கள் இஸ்ரேலின் எல்லையில் அத்துமீறி நுழைந்த அந்நிய நாட்டு ராணுவ வீரர்களல்லர். இஸ்ரேலால் தகர்க்கப்பட்டது ஆயுதங்களை தாங்கி வந்த எதிரி நாட்டு போர்க்கப்பல்களுமல்ல.

இஸ்ரேல் ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு குடிக்க தண்ணீரும், உண்ண உணவும், நோய்களுக்கு மருந்தும் அளிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக மடியக்காத்திருக்கும் காஸ்ஸாவின் மனித உயிர்களை காப்பாற்றுவதற்காக இஸ்ரேலின் தடைகளை பொருட்படுத்தாமல் அத்தியாவசியப் பொருட்களுடன் சென்றதுதான் அவர்கள் செய்த தவறு.

அமெரிக்கா,பிரிட்டன்,ஹாலந்து,பெல்ஜியம்,க்ரீஸ், போலந்து, இத்தாலி,துருக்கி உள்ளிட்ட நாடுகளின் மனித நேயப்பணியாளர்களும், ஃபலஸ்தீன் வம்சாவழியைச் சார்ந்தவர்களுமடங்கிய சமாதான குழுவில் உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களும், கலைஞர்களும், பத்திரிகையாளர்களும் இடம் பெற்றிருந்தனர்.

பிரபல எழுத்தாளர் ஹென்னிங் மான்கெல், சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற மெய்ரீட் கோரிகன்- மாகூர் ஆகியோர் இந்த காஸ்ஸா நிவாரண குழுவில் அடங்குவர்.
ஆனால் மனித உரிமைகளை மதிக்காத, இனவெறியை மட்டுமே இலட்சியமாகக் கொண்ட சியோனிஷ தேசத்திற்கு இவையெல்லாம் தாக்குதலை தவிர்ப்பதற்கு போதிய காரணங்களல்ல.
இம்முறை இஸ்ரேலின் கொடூரங்களுக்கெதிராக ஐக்கிய நாடுகள் சபையும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும், ஐரோப்பியன் யூனியனும் ஏன் இஸ்ரேலை தாலாட்டி வளர்த்தும் அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது சுபச் செய்திகள்தான்.

உலக மரியாதைகளையும், சர்வதேசச் சட்டங்களையும் காற்றி பறத்திவிட்டு இஸ்ரேல் அக்கிரமங்களை கட்டவிழ்த்து விடுவது இது முதல் முறையா என்ற உண்மையை இவர்களெல்லாம் உணரவேண்டும்.சொந்த நாட்டில் அந்நியர்களாக்கப்பட்டு அகதிகளாக வாழ்ந்துவரும் அப்பாவி ஃபலஸ்தீன் மக்களுக்கெதிராக கடந்த அரைநூற்றாண்டாய் தொடரும் இஸ்ரேலின் வரம்பற்ற அக்கிரமங்களின் சமீபத்திய எடுத்துக்காட்டுத்தான் ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா கப்பல் மீது நடத்திய தாக்குதல்.

மேற்கத்திய நாடுகளின் உள்ளார்ந்த ஆதரவும், ஐக்கிய நாடுகளின் நிரந்தர மெளனமும்தான் இஸ்ரேல் இத்தகைய கொடூரங்களை தொடர்வதற்கு துணிச்சலைக் கொடுத்தவையாகும்.
ஆகவே நிவாரண கப்பல்களும், சமாதான பணியாளர்களும் தாக்கப்பட்டதற்கு இவர்களும் முக்கிய காரணகர்த்தாக்களாவர். இஸ்ரேலின் கொடூரத்தை நமது நாடும் கண்டித்தது வரவேற்கத்தக்கதுதான்.

ஆனால் ஃபலஸ்தீன் மக்களுக்கு என்றும் நட்பு நாடாக இருந்து வந்த இந்தியா சியோனிஷ்டுகளுக்கு சற்றும் சளைக்காத பாசிஸ்டுகளின் ஆட்சியின் பொழுது இஸ்ரேலுடனான நட்புறவைத் துவக்கியது. அந்நட்புறவை முறை தவறாமல் பேணிவருகிறார்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியாளர்கள்.

ஆகவே இஸ்ரேலின் கொடூரத்தை கண்டிப்பது உண்மையிலேயே ஆத்மார்த்தரீதியாக வேண்டுமென்றால் அந்நாட்டுடன் செய்துக்கொண்ட அனைத்து உடன்படிக்கைகளையும், ராணுவ ஒத்துழைப்பையும் ரத்துச் செய்யவேண்டும். இல்லையென்றால் இரத்த வெறிப்பிடித்த ஒரு தேசத்துடன் நட்புறவைக் கொண்டதற்காக எதிர்காலத்தில் இந்தியா மிகவும் வருந்தவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படும்.

சனி, 22 மே, 2010

ப. சிதம்பரத்தின் “காவி” உறவு பற்றிய ஒரு ஆய்வு.


ப.சிதம்பரம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தோழமை என்பது பன்னாட்டு நிறுவனங்களின் நலனை பாதுகாக்கவென்றே தோன்றுகிறது. ப.சிதம்பரத்தின் முந்தைய கால நடவடிக்கைகைள கவனித்து வருபவர்களுக்கு நாடாளுமன்ற மேலவையில் ஏப்ரல் 15ம் நாளைய விவாதத்தின் போது பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் அருண் ஜேட்லி உள்து றை அமைச்சர் ப.சிதம்பரத்தின் நடவடிக்கைகளை ஆதரித்து பேசியதை பார்த்தால், வியப்பாக எதுவும் தோன்றாது. தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய கொரில்லா தாக்குதல் குறித்த விவாதத்தின் போது சிதம்பரம் மற்றும் பா.ஜ.க. பெரும்புள்ளிகளுக்குமிடையே உள்ள ஆர்வம் என்பது லண்டனின் வேதாந்தா வள நிறுவனத்தின் பணப்பலன் பெருக்கும் நடவடிக்கைகளின் மீது உள்ளார்ந்த ஈடுபாட்டினைச் சார்ந்தே உள்ளது.

ஜனநாயக முற்போக்கு அரசின் முதல் நிதி அமைச்சராவதற்கு முன் தினம் வரை சிதம்பரம் மேற்படி வேதாந்தா பன்னாட்டு நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குனர்களில் ஒருவர் என்பதுடன் அத்தகைய கூட்டு முறையிலான நிறுவனங்களுக்கு வழக்கறிஞருமாவார். தேசிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைமையில் இயங்கும் போது பா.ஜ.க.தலைமை பால்கோ, ஸ்டெரிலைட் பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.551/50 கோடி அளவிலான பங்குகளை வேதாந்தா கப்பல் நிறுவனத்திற்கு விற்க முனைந்ததையும், அதே சமயம் பாரத ஸ்டேட் வங்கி முதலீட்டு சந்தை 49 சதவீதத்திற்கான 842.52 கோடி தொகைகளை மட்டும் கையாள அனுமதிக்கப்பட்டிருந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். உலகத்தின் முதல் பொதுத்துறை பங்கு விற்பனைக்காக அமைச்சராக்கப்பட்ட பா.ஜ.க.வின் முக்கியஸ்தர் அருண்ஷோரிக்கும் இதில் பங்கு உண்டு.

ஆனால் சிதம்பரத்திற்கும், சங் பரிவார் என்றழைக்கப்படும் மதவாதிகளுக்கும் இடையே உள்ள கொள்கை ரீதியான ஒன்றுபடுதலின் வேரை பார்க்க வேண்டுமெனில் மிகுந்த ஆழத்தில் நோக்க வேண்டும். அமெரிக்காவின் மாஸ்சூசெட்ஸ்-ல் உள்ள ஹார்வர்டு பிஸினஸ் பள்ளியின் இரண்டாவது ஹரிஷ் சி.மகிந்த்ரா நினைவு சொற்பொழிவில் முன்னாளைய நிதி அமைச்சர் சில குறிப்பிடத்தகுந்த, கூர்ந்து கவனித்தால் எச்சரிக்கை கொள்ளத்தக்க கருத்துக்களை வெளியிட்டார்.

நேரு காலத்தை வெளிப்படையாக தாக்கிய பின் இவ்வாறு கூறுகிறார் “இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 3 பத்தாண்டுகளாக பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசு சார் பொருளாதார மாதிரி பின்பற்றப்படுகிறது” அரசே பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் நிலையில் உலக பொருளாதார சூழலில் இருந்து விலகியே இருந்தது. அந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி சதவீதம் சராசரியாக 3.5 சதவீதமாகத்தான் இருந்தது. நான் அந்த வருடங்களை “இழப்பு” பத்தாண்டுகள் என்றே சொல்வேன் என்றார்.

சங்பரிவார் கொள்கை நோக்கமாக பொதுத்துறை கூடாது என்பதை பிரதிபலிக்கும் விதமாகவே இருந்தது. சிதம்பரம் உலக வங்கி மற்றும் சர்வதேச கண்காணிப்பு நிதியகத்தின் நடவடிக்கைகளை உணர்ச்சியுடன் ஆதரி்க்கும் நபர் என்பதால் 1956ம் ஆண்டின் இரண்டாவது தொழிற் கொள்கை தீர்மானத்தையும், இரண்டாவது ஐந்தாண்டு (1956-61) திட்டத்தையும் கிள்ளியெறியும் மறைமுக திட்டம் வைத்திருந்தார்.

ஆனால் சிதம்பரம் மட்டுமல்ல, பிரதமர் மன்மோகன்சிங் கூட 1938ம் ஆண்டு நேரு தலைமையேற்ற திட்டக்குழுவின் தீர்மானத்திற்கு பதிலாக, 1944ம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான காங்கிரஸ் நிறைவேற்றிய பொருளாதார தீர்மானத்தையே முன்வைக்கிறார். 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜே.ஆர்.டி.டாடாவின் பிறந்தநாள் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் துவக்கவுரையில் கூட பிரதமர் ஜேஆர்டி முக்கிய பங்களிப்பு உள்ள பாம்பே திட்டத்தின் மீதான தனது கவர்ச்சியை வெளிப்படுத்தினார்.

காங்கிரஸின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், சிதம்பரத்தின் “மாவோயிஸ்ட் பிரச்சனையை பழங்குடி மக்களைப் பற்றி கருத்தில் கொள்ளாது வெறும் சட்டம், ஒழுங்குசார் பிரச்சினையாக அணுகியவிதம்” தவறென ஒரு செய்தி ஊடகம் மூலம் கடுமையாக சாடிய போது, அருண்ஜேட்லி சினத்துடன் மறுமொழியாக “நக்சலிசத்தை ஒழித்துக்கட்ட நமக்கு வலுவான தலைமை, உறுதியான நெஞ்சம் மற்றும் நிலைநிறுத்தும் அதிகாரம் தேவை என்பதோடு நாங்கள் மாண்புமிகு உள்துறை அமைச்சரின் நடவடிக்கையை முற்றாக ஆதரிக்கிறோம்” என்கிறார்.

அவர் தன் வாதத்தை இவ்வாறு முன்வைக்கிறார், “தனது உள்துறை அமைச்சரை கீழேதள்ளி வீழ்த்த முனையும் அரசை நாம் விரும்பவில்லை, அரசு பிளவுபடுவதையும் நாம் விரும்பவில்லை, மாவோயிஸத்திற்கு எதிரான போர் தளர்த்தப்படவேண்டுமென இந்த மாண்புமிகு அவையின் பாதியை நிரப்பிக் கொண்டிருக்கும் உறுப்பினர்களின் கருத்துக்களையும் நாம் விரும்பவில்லை”

இருப்பினும் சிதம்பரம் சங் பரிவாரால் நகர்த்தப்படும் சிறிய காய் அல்ல. அவருடைய உள்ளார்ந்த ஈடுபாடு என்பது வேதாந்தா மற்றும் அது போன்ற பெரிய சுரங்க தொழிலின் மீதுதான். அவர் முக்கியத்துவமாக தெரிவிப்பது “இந்தியாவின் கனிம வளங்கள் என்பது நிலக்கரி – உலகின் நான்காவது இருப்பு உள்ள தேசம், இரும்புதாது, மாங்கனீசு, மைக்கா, பாக்சைட், டைட்டானியம் தாது, குரோமைட், வைரம், இயற்கை வாயு, எண்ணைவளம் மற்றும் அரிய கற்கள். பொதுக் கருத்து நமக்கு சொல்வதெல்லாம் இவற்றையெல்லாம் திறனுடன் விரைவாகவும், தோண்டி எடுக்க வேண்டுமேன்பதே”

இப்பொழுது காங்கிரஸ் அல்லது அதன் தலைவர் சோனியா காந்தி சிதம்பரம் பற்றி திக் விஜய் சிங் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் உள்துறை அமைச்சரைப் பற்றி கணிப்பாய்வு மேற்கொள்ள வேண்டும். சிதம்பரத்தின் முன் வரலாறுகள் சோனியாவிற்கு தெரியும். தற்செயலாக ஆர்.பொத்தாக் என்பவர் எழுதிய “வேதாந்தாவின் கோடிகள்” புலனாய்வு பதிவில் ஸ்டெ ரிலைட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1000 சதமாக உயர்த்தி மதிப்பிட்டபோது 2003ம் ஆண்டில் வேதாந்தா நிறுவனத்திடமிருந்து சிதம்பரம் 20000 டாலர்கள் பெற்றார் என குறிப்பிடுகிறார்.

2006ல் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மிகுந்த சூடான விவாதப் பொருளாக இருந்தது. சமாஜ் வாதி, தெலுங்குதேசம், மற்றும் அ.தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் வேதாந்தா நிறுவனத்தால் சந்தையில் விடப்பட்ட நிதியின் நம்பகத்தன்மை குறித்தும், பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கும், அந்த நிறுவனம் நிதியளித்திருப்பது பற்றி காரசார விவாதங்கள் நடைபெற்ற போதிலும் சிதம்பரம் தனது நிலையிலிருந்து எந்தவித பாதிப்பின்றிருந்தார்.

கனிம வளங்கள் தோண்டப்பட்டு அங்கு பூகோள சூழல் தவிர்க்க முடியாத நிலை அடையும் முன், இன்றோ, நாளையோ சோனியா இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ஆனால் உள்துறை அமைச்சர் புலம் பெயர்ந்து அவதியுறப்போகும் பழங்குடியினரைப்பற்றி சிறிதும் கவலையுறாமல், அவர்கள் நிலத்திலிருந்து கனிம வளங்கள் எடுத்து மிகப்பெரிய உலோக சாம்ராஜ்யம் உருவாக்கத் துடிக்கும் பெரும் நிறுவனங்களைப் பற்றித்தான் அதிக கவலை கொண்டுள்ளார் என்றே தெரிகிறது.

வியாழன், 13 மே, 2010

நொய்டா படுகொலைகள்:சுரேந்தர் கோலிக்கு மரண தண்டனை.


நொய்டாவில் நிதாரி கிராமத்தில் ஏராளமான குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுரேந்தர் கோலிக்கு(38) மரண தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.2006-ம் ஆண்டு நிதாரி கிராமத்தில் 19 குழந்தைகளும் பெண்களும் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். இதில், ஆர்த்தி என்னும் 7 வயது சிறுமியை கோலி கொலை செய்தது நீதிமன்றத்தில் உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.கே.சிங் தீர்ப்பளித்தார்.

மொகீந்தர் சிங் பாந்தர் என்பவரின் வீட்டில் சுரேந்தர் கோலி பணியாற்றி வந்தார். இந்த வழக்கில், பாந்தர் தண்டனையின்றி தப்பிவிட்டார் என்று நிதாரி கிராம மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.ஏற்கெனவே, ரிம்பா ஹால்தர் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மொகீந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரேந்தர் கோலி ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அலகாபாத் நீதிமன்றம் பாந்தரை விடுவித்து தீர்ப்பளித்தது.நிதாரியில் கொல்லப்பட்டவர்களின் உடல் பாகங்கள் பாந்தரின் வீட்டுக்கு பின்புறம் உள்ள சாக்கடைகளில் கண்டெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

நாய் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரு தலித்கள் உயிருடன் எரித்துக் கொலை.


தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடைய நாய் தொடர்பாக ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட தகராறு முற்றி தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவர் உயிரோடு எரியூட்டப்பட்டனர்.ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள மிர்ச்பூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சார்ந்த யோகேஷ் என்பவரின் நாய் மீது ஜாட் இனத்தைச் சேர்ந்த ராஜேந்தர் கல் எறிந்தார். இதற்கு யோகேஷ் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக கூட்டப்பட்ட கிராமப் பஞ்சாயத்து தோல்வியில் முடிந்நதது. இதனைத் தொடர்ந்து தலித்துகள் ஜாட் இனத்தவரால் தாக்கப்பட்டனர்.

இரு இனத்தவருக்குமான மோதல் முற்றி ஜாட் இனத்தவர் தலித்துகளின் 25 வீடுகளை தீயிட்டுக் கொழுத்தினர். இதில்இரண்டு தலித்கள் எரித்துக் கொல்லப்பட்டனர்.இதுக்குறித்து தாரா சந்த் என்ற தலித் கூறுகையில்;" வியாழக் கிழமையன்று ஆயுதங்களுடன் வந்த ஜாட் இனத்தவர் என்னுடைய வீட்டுக்குள் நுழைந்து சோதனை நடத்தினர். என்னுடைய தந்தையும், 18 வயதான என்னுடைய சகோதரியும் வீட்டில் இருக்கும் போது வீட்டை தீ வைத்துக் கொளுத்தினர். இதில் இருவரும் பலியாகினர்." என்றார்.

இச்சம்பவம் அக்கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலியானோரின் சடலங்களைப் புதைக்க தலித்துகள் மறுத்துவிட்டனர். இப்பிரச்சனை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஜாட் இனத்தைச் சேர்ந்த மிர்ச்பூர் தாசில்தாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தங்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் தலித்துகள் கோரி வருகின்றனர்.மூன்று நாட்களாக நாங்கள் அளிக்கும் புகார்களை காவல்துறையினர் பதிவு செய்ய மறுத்துவிட்டனர் என்று தலித்துகள் குற்றும் சாட்டுகின்றனர். வியாழக் கிழமையன்றுதான் இப்பிரச்சனை குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மிர்ச்பூர் கிராமத்திற்கு கூடுதல் காவல் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

வியாழன், 22 ஏப்ரல், 2010

தலித் இளம்பெண் எரித்துக் கொலை: ஹரியானா கிராமத்தில் வன்முறை.


சண்டிகர்:ஹரியானாவில் ஹிஸார் மாவட்டத்திலிலுள்ள ஒரு கிராமத்தில் ஊனமுற்ற தலித் இளம்பெண் ஒருவர் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டார்.அப்பெண்ணின் தந்தைக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.தலித்துகள் வசிக்கும் வீடுகளுக்கு சிலர் தீவைத்தனர். கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் சுமன். அவருக்கு வயது 18 ஆகிறது. இவருடைய தந்தையான தாராசந்த் 90 சதவீதம் தீக்காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 15க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சிலர் தீவைத்ததாக கூறப்படுகிறது.

உயர்ஜாதி ஹிந்துக்கல் உடனான முன்விரோதம் இத்தாக்குதலுக்கு காரணம் எனக்கூறப்படுகிறது. அப்பகுதியில் மோதல் சூழல் ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு தலித் பெண்களிடம் உயர்ஜாதி ஹிந்துக்கல் சிலர் முறைகேடாக நடந்தததால் தலித் இளைஞர்கள் அவர்களை தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சிலர் மீது போலீசார் வழக்கு பதிவுச் செய்துள்ளனர்.அதேவேளையில், வீடுகளுக்கு வன்முறையாளர்கள் தீவைத்தார்கள் என்பதுக்குறித்து சரியான விபரம் கிடைக்கவில்லை என போலீஸ் கூறுகிறது.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் அமைப்பு.


பாரதீய ஜனதா கட்சி அழிவின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதற்காக வெகுமக்கள் யாரும் இரங்கப் போவதில்லை. காரணம் அது ஒரு பிற்போக்குத்தனமான கட்சி; மக்கள் நலன் என்கிற பரந்த பார்வை அதற்குக் கிஞ்சிற்றும் கிடையாது. இந்து மதக் கொள்கைகளையும், குறிப்பாக அதன் வருணாசிரமக் கொள்கைகளையும் உணர்ந்தோர் அதனை எந்த வகையில் ஏற்றுக் கொள்வார்கள்? பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் ஒரு மதத்தை சமத்துவம் விரும்புவோர், மனித உரிமைகளை நேசிப்போர் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? 21 ஆம் நூற்றாண்டிலும் இதுபோன்ற கட்சிகள் இயங்குவது என்பதே பெரும் தலைக்குனிவாகும்.பிரபல பத்திரிகையாளரும், இங்கிலாந்துக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியவருமான குல்தீப் நய்யார் பா.ஜ.க.பற்றி சொன்ன கருத்துக் கணிப்பு, கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.

முன்னாள் ஜனசங்கம் மற்றும் பா.ஜ.க.வின் அனைத்துக் கூட்டங்களையும், கருத்தரங்குகளையும், பேச்சுகளையும் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து நான் கவனித்து வருகிறேன். இந்த இந்துக்களின் கட்சி ஏன் எப்பொழுதுமே தீண்டாமை பற்றி கேள்வியை எழுப்பியதே இல்லை? இந்துக் களிடையே உள்ள ஜாதி நடைமுறை மிகவும் அடக்கு முறை நிறைந்த ஒன்றாகவே உள்ளது. பா.ஜ.க.வை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் அமைப்பு என்பது இதன் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். இதனைச் சீர்திருத்த வேண்டும் என்று பா.ஜ.க. நினைத்திருக்கக் கூடும் என்று நான் நினைக்கவே இல்லை. உண்மையைக் கூறுவதானால், அனைத்து மக்களுக்கும் பொருளாதார சமத்துவம் அளிக்கும் எந்த சட்டத்தையும் பா.ஜ.க. விரும்புவதில்லை. உயர்ஜாதி மக்களின் கட்சி அது. தொடக்க முதல் அக்கட்சிக்குப் பிரியமானது என்னவென்றால், சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை இழிவுபடுத்திக் கொடுமைப் படுத்துவதுதான். (டெக்கான் கிரானிக்கிள், 4.2.2008)

கணித்திருப்பவர் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாளர் அல்ல. அத்தகைய இயக்கத்தோடு தொடர்பு கொண்டவர்கூட அல்ல. ஒரு மூத்த பத்திரிகையாளர் என்ற முறையில் கடந்த 40 ஆண்டுகாலம் கணித்த முறையில் இப்படியொரு கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
ஜாதி அமைப்பு தேவை_ வருணாசிரமம் நல்லது என்பதுதான் சங் பரிவார்க் கும்பலின் குருநாதரான கோல்வால்கரின் வேத நூலில் மிகவும் வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

செத்த பசு மாட்டின் தோலை உரித்தனர் ஐந்து தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக, அந்த ஐவரையும் படுகொலை செய்த கூட்டம் இது. இதற்குமேல் இதன் தீண்டாமை வெறியை, ஜாதி வெறியை எடை போடுவதற்கு வேறு எந்த எடுத்துக்காட்டு தேவை? சமூகநீதியை எடுத்துக்கொண்டாலும், அவர்கள் அதற்கு எதிராகவே இருந்து வருகின்றன.மண்டல் குழுப் பரிந்துரைகளுள் ஒன்றான வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்தார் என்பதற்காகத்தானே. அதுவரை வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வந்த பி.ஜே.பி. தன் ஆதரவை விலக்கிக் கொண்டு ஒரு சமூகநீதி ஆட்சியைக் கவிழ்த்து மகிழ்ச்சிக் கூத்தாடியது.

ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உமாபாரதி மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்தார். அவர்மீது தொடுக்கப்பட்ட ஒரு வழக்குக்காக அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்யப்பட்டார். நேர்மையான கட்சியாக இருந்தால் பி.ஜே.பி. என்ன செய்திருக்கவேண்டும்? மீண்டும் முதல மைச்சர் பதவியை அவருக்கு அளித்திருக்கவேண்டுமே! செய்யவில்லையே! மாறாக ஆர்.எஸ்.எஸின் தலைவர் கே.எஸ். சுதர்சன் என்ன சொன்னார்? அம்மையாரின் பிறந்த குடியும், பிறப்பு வளர்ப்பும் சரியில்லை என்று கூறினாரே. இதன் பொருள் என்ன? பார்ப்பனரான சுதர்சனின் ஜாதிப் பார்வை இதில் பளிச்சிடவில்லையா? உமாபாரதியேகூட பி.ஜே.பி.யை உயர்ஜாதியின் கட்சி என்று விமர்சித்தது உண்டே.

இத்தகைய ஒரு கட்சி பிளவுபட்டு மேலும் மேலும் பலகீனப்பட்டு அழிவின் விளிம்பிற்குச் செல்லுகிறது என்றால், நேர்மையாக மகிழ்ச்சி அடையவேண்டும்.இக்கட்சி வளர்ந்தாலோ, ஆட்சிக்கு வந்தாலோ அதனால் மக்களின் அமைதி கெட்டு, ஒவ்வொரு நொடியும், வன்முறையிலும், வெறுப்பிலும், கலகத்திலுமே காலத்தைக் கழிக்கவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும்.பதவியைப் பிடிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக அக்கட்சிக்குள் ஏற்படும் சர்ச்சைகளும் குடுமிபிடிகளும் எதைக் காட்டுகின்றன? நேர்மையான சித்தாந்தமும், வழிகாட்டுதலும் அங்கு இல்லை என்பதுதான் அதற்கான விடையாகும்.இனவெறியரான அடால்ஃப் ஹிட்லர் தற்கொலைமூலம் தன் முடிவைத் தேடிக்கொண்டார்.பாசிஸ்ட், நாஜிகளின் வரலாறு அப்படித்தான் இருக்கிறது. பி.ஜே.பி. மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?