சனி, 6 பிப்ரவரி, 2010

சிவசேனை vs பாரதிய ஜனதா ஒரு கேவலப்பட்ட கூட்டணி.


மும்பை மராத்தியர்களுக்கே என்ற சிவசேனாவின் கருத்துகளுடன் பாரதீய ஜனதா கட்சி வேறுபடுகிறது என்றும் ஆனால் சிவசேனாவுடனான கூட்டணி தொடரும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

கட்சியின் கொள்கையை எங்கள் கட்சித் தலைவர் நிதின் கட்காரி தெளிவாகக் கூறிவிட்டார். ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்துப் பகுதிகளும் ஒன்றே என்று என்பதுதான் கட்சியின் கொள்கை. மொழி, ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரும் இந்தியரே என்று பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு கூறினார்.

இந்தியர்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று, குடியேறி, சட்டம் அனுமதிக்கும் எச்செயலையும் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.

குறிப்பிட்ட இந்தப் பிரச்சனையில் எங்கள் கட்சியின் நிலையை கட்சித் தலைவர் நிதின் கட்காரி ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். இந்தப் பிரச்சனையில் எங்களுக்கும் சிவசேனாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு உள்ளது என்றும் வெங்கையா நாயுடு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக