செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

பி.டி கத்திரிக்காயும் பிராமண ஹிந்துதுவாவும் ஒரு ஆய்வு கட்டுரை.


அண்மை காலமாக ஒரு வித்தியாசமான காட்சியை நாம் காண்கிறோம். மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் பல தரப்பினரால் பரவலாக நடத்தப்படுகின்றன. அறிவுத்தள செயற்பாட்டாளர்கள், தன்னார்வக் குழுக்கள், இயற்கை வேளாண் விசுவாசிகள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள், பத்தி எழுத்தாளர்கள், நடிகர்கள் என யூகிக்கவே முடியாத பல தரப்பினரும் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.

போராட்டம், எதிர்ப்பு என்பதை எல்லாம் வாழ்வில் அறிந்தே இராத உயர் மேல்தட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் கூட இதற்காக பேசுகின்றனர். இப்போராட்டங்கள் தொடர்பாக நாள்தோறும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்த்தால் ‘திருந்திட்டாய்ங்களோ’ என்றே எண்ணத் தோன்றுகிறது.

நம்மாழ்வார் உள்ளிட்ட இயற்கை விவசாயத்தை வலியுறுத்துபவர்கள் இதற்காகப் பேசுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பா.ஜ.க.வின் இல.கணேசன், மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக மாய்ந்து, மாய்ந்து குரல் கொடுக்கிறார். ஆர்.எஸ்.எஸ். கூட இதை கண்டிக்கிறது. இது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் கூடுதல் முக்கியத்துவம் தந்து பிரசுரிக்கின்றன. குறிப்பாக இந்துத்துவ, பார்ப்பன ஊடகங்கள் என்றுமில்லாதக் கூத்தாக மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக பிரசாரமே செய்கின்றன.

பொதுவாக இத்தகைய தனது ஏகாதிபத்திய தரகு வேலைகளுக்கு எதிர்ப்புகள் வரும்போது அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் கடந்து செல்வது அல்லது போலீஸ் லத்தி மூலம் பதில் சொல்லி அடக்கி ஒடுக்குவது என்பதுதான் ஆளும்வர்க்கத்தின் காலம் காலமான வழிமுறை. ஆனால் அந்த அரசு கூட மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு அஞ்சுவது போல நடிக்கிறது. ‘பி.டி. கத்தரிக்காயை சந்தையில் விற்பனை செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்’ என பெயரளவுக்கேனும் மத்திய அரசு சொல்ல வேண்டியிருக்கிறது. புறத்தோற்றத்தில் இப்போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்திருப்பதைப் போன்று ஒரு சித்திரத்தை உருவாக்க இவ்வரசு முனைகிறது. உள்ளடக்கத்தில் அது தீவிர முனைப்போடு இருக்கிறது என்பது வேறு விசயம்.

சரி, என்னவாயிற்று இவர்களுக்கு எல்லாம்? பா.ஜ.க.வும், அதிகார வர்க்கமும் திடீரென உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக மாறிவிட்டார்களா? இந்தியாவின் உணவு இறையாண்மையை காலில் போட்டு நசுக்கும் மரபணு மாற்ற விதைகளின் பின்னுள்ள முதலாளித்துவ நச்சு அரசியலை புரிந்துகொண்டுவிட்டார்களா? "பி.டி.காட்டன் என்ற கொலைகார விதையின் மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகளை சாகக் கொடுத்தது போதும். இன்னொரு பி.டி. கத்தரிக்காயைக் கொண்டு வந்து பல ஆயிரம் விவசாயிகளை காவு கொடுக்க வேண்டாம்’ என்பது அவர்களின் எண்ணமா?

ஒரு வெங்காயமும் கிடையாது. மரபணு மாற்ற விதைகளுக்கு கிளர்ந்து வரும் எதிர்ப்பின் பேர்பாதி எங்கிருந்து வருகிறது என்ற திசையைப் பார்த்தால் தெரியும், அவர்கள் அத்தனை பேரும் எப்போதும், எதன் பொருட்டும் மரபுகளை மாற்ற விரும்பாதவர்கள். கோயிலாக இருந்தாலும், கத்தரிக்காயாக இருந்தாலும் அவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய மரபு காக்கப்பட வேண்டும். ராமன் என்றொருவன் வரலாற்றில் இருந்தானா, இல்லையா என்பதே தெரியாது. ஆனால் கடலின் மணல் திட்டை ராமர் பாலம் என்பார்கள். கேட்டால் இந்து மரபு என்பார்கள். கருவறைக்குள் என்னைத் தவிர வேறு எவனும் நுழையக்கூடாது என்பது இந்திய மரபு. அதை மாற்றினால் இவர்களுக்குப் பிடிப்பதில்லை.

ஆண்களின் உடலுக்கு வெளியே இருக்கும் உபரி உறுப்பாகவே பெண்கள் நடத்தப்படுவதும், பார்பன மேல்சாதிக்காரன் தலித் மக்களை அடிமைச் சேவகம் செய்ய வலியுறுத்துவதும், பணக்காரர்களுக்கு பணிந்து நடக்க ஏழைகள் பணிக்கப்படுவதும், மத, மொழி, இன மற்றும் சிறுபான்மையினரை வாழ்வை அச்சத்துக்கு உள்ளாக்குவதும் இந்திய மண்ணின் மரபுகள்தான். அவை மீறப்படும்போதும் எழும்பாத இந்த குரல்கள் இப்ப மட்டும் எழும்ப காரணம் என்ன? கத்திரிக்காய் என்பது உயர்ஜாதி பிராமண உணவுப்பொருள் அதுதான் அதன் மரபுகள் மீறப்பட கூடாது என்று இந்த ஹிந்துத்துவா தீய சக்திகள் பி.டி. கத்தரிக்காய்களுக்கு எதிராக பலமாக குரல் கொடுக்கின்றன.

அவன் மத்த விசயத்துல எப்படியாவது இருந்துட்டுப் போறான். பி.டி. கத்தரிக்காயை எதிர்க்கிறது நல்ல விசயம்தானே… அதுக்குள்ளேயும் எதுக்குப் பூணூலை தேடுறீங்க?” என்பது உங்களில் சிலரது உடனடி எண்ணமாகவும், எதிர்வினையாகவும் இருக்கக்கூடும். சரி, ஒரு வாதத்துக்காக பி.டி.கத்தரிக்காயை எதிர்க்கும் எல்லோரும் போராளிகள், சமூக நலனின் அக்கறைக் கொண்டவர்கள் என வைத்துக்கொள்வோம். இவர்களுக்கு இந்த நாட்டின் கத்தரிக்காய் வளம் பறிக்கப்படுவது பற்றி மட்டும்தான் கவலையா? அதற்கு முன்னும், பின்னும் இம்மண்ணின் வளங்கள் சூறையாடப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.

இதோ… சமகாலத்தில் சட்டீஸ்கர், ஜார்கண்ட் காடுகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிட துடிக்கின்றன. மரபுரிமை அடிப்படையில் தண்டகாரன்யா காட்டின் ஆதிவாசிகளுக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் இருந்து அவர்கள் துரத்தி அடிக்கப்படுகிறார்கள். இதை பன்னாட்டு நிறுவனங்களின் புரோக்கர்களாக இருந்து பிரதமரும், உள்துறை அமைச்சருமேதான் செய்கின்றனர்.

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் நீர்வளம் முழுவதையும் ரத்தம் உறிஞ்சுவதைப் போல கோக்கோகோலா நிறுவனம் இன்னமும் உறிஞ்சிகொண்டேதான் இருக்கிறது. அருகாமை மாநிலங்கள் சொந்தம் கொண்டாட முடியாத, தமிழ்நாட்டில் உற்பத்தியாகி, இங்கேயே கடலில் கலக்கும் ஒரே நதியான தாமிரபரணியின் வளம் மரபு ரீதியாக கோககோலாவுக்கு சொந்தமா, தமிழ் மக்களுக்கு சொந்தமா? தண்டகாரண்யாவிலும், தாமிரபரணியிலும் நமது பூர்வீக மரபுரிமை பறிக்கப்படுவதற்கு எதிராக இந்த மரபின் மைந்தர்கள் என்ன செய்து கிழித்தார்கள்? ஒரு கண்டனம், ஒரு அறிக்கை, ஒரு போராட்டம்… எதுவுமில்லை.

1987-ல் அமெரிக்காவில் முதன் முதலில் மரபணு மாற்ற உயிரினம் உருவாக்கப்பட்டது. நாம் கண்ணாடித் தொட்டிகளில் பார்க்கிற வண்ண மீன்கள்தான் இந்த உலகின் முதல் மரபணு மாற்ற உயிரினம். அவை வெறுமனே அழகுக்கானவை என்பதால் உடனடியாக ஆபத்துத் தெரியவில்லை. கொத்த வரும் சர்ப்பம் கூட அழகுதான். இந்த மரபணு மாற்றம் என்ற சர்ப்பம் முதலாளிகளின் கண்களுக்கு மிகப்பெரிய கர்ப்பகத்தருவாக தெரிந்தது. அதன் பிறகு அவர்கள் உருவாக்கியதுதான் பிராய்லர் கோழிகள். கோழியின் சதைப்பகுதி மட்டும் அதிகமாக வரும்படி அதன் மரபணுவை மாற்றியமைத்து பிராய்லர் கோழிகளை உருவாக்கினார்கள். எது விற்பனையாகிறதோ அதன் உற்பத்தியை பெருக்குவது இயல்பான உற்பத்தியாளர் உத்தி. ஒரு வருடம் உளுந்து அதிகம் விலைபோனால் அடுத்த வருடம் பெரும்பாலான விவசாயிகள் உளுந்து பயிரிடுவது வழக்கம்தான். ஆனால் ஒரு உயிரினத்தின் உடல் அமைப்பையே விற்பனைக்கேற்ப மாற்றுவதன் பின்னால் இருக்கும் லாபவெறியின் கொடூர முகத்தைப் பாருங்கள்.

இன்றைய நுகர்வு கலாசாரத்தில் மனித உடம்புக்கும், பிராய்லர் கோழிக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட கிடையாது. பிராய்லர் கோழிக்கு சதை அதிகமாக வரும்படி மரபணு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது என்றால் கண்டதையும் வாங்கிக்கொண்டே இருக்கும்படி மனிதனின் மூளை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. நிறுவனங்கள் தங்களின் பொருட்களுக்கு ஏற்றதுபோல வாழ்வதற்கு மக்களை பழக்கியிருக்கிறார்கள்.

கிராமங்களில் மாடு மேய்ப்பதில் இரண்டு வகை உண்டு. மாட்டை புல் உள்ள இடத்தில் மேயவிட்டு ஓட்டி வருவது ஒரு வகை. வெள்ளாமை வயல்களின் வரப்புகளுக்கு நடுவே பசும்புல்லை மாட்டை கையில் பிடித்தபடி மேயவிடுவது இன்னொரு வகை. ‘பிடி மாடு மேய்ப்பது’ என்றிதைச் சொல்வார்கள். இன்றைய சந்தை உலகில் நிறுவனங்கள் மேய்க்கும் பிடிமாடுகளாகத்தான் இருக்கின்றனர் மனிதர்கள். ஆகவே பிராய்லர் கோழியை தின்பதால் நீங்கள் அதை விட பெரிய ஆள் என்ற எண்ணம் எல்லாம் வேண்டாம். நீங்களும் ஒரு பிராய்லர் கோழியே.

சரி, இப்படி கோழியின் மரபணுவை மாற்றினார்களே… அப்போது இந்த so called எதிர்ப்பாளர்கள் எங்கேப் போனார்கள்? ‘கோழிக்கறியை மாத்தினா எங்களுக்கு என்ன? அதெல்லாம் அவா ஃபுட். கத்தரிக்காய்தான் எங்க ஃபுட்’ என்பதாக இதைப் புரிந்துகொள்ளலாமா? உண்மையில் பி.டி. கத்தரிக்காய் என்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை நாம் முழு வீச்சோடு எதிர்க்க வேண்டும். இன்று பரவலாக பி.டி.கத்தரிக்காய் என்ற வார்த்தையே அறியப்படுகிறது.

Bacillus Thuringiensis என்ற பாக்டீரியாவின் சுருக்கம்தான் பி.டி. இந்த வைரஸை கத்தரிக்காயின் மரபணுவில் செலுத்தி அதன் தன்மையை மாற்றுகின்றனர். ஏன்? இந்திய கத்தரிக்காயில் தண்டு துளைப்பான் புழு அதிகமாக இருக்கிறதாம். ’ஆகவே அந்தப் புழுவை எதிர்க்கும் விதமாக கத்தரிக்காயின் மரபணுவை மாற்றி அமைத்திருக்கிறோம்’ என இதற்கு விளக்கம் சொல்லப்படுகிறது. ஆனால் நடைமுறை யதார்த்தம் வேறாக இருக்கிறது. இதே போன்றதொரு ’பூச்சி தாக்காது’ காரணத்தை சொல்லிதான் முன்பு பி.டி.பருத்தியை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அந்த பருத்தி முன்னெப்போதும் இல்லாததைவிட மிகப்பெரிய நஷ்டத்தை பரிசளிக்கவே ஆந்திராவிலும், மஹாராஷ்டிராவிலும் பல ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுபோனார்கள்.

விசயம் என்னவெனில் எந்தவொரு பூச்சியினமும் மருந்தின் தன்மைக்கு மிக விரைவில் பழகிவிடும். பின் அதைவிட வீரியமான மருந்தைதான் தெளிக்க வேண்டும். இவர்கள் மரபணுவை மாற்றி உருவாக்கிய விதைக்கும் இது பொருந்தும் என்பதால் அவ்விதைகள் மிகக் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தன. எளிதாக நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின. பி.டி.பருத்திக்கு நேற்று இதுதான் நடந்தது. நாளை பி.டி.கத்தரிக்காய்க்கும் இதுதான் நடக்கும்.

மரபணு மாற்ற விதைகளை ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி தன் நிலத்தில் பயிரிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அருகாமை வயல்களில் வேறு எந்த தாவரம் பயிரிட்டிருந்தாலும் அதன் மரபணுவிலும் தானாகவே மாற்றம் நிகழும். தொற்றுநோய் மாதிரி. ஆக, ஒரு ஊரில் ஒரே ஒரு விவசாயி இதைப் பயிரிட்டாலும் மெல்ல, மெல்ல அப்பிராந்தியத்தின் தாவர மரபணு சூழல் மாறுதலுக்குள்ளாகும். வேறு வழியே இல்லாமல் மரபணு மாற்ற விதைகளை விற்கும் நிறுவனங்களிடம் போய் நிற்க வேண்டும். அவன் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும். ஒட்டுமொத்த இந்திய விவசாய நிலங்களையும் மோனோபோலியாக ஆட்சி செலுத்துவார்கள். மரபணு மாற்ற தாவரங்களுக்கான விதைகளுக்கும் அந்த நிறுவனங்களையே சார்ந்திருக்க வேண்டும்.

விளைந்ததை விதையாகப் பயன்படுத்த முடியாது. ’பயன்படுத்தவும் கூடாது’ என்கிறது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான India-US knowledge initiative on Agriculture என்ற ஒப்பந்தம். 1,2,3 அணு ஒப்பந்தம் சமயத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தைக் காப்பாற்ற அமெரிக்கா தொழில்நுட்ப உதவி செய்யுமாம். இந்தியா இதற்கான நிதி ஆதாரத்தை உருவாக்கித் தருமாம். வருடத்துக்கு 350 கோடி ரூபாய். இந்திய மரபை காப்பாற்ற அமெரிக்காவுக்குக் காசு தரும் இந்த அறிவாளிகளை என்ன செய்வது? இந்த ஒப்பந்தம் இம்மியளவும் மாற்றமில்லாமல் அப்படியேதான் இன்னமும் அமுலில் இருக்கிறது. மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சும்மாவேனும் எதிர்ப்புகளை மட்டுப்படுத்தும் தந்திரமாக ‘தற்காலிகத் தடை’ என்கிறார். மரபா, லாபமா என்றால் அவர்கள் லாபத்தின் பக்கமே சாய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேற்சொன்ன இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தில் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் எதிரான மிக மோசமான அம்சங்களும் அடக்கம். பொதுவில் அனைத்துலக சட்டங்களின்படி தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட எந்த ஒரு உயிரினத்துக்கும் தனி சொத்துரிமை கோர முடியாது. இவர்கள் மரபணு மாற்றத்தின் மூலம் சிற்சில மாற்றங்களை விதைகளில் ஏற்படுத்தி அவற்றை தங்களின் அறிவுசார் சொத்துரிமையாக மாற்ற முனைகின்றனர். இதன்மூலம் உயிரினங்களுக்கும் காப்புரிமை பெறத் துடிக்கின்றனர்.

ஒட்டுமொத்த உயிர்ச்சூழலையும் லாபத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முயலும் இந்த லாபவெறிக்கு எதிராக நாம் அனைவரும் எதிர்குரல் எழுப்ப வேண்டும். நமது எதிர்ப்புகளை உழைக்கும் விவசாயிகளுடன் பொருத்திக்கொள்ள வேண்டுமே தவிர, மரபின் மைந்தர்களுடன் அல்ல!

சனி, 20 பிப்ரவரி, 2010

என்று தனியும் இந்த ஜாதிக்கொடுமை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்ற விகிதத்தில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு 8-வது இடத்தில் இருப்பதாகவும், பொதுவாக தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையைப் பொறுத்தவரை தென் மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் என் எம் காம்ப்ளே வியாழக் கிழமை (18-02-2010) அன்று சென்னையில் தெரிவித்தார்.

இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு எதிரான குற்றங்களைப் பொறுத்தவரை உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், மத்தியப் பிரதேசம் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக அவர் கூறினார். மாநில அளவில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய காம்ப்ளேயும், ஆணையத்தின் உறுப்பினர் மகேந்திர போத்தும் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்பான ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்தில் இதற்கென சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த வழக்குகளை விரைந்து தீர்ப்பதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சிந்திக்க: தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் கருதி எத்தனை சட்டங்கள் போட்டாலும் அத்தனையும் ஏட்டளவில்தான். தாழ்த்த பட்ட மக்களின் ஒரே விடியல் இஸ்லாம்தான்.இந்த ஜாதிய கொடுமை ஹிந்து மதத்தின் பெயரால் அவர்களுக்கு வந்தது. ஹிந்து மேல்ஜாதி பிராமணர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் ஹிந்துமதத்தின் பெயரால் ஒரு தீட்டை ஏற்படுத்தி இருகிறார்கள்.எனவே தாழ்த்தபட்ட மக்கள் என்று ஹிந்துமதத்தை கைகழுவி இஸ்லாத்திற்குள் நுழைகிறார்களோ அன்றைய நொடியில் அவர்களது தீட்டு போகி அவர்கள் புது மனிதர்களாக பிறவி எடுப்பார்கள்.

திங்கள், 15 பிப்ரவரி, 2010

பார்பண ஹிந்து மதமும் வர்ணாசிரம தீண்டாமை கொடுமையும் ஒரு ஆய்வு.

ஏன் சிறுபான்மையான பார்ப்பனர்கள் நடுத்தரவர்க்கமாகவும், பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் ஏழைகளாகவும் இருக்கின்றனர்? ஏன் சிறு அளவில் கூட பார்ப்பனர்கள் விவசாயிகளாக இல்லை? ஏன் பார்ப்பனர்களும், முதலியார்களும், செட்டியார்களும், வெள்ளாளக் கவுண்டர்களும் தங்களை உயர்ந்த சாதி என்று இன்னமும் கருதுகிறார்கள்? ஏன் பெரும்பான்மையான தலித் மக்களை தாழ்ந்த சாதி என்று இவர்கள் கூறிவருகிறார்கள்

காரணம் எதுவாக இருந்தால் என்ன? எதற்கு இந்த ஆராய்ச்சி என்ற அடுத்த கேள்வியும் இருக்கிறது. சாதி என்பது இந்த நாட்டையும் சமூகத்தையும் கெடுத்து, முடமாக்கி, சீரழித்துக் கொண்டிருக்கும் ஒரு சாபக்கேடு மட்டுமல்ல, ஒழுக்கக் கேடுகளிலெல்லாம் தலையாய ஒழுக்கக்கேடு என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ளவேண்டும். அதன்பால் மென்மையான அணுகுமுறையைக் காட்ட முடியாது. அதை ஈவு இரக்கமின்றி ஒழிக்க வேண்டும். எப்படித் தோன்றியது யார் காரணம் என்ற ஆராய்ச்சி அதற்காகத்தான். அதற்காக மட்டும்தான்.


இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை முடமாக்கி வைத்திருக்கும் சித்தாந்தம் ஹிந்து மதம், சாதி வர்ணாசிரம முறை அவற்றின் புனிதம் போன்ற கருத்துகள்; இன்னமும் அவற்றை நியாயப்படுத்துவது மட்டுமல்ல, சூத்திரன் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்று சுப்ரீம் கோர்ட் வரை போய் வாதாடுபவர்கள். இவர்களை என்ன செய்யலாம்? கருத்தை கருத்தால் வெல்ல வேண்டுமா,அல்லது இவர்கள் மீது வேறு எதையாவது பிரயோகிக்கலாமா.

“பரப்பயலுக்கு அவ்வளவுதான் புத்தி” என்று இந்தக் கணம் வரை உயர்சாதியினர் என்று தம்மைக் கூறிக்கொள்வோர் பேசி வருவதில் பலருக்கு உறுத்தல் இல்லை. “மேல் சாதிகளை”ச் சேர்ந்த படித்த அறிவாளிகளைப் பொருத்தவரை அது முதியவர்களின் அறியாமை, அல்லது சம்பிரதாயப் பிடிப்பு இன்ன பிற, இன்னபிற. ஆனால் “பாப்பார புத்தி” என்று ஒரு சூத்திரனோ தலித்தோ போகிற போக்கில் சொல்லி விட்டால் கூட உடனே சுர் என்று வந்து விடுகிறது.

தி.மு.க அரசு 2006 ஆம் ஆண்டில் தொடங்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில், ஒன்றரை ஆண்டுக்காலம் முறையாகப் பயின்ற 207 மாணவர்கள் பணி நியமனம் பெற இயலாமல் கடந்த 2 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். பார்ப்பன சாதியைச் சார்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் என்ற பிரிவினரைத் தவிர்த்து, பிற சாதியினரை அர்ச்சகராக்குவது ஆகமவிதிகளுக்கும், இந்துமத சம்பிரதாயங்களுக்கும் எதிரானது என்று மதுரையைச் சேர்ந்த பட்டர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதே இதற்குக் காரணம்.

இந்தத் தடையாணையின் விளைவாக, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் முடங்கிவிட்டன. சைவ / வைணவக் கோயில்களில் வடமொழி மற்றும் தமிழில் வழிபாடு நடத்துவதற்கு முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்று, தீட்சையும் பெற்றிருக்கும் இந்த மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகச் சான்றிதழும் வழங்கப்படவில்லை. 2009 நவம்பரில் இம்மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததனர் இதன் தொடர்ச்சியாக 2010 ஜனவரியில்தான் இவர்களுக்கான சான்றிதழே வழங்கப் பட்டிருக்கிறது. எனினும் உச்ச நீதிமன்றத் தடையாணை காரணமாக இவர்கள் யாரும் இதுவரை அர்ச்சகராக நியமிக்கப் படவில்லை.

பார்ப்பன சாதியில் பிறந்த பட்டாச்சாரியார்கள் அல்லது சிவாச்சாரியார்கள் தவிர வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும், சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்றும் கூறுகின்ற தீண்டாமைக் கருத்துக்கு எதிரான இந்த வழக்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

1970 இல் பெரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, 1971 இல் அர்ச்சகர் வேலையில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழிக்கும் சட்டமொன்றைத் திமுக அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் “அர்ச்சகர்கள் எனப்படுவோர் இந்து அறநிலையத்துறையால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அதில் வாரிசுரிமை கோர முடியாது என்றும் தகுதியான நபர்களை அரசு தெரிவு செய்யலாம்” என்றும் கூறிய உச்சநீதிமன்றம், “அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்பட வேண்டும்“ என்றும் வலியுறுத்தியது.

“இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும் “என்று கூறி, சாதியையும் ஆலயத் தீண்டாமையையும் அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். 1972 இல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், 2006 இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது.

ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வந்த உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பலதார மணம் போன்ற சமூகக் கொடுமைகளும், சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்த தேவதாசி முறை, தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலில் நுழையவிடாமல் தடுத்தல் போன்ற அநீதிகளும் “இந்து மத உரிமை“ என்ற பெயரில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் போராட்டங்கள் மற்றும் சமூக நிர்ப்பந்தத்தின் விளைவாக இத்தகைய இந்து மத உரிமைகள் இன்று கிரிமினல் குற்றங்களாக்கப்பட்டு விட்டன. எனினும் ஆலயத் தீண்டாமை எனும் குற்றம், ஆகமவிதிகளின் பெயரால் மூடிமறைக்கப்பட்டு, அரசியல் சட்டத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வழக்கு 207 மாணவர்கள் பணி நியமனம் பெறுவது தொடர்பான வழக்கு மட்டுமல்ல; ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழக்கு. சமூக நடவடிக்கைககளில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டிருந்தாலும், அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்தவரை தீண்டாமை என்பது இந்துமத உரிமையாகவே அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் பார்வையில், இந்த 207 மாணவர்களின் ஒரே தகுதிக் குறைவு அவர்களது பிறப்புதான். குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியில் பிறந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே இன்று பல்வேறு கோயில்களில் பணி செய்து வரும் அர்ச்சகர்கள் பலர், அவர்களே கூறுகின்ற ஆகம விதிகளின் அடிப்படயில் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. திருமணமாகாதவர்கள், திருமணமாகி மனைவியை இழந்தவர்கள் போன்றோர் சாமி சிலையைத் தீண்டக்கூடாது என்று ஆகம விதிகள் கூறுகின்றன. ஆனால் அத்தகைய பலர் அர்ச்சகர்களாகப் பணி செய்து வருகின்றனர்.

அவர்களில் தேவநாதன் போன்ற “ நல்லொழுக்க சீலர்களும்“ அடக்கம். 207 மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களுக்குத் தகுதி இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த தமிழக அரசு, தேவநாதன் உள்ளிட்டு இன்று பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் யாருக்கும் அத்ததகைய தேர்வு எதையும் நடத்தவில்லை. வழிபாட்டு முறைகள் தெரிந்தவர்களா, ஒழுக்கமானவர்களா என்று கண்காணிக்கும் அதிகாரம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இருந்தும்கூட, அவ்வாறு யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதும் இல்லை. இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரே தகுதி சாதி மட்டும்தான்.

மாதச் சம்பளம் வழங்குவதுடன், அர்ச்சனைத்தட்டில் பக்தர்கள் போடுகின்ற பணத்தை எடுத்துக்கொள்ளவும் அர்ச்சகர்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறது தமிழக அரசு. இந்து அறநிலையத்துறையின் உள்துறைப் பணியாளர்களாக இருந்து கொண்டு, மாதம் பல ஆயிரங்களை வருவாயாக ஈட்டும் மதுரைக் கோயில் பட்டர்கள்தான், அறநிலையத்துறை கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறை மேற்கொள்ளலாமென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு ஆண்டு கடந்த பின்னரும், இந்தக் கணம் வரை தில்லைக் கோயில் தீட்சிதர்கள், நகைகளையும், கணக்குகளையும், நிர்வாகத்தையும் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கவில்லை. அரசும் அவர்கள் மீது நடவடக்கை எடுக்கவில்லை.

தில்லை பிராமணனும் தில்லி சிதம்பரமும்.

ஆபரேசன் கிரீன் ஹன்ட்டுக்கும் சிதம்பரத்துக்கும் இடையிலான தொடர்பு என்ன என்று கேட்டால், இந்தக் கேள்வியே அபத்தம் என்று நீங்கள் கருதக்கூடும். ‘கிரீன் ஹன்ட்’ என்றழைக்கப்படும் இந்த நக்சல் வேட்டையைத் வழி நடத்துபவரே உள்துறை அமைச்சர் சிதம்பரம்தான் என்பதை நாம் அறியாமல் இல்லை. நாம் இங்கே குறிப்பிடுவது உயர்திணைச் சிதம்பரமான உள்துறை அமைச்சரை அல்ல, அஃறிணைச் சிதம்பரமான தில்லையை அதாவது தீட்சிதர்களை!

பண்டங்களால் மனிதர்கள் ஆளப்படும் இந்தக் காலத்தில், அதிகாரத்தின் குறியீடுகளும் அஃறிணைப் பெயர்களால் அழைக்கப்படுவது ஆச்சரியத்துக்குரியதல்ல. தில்லியைப் போல தில்லையும் அதிகாரத்தின் ஒரு குறியீடு.

தில்லை நடராசர் கோயிலின் நிர்வாகத்தை அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்ததன் மூலம், தங்களது மத நம்பிக்கையிலும், மத உரிமையிலும் தமிழக அரசு அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்திருக்கிறது என்பது தீட்சிதர்களின் குற்றச்சாட்டு.

கோயிலுக்குச் சொந்தமான 2500 ஏக்கர் நிலம், இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை வரை பரவியிருக்கும் கோயிலின் சொத்துகள், இடுகாட்டுச் சாம்பல் பூசித் திருவோடேந்தித் தாண்டவமாடும் பெருமானின் தலைக்கு மேலே தகதகக்கும் பொன்னோடு, அவரது உடல் மீது வேயப்படும் ஆபரணங்கள் உள்ளிட்ட கிலோக் கணக்கிலான நகைகள், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள்… இன்ன பிற சிவன் சொத்துகள் அனைத்தும் தங்கள் குலத்துக்கே சொந்தம் என்றும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மேற்படி ‘அறங்கள்’ அத்தனைக்கும் தாங்களே ‘பரம்பரை அறங்காவலர்கள்’ என்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்கள் தீட்சிதர்கள்.

மேற்படி சொத்துக்களுக்குப் பாரம்பரிய உரிமை கொண்டாடும் தீட்சிதர்களிடம் அதற்கான பட்டாவோ, பத்திரமோ, பகவான் எழுதிக் கொடுத்த பவர் ஆஃப் அட்டார்னியோ கிடையாது. எனினும் இந்த லவுகீக உடைமைகள் அனைத்தும் தங்களுடையவை என்பது அவர்களுடைய ‘ஆன்மீக நம்பிக்கை’யாக இருக்கிறது.

நடராசனின் ஆக்ஞைப்படி 3000 தீட்சிதர்கள் கைலாசகிரியிலிருந்து கிளம்பி சிதம்பரம் வந்ததாகவும், ஊர் வந்து சேர்ந்தபின் தலையை எண்ணிப்பார்த்தபோது, 2999 தீட்சிதர்கள் மட்டுமே இருந்ததாகவும், “காணாமல் போன அந்த ஒரு தீட்சிதன் நானே” என்று நடராசப் பெருமானே அறிவித்ததாகவும் ஒரு கதையை தீட்சிதர்கள் சொல்கிறார்கள். இந்தக் கதைப்படி தில்லை நடராசனும் ஒரு தீட்சிதனாகி விடுகிறான். எனவே, தீட்சிதர்களால், தீட்சிதர்களுக்காகப் பராமரிக்கப்படும் தீட்சிதருடைய கோவிலே தில்லைக் கோயில் என்று ஆகிறது.

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள லவுகீக சொத்துக்களுக்கு மத நம்பிக்கையின் பெயரால் ஒருவர் உரிமை கோர முடியுமா, சட்டம் இதை அனுமதிக்குமா என்று நீங்கள் சிரிக்கலாம். ஒரு இந்தியக் குடிமகன் மதத்தை நம்புவதற்கும், கடைப்பிடிப்பதற்கும் உரிமை வழங்குகின்ற இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 25, 26 இன் கீழ்தான் இந்த பாரம்பரிய உரிமையை இத்தனை காலமும் தீட்சிதர்கள் நிலைநாட்டி வந்திருக்கிறார்கள். இப்போதும் அதே சட்டப்பிரிவுகளின் கீழ்தான் தமிழக அரசின் அதிகாரத்தை உச்சநீதிமன்றத்திலும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள். இது தில்லைச் சிதம்பரத்தின் கதை.

இனி தில்லி சிதம்பரத்திடம் வருவோம். சிதம்பரத்தின் காட்டு வேட்டைப் படைகள் கைப்பற்றத் துடிக்கும் முதல் இடம் ஒரிசாவிலுள்ள நியாம்கிரி மலை. இந்த நியாம்கிரி மலையின் பாரம்பரியக் காவலர்கள் டோங்கிரியா கோண்டு என்ற இனத்தைச் சார்ந்த பழங்குடி மக்கள். டோங்கர் என்ற ஒரியச் சொல்லுக்கு மலை என்று பொருள். அதுமட்டுமல்ல, இந்த வட்டாரத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் கற்களும்கூட கோண்டலைட் கற்கள் என்றே அழைக்கப்படுவது இம்மக்களுடைய பாரம்பரிய உரிமைக்கான ‘கல்வெட்டு’ ஆதாரம்.

எனினும் அம்மக்கள் தம்மை ‘ஜார்னியாக்கள்’ என்றே அழைத்துக் கொள்கிறார்கள். அந்த மலைகளில் நிறைந்திருக்கும் வற்றாத நீர்ச்சுனைகளே (ஜரனா) தங்கள் வாழ்வின் ஆதாரம் என்பதனால், தங்களை அந்த நீர்ச்சுனைகளின் புதல்வர்களாகவே அவர்கள் கருதிக் கொள்கிறார்கள்.

நியாம்கிரி மலை இம்மக்களுடைய உடலின் நீட்சி. தம் சொந்தக் கைகளுக்கும் கால்களுக்கும் யாரும் பத்திரப் பதிவு செய்து வைத்துக் கொள்வதில்லை என்பதால், தங்கள் மலைக்கும் இவர்கள் பட்டாவோ பத்திரமோ வைத்திருக்கவில்லை. அந்த மலை அவர்களால் பேணப்படும் உடல், அந்த மலைதான் அவர்களுக்குச் சோறு போடும் பொருள்.

தங்களது பொருளாயத உரிமைகளையும், ஆன்மீக உரிமைகளையும் பிரித்துப் பார்ப்பதற்கோ, இந்திய அரசியல் சட்டத்தின் எந்ததெந்தப் பிரிவுகள் எவற்றைப் பாதுகாக்கின்றன என்று தீட்சிதர்களைப் போல, விவரமாக தெரிந்து வைத்திருப்பதற்கோ அவர்களுக்கு அவசியம் ஏற்பட்டதில்லை. சொல்லப் போனால் அப்படிப்பட்ட ஒரு அரசியல் சட்டம்தான் தங்களைப் ‘பாதுகாத்துக் கொண்டிருக்கிறது’ என்ற உண்மையே அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் புல்டோசர்கள் நியாம்கிரி மலைக்கு விஜயம் செய்யும் வரை.

இது உலகமயமாக்கலின் காலமல்லவா? இம்மண்ணின் பூர்வகுடிகளை விடவும், வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்களுக்குத் தாய்நாட்டுப் பாசம் தலைவிரித்து ஆடும் காலமல்லவா? லண்டனில் குடியேறிய இந்தியரான அனில் அகர்வால் என்ற உலகப்பணக்காரரும் நியாம்கிரி மலையில் தனது கடவுளைத் தரிசித்து விட்டார்.

பருவமழையின் நீரைப் பருகி, கடற்பஞ்சு போல அதனைச் சேமித்து வைத்து, அச்சேமிப்பில் விளைந்த அடர்ந்த காடுகளை ஆகாயத்தில் கரங்களாய் நீட்டி, மேகத்தின் நீரை மண்ணில் இறக்கி, வற்றாத அருவிகளையும், சுனைகளையும் வழங்கிய வண்ணம் அந்த மலைக்குள் மறைந்திருக்கும் கடவுள் யாராக இருக்கும் என்ற அவரது ஆன்மீகத் தேடலுக்கு அறிவியல் அளித்த விடை பாக்சைட். இந்தக் கடவுளின் அறங்காவலராக உடனே பொறுப்பேற்க விரும்புகிறார் அகர்வால்.

தங்களது கடவுளான நியாம்கிரி மலைக்கு ஆடு கோழி அறுத்து பலியிடுவது டோங்கிரியா கோண்டு இன மக்களின் வழிபாட்டு முறை. கடவுளைத் தனக்குப் பலியிட்டுக் கொள்வது அகர்வாலின் வழிபாட்டு முறை. மலையின் மேற்பரப்பில் நிரம்பியிருக்கும் பாக்சைட் தாதுவுக்காக, அந்த 40 கி.மீ. நீள மலைத் தொடரின் தலையை மட்டும் அவர் சீவ விரும்புகிறார். பழங்குடி மக்களின் கடவுளரைத் தின்று செரிக்கும் இந்த வழிபாட்டு முறைக்குப் பொருத்தமான ஒரு பெயரை, அவர் தன்னுடைய நிறுவனத்திற்கு ஏற்கெனவே சூட்டியிருக்கிறார் ‘வேதாந்தா மைனிங் கார்ப்பரேசன்.’ இதனைத் தற்செயல் என்பதா, இறைவன் செயல் என்பதா?

வேதங்களின் அந்தமாக ஆதிசங்கரன் கண்டறிந்த தத்துவம் ‘அகம் பிரம்மாஸ்மி’ (நானே பிரம்மமாக இருக்கிறேன்). எனினும் நாம் காணும் இந்தப் பிரம்மம், எல்லைகள் கடந்த என்.ஆர்.ஐ பிரம்மம். மூலதனம் என்ற பெயரால் அழைக்கப்படும் பிரம்மம்.

‘பிரம்மம் சத்யம், ஜெகன் மித்யா’! “பிரம்மமே மட்டுமே உண்மையானது, உலகம் என்பது வெறும் மாயத்தோற்றம்” என்பது சங்கரனின் தத்துவ விளக்கம். இந்த விளக்கத்தை மூலதனத்தின் மொழிக்குப் பெயர்த்தோமாகில், நாம் காணும் புதிர்கள் யாவும் நொடியில் விலகுகின்றன. இல்லாத மாயைகளான வீடுகளின் மீது, எழுதிக்கொடுக்கப்பட்ட பத்திரங்களே சத்தியமாக மாறியதும், பின்னர் அந்த அசத்தியங்களைச் சத்தியமாக மாற்றும் முயற்சியில் இந்த மாய உலகம் இன்னமும் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதும் ஆதிசங்கரனின் தியரியை நிரூபிக்கவில்லையா என்ன?

நியாம்கிரியின் தலையில் நிறைந்திருக்கும் அடர்ந்த காடுகளை அழிக்க சுற்றுச்சூழல் சட்டம் தடையை ஏற்படுத்தியதால், உலகப்புகழ் பெற்ற அத்வைதிகளான ஜே.பி. மார்கன் நிறுவனத்தினரை வைத்து, நியாம்கிரியில் ‘இருக்கின்ற காட்டை இல்லை’ என்று எழுதி வாங்கினார் அகர்வால். உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை!

அடுத்த தடை, பழங்குடி மக்களின் நிலத்தை நேரடியாகப் பன்னாட்டு நிறுவனத்துக்கு எழுதிவைக்க அரசியல் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணை தோற்றுவித்த இடையூறு. அட்டவணையையே நீக்குவதற்கு அவகாசம் தேவையென்பதால், தனது இந்திய அவதாரமான ஸ்டெரிலைட் நிறுவனத்தின் பெயரில் சுரங்கம் தோண்டுவதாக அறிவித்தார் அகர்வால். ஆமோதித்தது உச்சநீதிமன்றம்.

காடுகளை அழித்து சுரங்கம் தோண்டினால், சூழலியல் பேரழிவு நிகழும் என்று உச்சநீதிமன்றம் நியமித்த வல்லுநர் குழுவே ஆட்சேபித்தது. “காடுதானே, புதிதாக வளர்த்துக் கொள்ளலாம்” என்று அந்த ஆட்சேபத்தையும் ஒதுக்கி விட்டு, 200 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாக்சைட் தாதுவைத் தன்னகத்தே வைத்திருக்கும் நியாம்கிரி மலையை அகர்வாலுக்கு வழங்குவதாக, ஆகஸ்டு 2008இல் தீர்ப்பளித்து விட்டது, கே.ஜி.பாலகிருஷ்ணன், அஜித் பசாயத், கபாடியா என்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு.

வனவிலங்குகளைப் பராமரிக்க 105 கோடி, பழங்குடி மக்களை முன்னேற்றுவதற்கு 12.2 கோடி, பழங்குடி மக்களுக்கான பள்ளி, மருத்துவமனைகளை பராமரிக்க அகர்வாலின் இலாபத்தில் 5 சதவீதம் நியாம்கிரியின் தலையைச் சீவும் பாவத்துக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ள பரிகாரம் இது. கொலைக்குற்றத்துக்குப் பரிகாரமாக கோயிலுக்கு நெய்விளக்கு! இவ்வளவு மலிவானதொரு பரிகாரத்தை ஒரு பார்ப்பனப் புரோகிதனின் வாயிலிருந்து கூட யாரும் வரவழைத்திருக்க முடியாது.

“அப்பழங்குடி மக்களால் கடவுளாக வழிபடப்படும் மலையைத் தகர்ப்பது, அவர்களது மத நம்பிக்கையையே தகர்ப்பதாகும்” என்ற வாதத்தை நீதிபதிகளின் அறிவியல் உணர்ச்சியால் அங்கீகரிக்க இயலவில்லை. வளர்ச்சித் திட்டத்துக்கும் வல்லரசாவதற்கும் தடையாக ஈசனே வந்து நிற்பினும், குற்றம் குற்றமே என்றுரைக்கும் நக்கீரன் பரம்பரையல்லவா, நம் நீதிபதிகள்!

இருப்பினும், அந்தக் கடவுள் எந்தக் கடவுள், அந்த நம்பிக்கை யாருடைய நம்பிக்கை என்பதைப் பொருத்தும் நாட்டாமையின் தீர்ப்பு வேறுபடுகிறது. மரகதமலையாக ஒளிரும் நியாம்கிரி மலையைக் காட்டிலும், யாருக்கும் உதவாத ராமேசுவரத்தின் மணல்திட்டுகளை உச்சநீதிமன்றம் புனிதமாகக் கருதியதென்றால் அதற்குக் காரணம், அந்த நம்பிக்கை ஸ்ரீராமபிரான் தொடர்பானது என்பதுதான். நியாம்கிரி தொடர்பான வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்ட பழங்குடி மக்களிடம் “உங்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்மந்தம்?” என்று கேட்டார்கள் நீதிபதிகள். ஆனால் இந்தக் கேள்வியை சிதம்பரம் வழக்கில் தலையிட்ட சுப்பிரமணியnசாமியிடம் நீதிபதிகள் கேட்கவில்லை.

அதுமட்டுமல்ல, புனிதமான கைலாசத்திலிருந்து புறப்பட்டு வந்ததாக தீட்சிதர்கள் சொல்லிவரும் கதையை எந்த நீதிமன்றமும் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தியதில்லை. வெள்ளைக்காரன் காலம் தொட்டு எல்லா நீதிமன்றங்களும் அந்தக் கதையைக் கேட்டுத்தான் தீட்சிதர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பெழுதி வருகின்றன. அதனால்தான் உச்சநீதிமன்றத்தின் தாழ்வாரங்களில் தில்லை தீட்சிதர்கள் நம்பிக்கையுடன் உலவுகிறார்கள். நியாம்கிரி பழங்குடிகளோ, தங்களிடம் ஒரு வார்த்தைகூடக் கேட்காமல் தங்கள் தலைவிதியைத் திருத்தி எழுதிவிட்ட, உச்சநீதிமன்றத்தின் வாயிலில் அமர்ந்து கண்ணீர் வடிக்கிறார்கள்.

வர்க்க நலனும் சாதி உணர்வும் மத உணர்வும் ஒன்றுகலக்கும் இந்த திரிவேணி சங்கமத்தின் சுழலில், மதநம்பிக்கை முடியும் இடம் எது, வர்க்கநலன் துவங்குமிடம் எது, சாதி உணர்வு ஊடாடும் இடம் எது என்று கண்டறிய முடியாமல், ஒன்று பிறிதொன்றாய்த் தோற்றம் காட்டி நம்மை மயக்குகிறது.

நியாம்கிரி வழக்கில் ஸ்டெரிலைட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பெழுதிய மூன்று நீதிபதிகளில் ஒருவரான கபாடியா, “நான் ஸ்டெரிலைட்டின் பங்குதாரர்” என்று வெளிப்படையாகவே அறிவித்துக் கொண்டார். இந்திராவோ தீட்சிதர்களின் சொத்துரிமையைக் காக்க எம்ஜியாரிடம் இரகசியமாகத் தலையிட்டார். தமிழ்பாடும் வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவான இடைக்காலத் தடையாணையை இரகசியமாக வழங்கிய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷா, தீட்சிதர்களுக்கும் தனக்குமிடையிலான உறவை சிதம்பர இரகசியமாகவே பேணினார். தீர்ப்புகள் கிடக்கட்டும், வாய்தாக்களின் பின்னாலும் வர்க்கநலன் உண்டு என்பதை சிதம்பரம் வழக்கின் 20 ஆண்டு உறக்கம், தனது குறட்டைச் சத்தத்தின் மூலம் நமக்குத் தெளிவுபடுத்தியது.

2004ஆம் ஆண்டு வரை வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ப.சிதம்பரம், பின்னர் நிதி அமைச்சராக அவதரித்து அனில் அகர்வாலுக்கு வேண்டியதைச் செய்து கொடுத்தார். 2009இல் அவரே உள்துறை அமைச்சராக உடுப்பணிந்து வந்து, இதோ கலிங்கத்தின் மீது படை நடத்திக் கொண்டிருக்கிறார்.

தீட்சிதர்களின் கைலாசக்கதை என்ற மத நம்பிக்கையை, தனி உடைமை என்ற ஆயிரம் கால் மண்டபம் தாங்கி நிற்கிறது. சிவன் சொத்தில் குலம் வளர்த்த செட்டியார்கள், பிள்ளைவாள்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் கட்டளைதாரர்கள், ஆதீனங்கள், ஆடல்வல்லானின் சந்நிதியில் மகளுக்கு அரங்கேற்றம் நடத்த வரும் அதிகாரிகள், அமைச்சர்கள் .. அனைவரும் இந்த நம்பிக்கையின் கால்கள். அதனால்தான் கைலாசக் கதையைக் கேட்டுக் கைகொட்டிச் சிரிக்காமல், “ஹரஹர மகாதேவா” என்று கன்னத்தில் போட்டுக் கொள்கின்றனர்.

ஆனால் டோங்கிரியா கோண்டு மக்களின் நம்பிக்கையையும் அவர்களது கடவுளையும் தாங்கி நிற்க அவர்களிடம் தனிஉடைமை இல்லை. அம்மக்கள் நியாம்கிரி மலையின் உண்மையான அறங்காவலர்களாக இருந்தார்கள். எனவேதான் ஒரு வெகுளிச் சிறுமியைத் தரையில் வீழ்த்தி, வல்லுறவு கொள்ளும் கயவனைப்போல, அந்தப் பழங்குடிப் பொதுவுடைமைச் சமூகத்தின் மீது, தனியுடைமையின் புல்டோசர்கள் வெறியுடன் படர்ந்து எறி இறங்குகின்றன. அவர்களுடைய கடவுளான நியாம்தேவனுக்கோ தூக்குதண்டனை விதித்து தீர்ப்பெழுதி விட்டது உச்ச நீதிமன்றம். தங்களுடைய கடவுளின் தலை சீவப்படுவதைக் காணமாட்டாமல் துடிக்கிறது மனித குலம் பெற்றெடுத்த அந்த மழலைச் சமுதாயம்!

‘ஆபரேசன் கிரீன் ஹன்ட்’ காட்டு வேட்டை என்று இதனைத் தமிழில் மொழிபெயர்க்கலாம். காடுகளை வேட்டையாடுவது, அவற்றுக்குக் காவலிருக்கும் பழங்குடிகளை வேட்டையாடுவது, அதற்குத் தடையாக இருக்கும் நக்சல்பாரிகளை வேட்டையாடுவது என்ற மூன்று நோக்கங்களையும் உள்ளடக்கிய இந்தச் சொற்றொடர், பாரதப் பாரம்பரியத்தில் ஊறி உப்பிய மூளையிலிருந்து மட்டுமே பிறந்திருக்க முடியும்.

தண்டகாரண்ய காடுகள் இந்த வேட்டையின் களமாகியிருப்பதும் வரலாற்றின் விதியே போலும்! போர்க்களம் தண்டகாரண்யத்தின் காடுகளெங்கும் விரிய, விரிய, இராமாயணக்கதைகள் நம் நினைவில் நிழலாடுகின்றன. கிறிஸ்துவுக்குப் பின், 20 நூற்றாண்டுகள் முன்னோக்கி நடந்து, இதோ, இராமாயண காலத்தை எட்டிவிட்டோம்.

அங்க, வங்க, கலிங்க, கோசல, விதேக, மகத மன்னர்களின் இரதங்கள் உருண்ட பாட்டைகளின் மீது டாடா, எஸ்ஸார், மிட்டல், அகர்வால், பிர்லா, அம்பானிகளின் புஷ்பக விமானங்கள் தரையிறங்குகின்றன. வசிட்டனும் விசுவாமித்திரனும் கௌதமனும் துர்வாசனும் யாக்ஞவல்கியனும் வனாந்திரங்களில் அமைத்திருந்த பர்ணசாலைகள் ‘விருந்தினர் மாளிகை’ என்ற பெயர் தாங்கி மினுக்குகின்றன. வாயிலில் காக்கிச் சீருடையும் கதாயுதமும் தரித்த அனுமன்கள் காவல் நிற்கின்றன.

“இலங்கைத் தீர்வுதான் நமக்கு வழிகாட்டி” என்று கூறி பக்திப் பரவசத்துடன் தெற்கு நோக்கி நமஸ்கரிக்கிறார் சட்டிஸ்கார் டி.ஜி.பி விசுவ பந்து தாஸ். இராம சைன்யம் என்ற பழைய பெயர் அரக்கர்களின் மனதில் அச்சத்தைத் தோற்றுவிப்பதில்லை என்பதால், பாம்புப்படை, கீரிப்படை, கருந்தேள்படை என்று குலமரபுச் சின்னங்கள் தாங்கிய படைகள் அணி வகுத்து நிற்கின்றன. சுக்ரீவனின் சேனைகூட, ‘சல்வா ஜுடும்’ என்று ராட்சஸ மொழியில் பெயர் மாற்றம் பெற்றுவிட்டது.

இராவண வதம் முடியும் வரை முடிசூட்டு விழாவுக்குக் காத்திருக்க முடியாதென முனகும் வீடணர்களுக்காக, விதவிதமான திரிசங்கு சொர்க்கங்களும் இந்திரப் பதவிகளும் ஆர்டரின் பேரில் தயாராகின்றன. போரில் அரக்கர் குலப் பெண்களையும், முதியவர்களையும், குழந்தைகளையும் கூட வேட்டையாட வேண்டியிருக்கும் என்பதால், அதற்கேற்ப தர்ம சாத்திரங்களைத் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறார்கள், சிதம்பரம், மன்மோகன், அலுவாலியா, புத்ததேவ், பட்நாயக் முதலான முனிபுங்கவர்கள்.

போர் முழக்கத்தையும் கீழ்க்கண்டவாறு திருத்தி அமைத்திருக்கிறார் திருவாளர் சிதம்பரம். இது தேவர் குலத்தைக் காக்க அசுரர்கள் மீது நடத்தப்படும் போர் அல்ல; அசுரர் குலத்தை முன்னேற்றும் நோக்கத்துக்காகவே அசுரர்கள் மீது தொடுக்கப்படும் போர். அவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காகப் பூமியைப் பறிக்கும் போர்; வேலையை வழங்குவதற்காகத் தொழிலைப் பறிக்கும் போர்; சோறு போடுவதற்காக வயல்களை அழிக்கும் போர்; பிரம்ம ஞானத்தை அறிமுகப்படுத்துவதற்காக அவர்களுடைய தெய்வங்களைச் சம்காரம் செய்யும் போர்.

இதோ, நியாம்கிரியின் புதையலின் மீது, அதன் மதிப்பே தெரியாத ஒரு கோண்டு இனப்பெண், சுள்ளிக் கட்டைச் சுமந்து நடக்கிறாள். அவளுடைய கருமைநிறக் கழுத்தில் கிடக்கும் பித்தனை வளையங்களில் வியர்வைத்துளி வழிந்து மின்னுகிறது. கைகளின் அசைவில் அவளது வளையல்கள் எழுப்பும் இரும்பின் ஒலி இசையாய் எழும்புகிறது. அந்தக் கானகத்தின் வண்ணங்கள் அனைத்தையும் வரித்துக் கொண்ட வண்ணத்துப் பூச்சியாய் அவள் ஆடை அசைகிறது.

“ராமா, அதோ.. அவள்தான். எடு வில்லை, பூட்டு பாணத்தை’’! என்று ஆணையிடுகிறான் விசுவாமித்திரன். “ஒரு பெண்ணைக் கொல்வதற்கா நான் வித்தை பயின்றேன்?” என்று தயங்கித் தடுமாறுகின்றன சிப்பாயின் விரல்கள். “இவள் பெண்ணல்ல, தாடகை! நம் தர்மத்தை அழிக்க வந்திருக்கும் அரக்கி! சுடு….!” என்று உறுமுகிறார் சிதம்பரம்.

சுள்ளிக்கட்டு சரிந்து சிதறுகிறது. மிரட்சியும் கோபமும் உறைந்த அவளது கருவிழிகள் நிலைகுத்தி நிற்கின்றன. வேதாந்தத்தின் வெடிமருந்துக் குச்சிகள் நியாம்தேவனின் மார்பைப் பிளந்து எறிகின்றன.

இந்தப் போர்க்களத்திலிருந்து வெகு தூரத்தில் அயோத்தி நகரின் அமைதிச் சூழலில் தவமிருந்து கொண்டிருக்கிறான் சம்பூகன் என்றொரு ‘சூத்திரன்’. அவன் கேட்க விழையும் வரம் என்னவாக இருக்கக் கூடும்? ஒரு துண்டு நிலம் அல்லது ஒரு வேலை அல்லது மூன்று வேளைச் சோறு அல்லது ஒரு வீடு?

சிதம்பரத்தின் காட்டு வேட்டையை சம்பூகன் அறியமாட்டான். ஆயுதம் ஏந்திப் போரிடும் அரக்கர்களின் மார்பை மட்டுமே அண்ணல் இராமபிரானின் பாணங்கள் குறிவைக்கும் என்ற அரண்மனைப் பொய்யைத் தவிர, இந்தப் போரைப்பற்றி வேறு எதையும் அவன் அறியமாட்டான். தாடகை வதம் அவனுக்குத் தெரியாது. வாலி வதமும் தெரியாது. தன் முன்னே தோன்றக்கூடிய இறைவனிடம், தான் கேட்க விழையும் வரங்களைத் தவிர, வேறு எதன் மீதும் கவனம் செலுத்த அவனது தவம் இடம் கொடுக்கவில்லை. “தவமிருத்தல் மட்டுமல்ல, வரம் கேட்பதும் குற்றமே” என்று தரும சாத்திரத்தின் ஷரத்துகள் திருத்தப்பட்டு விட்டதையும் அவன் அறியமாட்டான்.

நியாம்கிரியின் தலையைக் கொய்த வேதாந்தத்தின் கொடுவாள், உன் கழுத்தையும் குறிவைக்கும் என்பதைச் சம்பூகனுக்குப் புரிய வைத்தால் தவம் கலைத்து அவனும் வாளேந்தக்கூடும். ஏந்துவானாயின், இந்த முறை ஆரண்ய காண்டத்துடன் இராமாயணம் முடியவும்.

'ப்ளீஸ் எங்கள் புள்ளைக்குட்டிகளை நிம்மதியாக படிக்க விடுங்கள்.

இன்னிய தேதிக்கு தமிழ்கூறும் நல்லுலகை தங்கள் மீது இருக்கும் நெருக்கம் காரணமாகவே வசியம் செய்து கூறுபோட்டு விற்கும் எதேச்சதிகார வேலையை செவ்வென செய்து வருகிறது சன் டி.வி! பிரச்னை சுழலில் சிக்கித் தவிக்கும் தமிழ் சமூகத்தின் வரவேற்பறைக்குள் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்த சன் டி.வி‍யின் சாதாரண வீடியோ இதழ் 'தமிழ் மாலை' இன்னிக்கு கோடிகளைக் குவிக்கும் சன் நெட்வொர்க்.

தமிழ்நாட்டில் ரத்தம் குடித்தும் இன்னும் வேட்கையடங்காமல் இன்னும் இன்னும் ரத்தம் குடிக்கும் ஒரு ரத்தக் காட்டேறியாக கண்டம்விட்டு கண்டம் தாண்டி மொழிகளுக்கு அப்பாற்பட்டு வெற்றி (?)நடைபோட்டு வருகிறது. 5 நிமிடங்களுக்கு ஒரு தடவை தங்களின் சினிமாவை போணி பண்ண இவர்கள் போடும் அட்றாசிட்டி விளம்பரங்களில் தாரைத் தப்பட்டைகளோடு நம் மக்களின் காது ஜவ்வும் கிழிந்து தொங்குகின்றன. தியேட்டரில் தமிழ்நாடே பார்த்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளிவிடும் நோக்கத்தில் பொடதியில் அடித்து விரட்டாத குறையாக மொக்கைப் படத்திற்கே டிஜிட்டல் எஃபெக்ட் கொடுக்கும் சன் டி.வியின் மாஸ்டர் மைண்ட் கலாநிதி மாறன் அண்ணன் தன் ரூட்டை எப்போது மாற்றுவாரோ தெரியவில்லை.

போதாக்குறைக்கு மற்ற சேனல்களின் டி.ஆர்.பி‍யை கண்கொத்திப் பாம்பாக பார்த்து.. உடனே மூக்கு வியர்த்து உட்டாலக்கடி செய்துவிடுவதில் அண்ணன் சூப்பர் ரீமேக்கர்! உதாரணத்துக்கு 'ஆடவரெல்லாம் (அவுத்துப் போட்டு) ஆடவரலாம்!, டீலா நோ டீலா இன்ன பிற.. இந்த நிகழ்ச்சிகள் வெளிநாட்டு உள்நாட்டு பிரபல சேனல்களின் உட்டாலக்கடி என்பது தெரிந்திருந்தும் எம்மக்கள் உங்கள் ஜிகினாக்களில் மயங்கிப் பார்த்துத் தொலைக்கிறார்கள்.

வெளுத்துத் தடிச்ச கலாநிதி மாறனண்ணா! உங்களுக்கு ஒரு சில வார்த்தைகள்... கோடானுகோடி மக்கள் பார்க்கும் சேனல் என்ற இறுமாப்பில் குப்பையான உங்கள் படங்களுக்கான டிரெய்லரை பார்க்கும் கட்டாயத்துக்கு ஏன் எங்களைத் தள்ளுகிறீர்கள்? கேட்க எவன் இருக்கான் என்ற இறுமாப்பு தானே.. ஒரே விளம்பரத்தைப் பார்த்து குழந்தைகள் அலறுகின்றன. தாய்மார்கள் எரிச்சலாகிறார்கள்.. என்போன்ற சாமானியர்கள் கெட்டவார்த்தைகளில் உங்களை அர்ச்சிக்கிறார்கள். உங்களுக்கு கேட்கவில்லையா? ஆளில்லாத ஊருக்கு இழுப்பைப்பூவான நீங்கள், உங்கள் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் மக்கள் சேனலை மாற்றுவார்கள்.

ஏனென்றால் மாற்றம் என்ற சொல் மட்டுமே மாறாதது. ஜாக்கிரதை! படம் நல்லா இருந்தா தியேட்டருக்கு நிச்சயம் போய் பார்ப்பான் நம் தமிழன். பருத்தி வீரன், சுப்ரமண்யபுரம், பசங்க, நாடோடி போன்ற படங்களை உங்கள் பன் டி.வி பார்த்தா நம் தமிழன் பார்த்தான்? இனிமேலும் குப்பைகளை அள்ளி இரைக்காதீர்! விட்டுவிடுங்கள் தமிழர்கள் பாவம்!

உங்கள் புள்ளகுட்டிகளை ஃபாரினில் படிக்க வைப்பீர்கள் அதனால் தேவர் மகன் டயலாக் உங்களுக்கு உதவாது.'ப்ளீஸ் எங்கள் புள்ளைக்குட்டிகளை நிம்மதியாக படிக்க விடுங்கள்.

திங்கள், 8 பிப்ரவரி, 2010

காமத்துக்கு மட்டும் உடைதேரியப்பட்ட சாதி கொடுமை.


பிராமணர்கள் என்றால் யார்? எக்காரணம் கொண்டும் சரீரப் பிராயசைப் படாமலும் எவ்விதத்திலும் நஷ்டமோ, கவலையோ அடைய வேண்டிய அவசியமில்லாமலும் இருக்கத்தக்க நிலையில் இருந்து கொண்டு தங்கள் சமூகத்தைத் தவிர மற்றெல்லா மக்களுடையவும் உழைப்பால் திருப்தியால் உயிர் வாழ்க்கை வாழ்பவர்கள்.

சமீப காலமாக காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதனின் புகழ் தமிழ்நாட்டில் கொடிக்கட்டி பறக்கிறது. இளசுகளின் அலைபேசியில் குருக்களின் கருவறை லீலைகள் படங்கள் காட்டுத் தீயாய் பரவி வருகின்றன. இதற்கு முன்னால் காஞ்சிபுரம் ஜெயேந்திரர் மூலமாக உலகப் புகழ் அடைந்ததை நாம் அனைவரும் அறிவோம். அந்த வரிசையில் தற்போது தேவநாதன்.இது முழுக்க முழுக்க பார்ப்பனர்களும், இந்து மதத்தின் சீரழிவும் சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலும் இந்துமத புனைவுகளால் கட்டமைக்கப்பட்ட சாதீய இழிவுகளால் பாதிக்கப்பட்டோர் மகிழ சில சங்கதிகள் இதில் உண்டு.

உண்மையில் நாமெல்லாம் தேவநாதனை ஒரு வகையில் பாராட்டத்தான் வேண்டும். ஆலய கருவறை நுழைவுப் போராட்டம் என்பதனை தாழ்த்தப்பட்ட மக்கள் வெகுநாட்களாக ஒரு லட்சிய இலக்காக வைத்து போராடிக் கொண்டிருக்கும் வேளையில், எவ்வித ஆர்பார்ட்டமும் இல்லாமல் சாதிகளை கடந்து பெண்களை கருவறைக்குள் அழைத்து சென்றிருக்கிறான் அவன். மேலும் அவர்கள் வணங்குவது கடவுளை அல்ல வெறும் கற்சிலைதான் என்பதை நிருபித்திருக்கிறான்.

தேவநாதன் சாதிகளை கடந்த மனிதனாக, கல்லை கல்லாக மட்டும் உணர்கிற பகுத்தறிவு உடையவனாக தெரிகிறான். தாழ்த்தபட்டவர்களுக்கு எதிராக எது நடந்தாலும் குதூகலமாய் கொக்கரித்து செருமாந்த செறுக்கோடு செய்தி வெளியிடுகிற பார்ப்பன நாளேடு தினமலர் பார்ப்பனக் குருக்கள் தேவநாதனை பூசாரி தேவநாதன் என வில்லங்கமாய் விளித்து செய்தி வெளியிட்டது. குருக்கள் என்று வெளியிட்டால் அது பார்ப்பான் என பட்டவர்த்தனமாய் தெரிந்து விடும் என்பதால், சூத்திரப் பெயரான பூசாரி என்ற பட்டத்தோடு செய்தி வெளியிட்டது. இது தான் தின மலத்தின் பத்திரிகை விபச்சாரம்.

தேவநாதன் மிகவும் பட்டவர்த்தமனமாக, வீடியோ ஆதாரங்களோடு நடத்திய கருவறை காம லீலைகள் பார்ப்பன இந்துத்வாவின் புனித முகத்தினை சிதைத்து இருக்கிறது. சாதீய கட்டமைப்புகள், கோவில், புனித பூசைகள் என திட்டமிட்டு பார்ப்பனீயத்தால் கட்டமைக்கப்பட்ட இந்துத்வா கோட்டையில் தேவநாதன் மிகப் பெரிய விரிசல். தேவநாதன் தான் முதன் முதல் பார்ப்பன சீரழிவு அல்ல. இதற்கு முன்னால் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் கஞ்சா வழக்கு உட்பட ,அனுராதா ரமணன், சொர்ணமால்யா என தொடர்ந்த காமக் குற்றச்சாட்டுகளில் காஞ்சி மடம் சிக்கிய போது பார்ப்பன உலகம் அதிர்ந்தது.

இதில் என்ன மிகவும் விசேசம் என்றால் வழக்கு தொடரப்பட்டது தன்னை சட்டமன்றத்தில் பாப்பாத்தி என வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட ஜெயலலிதா ஆட்சியில். சம்பந்தப்பட்ட ஒரு சிலரை தவிர அனுராதா ரமணன் ,சொர்ணமால்யா என அனைவரும் பார்ப்பனர்களே. இப்போது தேவநாதன் காஞ்சி மட சீரழிவின் நீட்சியாக திகழ்கிறான்.

ஒரு மனிதன் பூணூல், உச்சிக் குடுமி ,பஞ்சகஜ வேட்டி என அனைத்து விதமான பார்ப்பன சாதி மேலாண்மை சின்னங்களோடு பல ஆயிரம் ஆண்டுகளாய் புனித பிம்பமாய் பார்ப்பனர் திட்டமிட்டு நிறுவியுள்ள சாதீய கட்டமைப்புகளின் உச்ச சின்னமான கோவிலில், பிற சாதியினர் நுழைய கூட அனுமதி இல்லாத கருவறையை மூன்றாம் தர விபச்சார விடுதியாக பயன்படுத்தியது ஒழுக்கமும், தூய்மையும் பிறப்பின் அடிப்படையில் விளைவதல்ல என்பதனை நெற்றிப் பொட்டில் அறைந்து சொல்கிறது.

பார்ப்பான் உயிர் கடவுள் பொம்மையிலும், கல்லிலும் தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானை பிராமணன் என்றோ, சாமி என்றோ , மேல் சாதியான் என்றோ எவனும் மதிக்க மாட்டான்- தந்தை பெரியார் (3-12-1971 விடுதலையில்..)

பார்ப்பன, இந்து மதத்தின் உயிர் சின்னமான கடவுளர்களின் சிலைகளுக்கு முன்னால் தான் தேவநாதன் தன் லீலைகளை நடத்தி இருக்கிறான். கல்லை எடுத்து, கற்றொளி கொண்டு சிலை வடித்து, சிற்பம் செதுக்கி, ஆலயம் அமைத்து, கருவறை கட்டி..அந்த சிலையையும் தூக்கி தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே கொண்டு போய் வைத்தால்..ஒரு சொம்பு தண்ணீரை கொண்டு குடமுழுக்கு நடத்தி கோவில் கட்டிய அந்த தாழ்த்தப்பட்ட மக்களை வெளியே நிற்க வைத்து அழகு பார்த்தது பார்ப்பனீய ஹிந்துத்துவா,

ஆனால் இதையெல்லாம் உணராத தாழ்த்தப்பட்ட சமூகம் கண்ணீர் மல்க கடவுள் பக்தியோடு கைக்கூப்பி நின்று கையேந்தி வரும் பார்ப்பான் தட்டில் காசு போட்டு கொண்டிருக்கிறது.
தேவநாதன் ஒருவன் அல்ல. இவனைப் போல நாட்டில் ஏராளமான குருக்கள், சாமியார் வகையறாக்கள் ஏராளம் உள்ளனர். இப்படி கேடு கெட்டவர்கள் கையால் தான் திருநீறு பூசிக் கொண்டு ,தாழ்த்தப்பட்ட சமூகம் அலகு குத்தி காவடி தூக்கிக் கொண்டு திரிகிறது.

தீண்டதகாதவன் என்ற ஒற்றை காரணத்தினால் நந்தனை கோவிலுக்குள் அழைக்காத கடவுள் நந்தியை நகர்த்தி வைத்து தரிசனம் காட்டினாராம். நந்தியை நகர்த்த முடிந்த கடவுளுக்கு கூட சாதீயத்தினை உடைத்து நந்தனை கோவிலுக்குள் அழைக்க முடியவில்லை. கடவுள் கூட செய்ய முடியாத பிற சாதீயினரை கருவறைக்குள் நுழைய வைத்து தேவநாதன் சரித்திரம் படைத்திருக்கிறான்.

சிந்திக்க: இதில் நாம் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த சாதிய கொடுமையில் இருந்து நீங்க அம்பேத்கார் வழியில் நாமும் ஹிந்துமதம் துறப்போம். நமக்கு எல்லா உரிமைகளும் கிடைத்து சமத்துவத்துடன் வாழ, சாதி கொடுமை முற்றிலும் ஒழிய ஒரு நன்மருந்தாக இஸ்லாம்தான் நம் கண்ணுக்கு தெரிகிறது.இஸ்லாத்தில் இனனைந்த நம் தாழ்த்தபட்ட சமூக மக்கள் அந்த இஸ்லாம் என்னும் கடலில் சாதி ஒழிந்து இரண்டற கலந்து விட்டதை நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தைச்சார்ந்த 19 வயதான பெண் கற்பழித்து எரித்து கொலை.

பர்வானி(மத்தியபிரதேசம்):சிவசேனாவின் மாவட்ட முன்னாள் தலைவனான அனில் துபை என்பவன் மிஷனரி ஸ்கூலில் ஆசிரியையாக பணியாற்றிய பழங்குடி இனத்தைச்சார்ந்த 19 வயதான பெண்னை பஸ்ஸிலிருந்து இறங்கும்பொழுது கடத்திச்சென்று இரண்டு தினங்களாக வன்புணர்ச்சிச்செய்து பின்னர் அப்பெண்னை தீவைத்துக் கொளுத்தியுள்ளான்.

இதனால் உடலின் 80 சதவீதமும் எரிந்துப்போன அப்பெண்மணி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்

தாழ்த்தப்பட்டவர்கள் என்ற காரணத்தால் விமான பணிப்பெண்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படாத பெண்கள்.

சென்னை:விமானப் பணிப்பெண் வேலைக்காக அரசு சார்பில் பயிற்சி பெற்ற ஆதிதிராவிடப் பெண்களில் ஒருவர் கூட நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதற்குக் கூறப்பட்ட காரணம் அவர்களுக்குப் போதிய ஆங்கில அறிவு இல்லையாம்.

தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு விமான பணிப் பெண் (ஏர் ஹோஸ்டஸ்) பயிற்சி அளிக்கும் திட்டம் கடந்த 2006ம் ஆண்டு தொடங்கியது.

இதுவரை மொத்தம் சுமார் 200 பெண்கள் பயிற்சி பெற்றுள்ள இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு மொத்தம் ரூ.1 கோடியை அரசு செலவிட்டது. தனியார் ஏர்ஹோஸ்டஸ் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆனால், இப்பயிற்சி முடித்த பெண்கள் ஒருவருக்கும் இதுவரை விமானப் பணிப்பெண் வேலை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பயிற்சி பெற்ற பெண்கள் இதுபற்றி கூறுகையில், 'நாங்கள் கறுப்பாக, குட்டையாக இருக்கிறோம். அழகாக இல்லை. எனவேதான் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அப்படியானால் எங்களை ஏன் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்தார்கள்' என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

ஆனால் பயிற்சி பெற்ற பெண்களுக்கு தகவல் தொடர்பில் எதிர்பார்த்த அளவுக்கு திறன் இல்லாத காரணத்தாலேயே வேலை கிடைக்கவில்லை என தனியார் விமான சேவை நிறுவன அதிகாரிகள் காரணம் கூறுகிறார்கள்.

தீவிரவாத சிவசேனையின் செல்வாக்கு மும்பையில் குறைந்துவருகிறது.


மும்பை: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளார் ராகுல் காந்தியின் செயலால் அவருக்கு மும்பை மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது அதேசமயம் சிவசேனா மற்றும் நவநிர்மான் சேனா ஆகிய மொழி ரீதியிலான தீவிரவாத அமைப்புகளுக்கு பலத்த பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது.

தீவிரவாதி பால்தாக்கரேயின் மராட்டியம் மராட்டியர்கள் என்ற கூக்குரலுக்கு பதிலளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் மும்பை எல்லோருக்கும் சொந்தமானது என்றார் மேலும் அவர் சிவசேனாவின் மிரட்டலை புறக்கணித்து நேற்று மும்பையில் சர்வசாதாரணமாக சுற்றுப்பயணத்தை மேற்க்கொண்டார். இது சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா ஆகியவற்ருக்கு பெரும் சரிவை ஏற்ப்படுத்தியது.

மும்பைக்கு ஹெலிகாப்டரில் வந்த ராகுல் காந்தி நான்கரை மணிநேரம் மும்பையில் சுற்றினார் அவருக்கும் அவருடைய நிகழ்ச்சிக்கும் எந்த இடத்திலும் பாதிப்பு ஏற்படவில்லை.

விலே பார்லே என்ற புறநகர்ப் பகுதியிலிருந்து கட்கோபர் வரைக்கும் மின்சார ரயிலில் பயணித்ததும், மராத்தி அரசியலின் மையப் புள்ளியாக கருதப்படும் தாதருக்கு அவர் சென்றதும் சிவசேனா சரிந்து போனதற்க்கு காரணமாக அமைந்தது.

சனி, 6 பிப்ரவரி, 2010

சிவசேனை vs பாரதிய ஜனதா ஒரு கேவலப்பட்ட கூட்டணி.


மும்பை மராத்தியர்களுக்கே என்ற சிவசேனாவின் கருத்துகளுடன் பாரதீய ஜனதா கட்சி வேறுபடுகிறது என்றும் ஆனால் சிவசேனாவுடனான கூட்டணி தொடரும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

கட்சியின் கொள்கையை எங்கள் கட்சித் தலைவர் நிதின் கட்காரி தெளிவாகக் கூறிவிட்டார். ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்துப் பகுதிகளும் ஒன்றே என்று என்பதுதான் கட்சியின் கொள்கை. மொழி, ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரும் இந்தியரே என்று பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு கூறினார்.

இந்தியர்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று, குடியேறி, சட்டம் அனுமதிக்கும் எச்செயலையும் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.

குறிப்பிட்ட இந்தப் பிரச்சனையில் எங்கள் கட்சியின் நிலையை கட்சித் தலைவர் நிதின் கட்காரி ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். இந்தப் பிரச்சனையில் எங்களுக்கும் சிவசேனாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு உள்ளது என்றும் வெங்கையா நாயுடு கூறினார்.

வியாழன், 4 பிப்ரவரி, 2010

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை மிரட்டும் சிவசேனை மொழி வெறியர்கள்.

லண்டன்: நான் வாபஸ் பெற வேண்டும் என்று சொல்பவர்களிடம் நான் கேட்கும் ஒரே கேள்வி- எதை வாபஸ் பெறச் சொல்கிறீர்கள்?, நான் இந்தியன் என்று சொன்னதையா? என்று கோபமாக கேட்டுள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான்.

பால்தாக்ரே மற்றும் சிவசேனை தீவிரவாதிகள் வெறி பிடித்த வேங்கை போல கைக்குக் கிடைத்தவர்களையெல்லாம் கடித்துக் குதறிக் கொண்டு இருக்கின்றனர். இப்போது ஷாருக் கானை குறி வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் தாக்கரே அன் கோவினர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் சேர்த்திருக்க வேண்டும் என்று சொன்னார் என்பதற்காக அவரை சரமாரியாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஷாருக் கான் நடித்த மை நேம் இஸ் கான் படத்தை மும்பையில் திரையிடக் கூடாது என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குப் பயந்து தியேட்டர்காரர்கள் பின்வாங்கத் தொடங்கியுள்ளனர். தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தாக்கரேக்கள் ஷாருக் கானுக்கு கெடு விதித்துள்ளனர்.

இந்த நிலையில் லண்டனில் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற ஷாருக் கான் மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார்.அவர் கூறுகையில், பாகிஸ்தான் வீரர்களுக்காக நான் பேசியதை வைத்து எனது தேசப்பற்று குறித்து சிவசேனாவினர் கேள்வி கேட்பது மிகவும் விரக்தியாக உள்ளது. கோபத்தை ஏற்படுத்துகிறது.

எதை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்கிறார்கள். நான் இந்தியன் என்று சொன்னதையா அல்லது எனது நாட்டுக்கு யாரும் வரக் கூடாது என்று சொல்லச் சொல்கிறார்களா?. எனது தந்தை இந்த தேசத்திற்காக போராடிய ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி. அவர் எனக்கு அப்படி எதையும் சொல்லித் தரவில்லையே.

எனது நாட்டில் நடைபெறும் ஒரு மிகப் பெரிய நிகழ்ச்சியைக் காணவும், அதில் பங்கேற்கவும் அனைத்து மக்களும் வர வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். அதைத்தான் சொன்னேன். இந்தியா நமது நாடு, இந்தியர்கள் அனைவரும் நமது சகோதரர்கள் என்று 3ம் வகுப்பு முதலே பள்ளிக் கூடத்தில் நாம் அனைவரும் படித்தோம். நானும் படித்தேன். இன்றும் கூட அப்படித்தான் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். நான் மாஸ்டர் டிகிரி முடிக்கும் வரையிலும் கூட அப்படித்தான் புத்தகங்களில் இருந்தது. இதைத்தான் எனது ஆசிரியர்களும், பெற்றோர்களும், எனது தாயும் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்.

ஆனால் இன்று நடப்பவற்றைப் பார்த்தால் அவை எல்லாம் தவறு என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.உண்மையில் இப்போது என்ன பிரச்சினை என்றே புரியவில்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே புரியவில்லை. நம் நாட்டுக்கு யார் வந்தாலும் திறந்த மனதுடன், இரு கைகளையும் கூப்பி வரவேற்பதுதானே நமது பண்பாடு என்று சொல்லிக் கொடுத்தனர்.

அது கலைத் துறையாக இருந்தாலும் சரி, கலாச்சாரம், விளையாட்டு, அரசியல், எந்தத் துறையாக இருந்தாலும் சரி, அப்படித்தானே சொல்லிக் கொடுத்தனர். அவையெல்லாம் தவறா?.இந்த நாட்டில் வசிக்கும் அனைவருக்கும், அவரவர் விருப்பபடி பேசும், செயல்படும் சுதந்திரம் உண்டு. அதனால்தான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்த நாடு திகழ்கிறது.

ஆனால் நான் பேசியது எனது வர்த்தக பங்குதார்களை பாதிக்கிறது என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. நான் பேசியதால் எனது படத்திற்குப் பாதிப்பு வந்திருப்பது வருத்தம் தருகிறது.எனது கருத்தில் அவர்களுக்கு மாறுபாடு இருக்குமானால் அவர்கள் என்னைத் தாராளமாக அணுகலாமே, அதை விடுத்து படத்தைத் தடுப்போம் என்பது எப்படி சரியாகும்.

இந்தப் படத்தில் நான் மட்டும் இல்லையே. கஜோல் இருக்கிறார், கரண் (ஜோஹர்) இருக்கிறார். 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உழைப்பும், அவர்களின் வாழ்க்கையும் கூட இருக்கிறதே. இந்த மிரட்டலுக்கு நான் நிச்சயம் பணிய மாட்டேன். என்னால் கரண் ஜோஹருக்கும், கஜோலுக்கும் ஏற்பட்டுள்ள சிரமத்திற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் தொடர்பான அனைத்து வர்த்தக பங்குதாரர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை நான் வேதனையுடன் பார்க்கிறேன் என்றார் ஷாருக். பிப்ரவரி 12ம் தேதி இப்படம் உலகெங்கும் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தீவிரவாதி தாக்கரேக்கள் மூலம் மும்பையில் சிக்கல் வந்துள்ளது.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

இந்தி பேசும் 'கமாண்டோக்கள்' வேண்டும்- இந்திக்காரர்கள் கூடாதா? தாக்கரேக்களுக்கு ராகுல் கண்டனம்.

வட இந்தியர்களை தொடர்ந்து குறி வைத்து கடித்துக் கொண்டிருக்கும் பால் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோரை நேற்று கடுமையாக கண்டித்துப் பேசினார் ராகுல் காந்தி.

பீகார் மாநிலம், புத்தகயா வந்த அவர் அங்கு தலித் இளைஞர் தலைமைத்துவ மேம்பாட்டு மாநாட்டில் கலந்து கொண்டார்.

அப்போது பேசுகையில், மகாராஷ்டிராவில், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, பீகாரிகளையும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களை மகாராஷ்டிராவை விட்டும், மும்பையையும் விட்டும் தூக்கி எறிய வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், மும்பையைத் தீவரவாதிகள் தாக்கியபோது அவர்களைக் கொன்றது யார்? அவர்கள் அனைவரும் பீகாரிகள், உ.பியைச் சேர்ந்தவர்கள் மற்றும் நாட்டின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அப்போது பீகாரிகளைத் தூக்கி எறிய வேண்டும் என்று அவர்கள் ஏன் சொல்லவில்லை?.

இந்தி பேசும் கமாண்டோக்கள் இருக்கலாம், ஆனால் இந்தி பேசுவோர் இருக்கக் கூடாதா? தீவிரவாதிகளுடன் சண்டை போடவாவது பீகாரிகள் அங்கேயே இருக்கட்டுமே என்றார் ராகுல் காந்தி.