ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

தீவிரவாத சிவசேனையின் செல்வாக்கு மும்பையில் குறைந்துவருகிறது.


மும்பை: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளார் ராகுல் காந்தியின் செயலால் அவருக்கு மும்பை மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது அதேசமயம் சிவசேனா மற்றும் நவநிர்மான் சேனா ஆகிய மொழி ரீதியிலான தீவிரவாத அமைப்புகளுக்கு பலத்த பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது.

தீவிரவாதி பால்தாக்கரேயின் மராட்டியம் மராட்டியர்கள் என்ற கூக்குரலுக்கு பதிலளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் மும்பை எல்லோருக்கும் சொந்தமானது என்றார் மேலும் அவர் சிவசேனாவின் மிரட்டலை புறக்கணித்து நேற்று மும்பையில் சர்வசாதாரணமாக சுற்றுப்பயணத்தை மேற்க்கொண்டார். இது சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா ஆகியவற்ருக்கு பெரும் சரிவை ஏற்ப்படுத்தியது.

மும்பைக்கு ஹெலிகாப்டரில் வந்த ராகுல் காந்தி நான்கரை மணிநேரம் மும்பையில் சுற்றினார் அவருக்கும் அவருடைய நிகழ்ச்சிக்கும் எந்த இடத்திலும் பாதிப்பு ஏற்படவில்லை.

விலே பார்லே என்ற புறநகர்ப் பகுதியிலிருந்து கட்கோபர் வரைக்கும் மின்சார ரயிலில் பயணித்ததும், மராத்தி அரசியலின் மையப் புள்ளியாக கருதப்படும் தாதருக்கு அவர் சென்றதும் சிவசேனா சரிந்து போனதற்க்கு காரணமாக அமைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக