சனி, 20 பிப்ரவரி, 2010

என்று தனியும் இந்த ஜாதிக்கொடுமை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்ற விகிதத்தில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு 8-வது இடத்தில் இருப்பதாகவும், பொதுவாக தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையைப் பொறுத்தவரை தென் மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் என் எம் காம்ப்ளே வியாழக் கிழமை (18-02-2010) அன்று சென்னையில் தெரிவித்தார்.

இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு எதிரான குற்றங்களைப் பொறுத்தவரை உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், மத்தியப் பிரதேசம் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக அவர் கூறினார். மாநில அளவில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய காம்ப்ளேயும், ஆணையத்தின் உறுப்பினர் மகேந்திர போத்தும் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்பான ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்தில் இதற்கென சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த வழக்குகளை விரைந்து தீர்ப்பதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சிந்திக்க: தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் கருதி எத்தனை சட்டங்கள் போட்டாலும் அத்தனையும் ஏட்டளவில்தான். தாழ்த்த பட்ட மக்களின் ஒரே விடியல் இஸ்லாம்தான்.இந்த ஜாதிய கொடுமை ஹிந்து மதத்தின் பெயரால் அவர்களுக்கு வந்தது. ஹிந்து மேல்ஜாதி பிராமணர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் ஹிந்துமதத்தின் பெயரால் ஒரு தீட்டை ஏற்படுத்தி இருகிறார்கள்.எனவே தாழ்த்தபட்ட மக்கள் என்று ஹிந்துமதத்தை கைகழுவி இஸ்லாத்திற்குள் நுழைகிறார்களோ அன்றைய நொடியில் அவர்களது தீட்டு போகி அவர்கள் புது மனிதர்களாக பிறவி எடுப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக