ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

தாழ்த்தப்பட்டவர்கள் என்ற காரணத்தால் விமான பணிப்பெண்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படாத பெண்கள்.

சென்னை:விமானப் பணிப்பெண் வேலைக்காக அரசு சார்பில் பயிற்சி பெற்ற ஆதிதிராவிடப் பெண்களில் ஒருவர் கூட நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதற்குக் கூறப்பட்ட காரணம் அவர்களுக்குப் போதிய ஆங்கில அறிவு இல்லையாம்.

தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு விமான பணிப் பெண் (ஏர் ஹோஸ்டஸ்) பயிற்சி அளிக்கும் திட்டம் கடந்த 2006ம் ஆண்டு தொடங்கியது.

இதுவரை மொத்தம் சுமார் 200 பெண்கள் பயிற்சி பெற்றுள்ள இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு மொத்தம் ரூ.1 கோடியை அரசு செலவிட்டது. தனியார் ஏர்ஹோஸ்டஸ் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆனால், இப்பயிற்சி முடித்த பெண்கள் ஒருவருக்கும் இதுவரை விமானப் பணிப்பெண் வேலை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பயிற்சி பெற்ற பெண்கள் இதுபற்றி கூறுகையில், 'நாங்கள் கறுப்பாக, குட்டையாக இருக்கிறோம். அழகாக இல்லை. எனவேதான் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அப்படியானால் எங்களை ஏன் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்தார்கள்' என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

ஆனால் பயிற்சி பெற்ற பெண்களுக்கு தகவல் தொடர்பில் எதிர்பார்த்த அளவுக்கு திறன் இல்லாத காரணத்தாலேயே வேலை கிடைக்கவில்லை என தனியார் விமான சேவை நிறுவன அதிகாரிகள் காரணம் கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக