திங்கள், 28 நவம்பர், 2011

நல்லிணக்கம் குறித்து மஹந்த் ஆச்சார்ய சத்தியோந்திர தாஸ் மகராஜ்!

NOV 28,புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் முன்வைக்கும் லட்சியம் நிறைவேறியே தீரும் என ராமஜென்மபூமி கோயில் முக்கிய புரோகிதர் மஹந்த் ஆச்சார்ய சத்தியோந்திர தாஸ் மகராஜ் கூறியுள்ளார்.


டெல்லியில் நேற்று நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியதாவது: ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே போல நடத்தப்படவேண்டும். அவர்கள் ஒன்றிணைந்து நிற்கவேண்டும். அப்பொழுதுதான் நாட்டில் மதநல்லிணக்கம் ஏற்படும். தலித்துகளும், முஸ்லிம்களும் உள்பட அனைவரும் ஒன்றாக நடத்தப்படவேண்டும். எல்லோருக்கும் நீதி கிடைக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1 கருத்து: